'மத கலவரத்தை தூண்டும் நீதிமன்றம்' எல்லை மீறும் பாஜக தலைவர்கள்.. நீதிமன்றத்திற்கு மிரட்டல்?

உச்ச நீதிமன்றம் சமீபத்தில் தீர்ப்பு வழங்கியதற்கு எதிராக பல பாஜக தலைவர்கள் சர்ச்சைக்குரிய வகையில் பேசி வருகின்றனர். எல்லா முடிவுகளையும் உச்ச நீதிமன்றமே எடுத்தால் நாடாளுமன்றத்தை இழுத்து மூட வேண்டியதுதான் என பாஜக எம்.பி. நிஷிகாந்த் துபே தெரிவித்திருந்தார். இதை கண்டித்த எம்பி ஒவைசி, "நீதிமன்றங்களுக்கு மிரட்டல் விடுப்பவர்களை மோடி தடுத்து நிறுத்த வேண்டும்" என கூறியுள்ளார்.

Continues below advertisement

சட்டமன்றத்தில் நிறைவேற்றப்படும் மசோதாக்களுக்கு 3 மாதங்களுக்குள் ஒப்புதல் வழங்கும் வகையில் உச்ச நீதிமன்றம் சமீபத்தில் தீர்ப்பு வழங்கியதற்கு எதிராக பல பாஜக தலைவர்கள் சர்ச்சைக்குரிய வகையில் பேசி வருகின்றனர். எல்லா முடிவுகளையும் உச்ச நீதிமன்றமே எடுத்தால் நாடாளுமன்றத்தை இழுத்து மூட வேண்டியதுதான் என பாஜக எம்.பி. நிஷிகாந்த் துபே தெரிவித்திருந்தார். இதை கண்டித்துள்ள ஏஐஎம்ஐஎம் கட்சி தலைவரும் எம்பியுமான ஒவைசி, "நீதிமன்றங்களுக்கு மிரட்டல் விடுப்பவர்களை பிரதமர் நரேந்திர மோடி தடுத்து நிறுத்த வேண்டும்" என கூறியுள்ளார்.

Continues below advertisement

நீதிமன்றத்திற்கு மிரட்டல் விடுக்கிறார்களா பாஜக தலைவர்கள்?

தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவிக்கும் திமுக அரசுக்கும் தொடர் மோதல் போக்கு நிலவி வந்த நிலையில், மசோதாக்களுக்கு ஒப்புதல் வழங்குவது குறித்து இருவருக்கும் இடையேயான பிரச்னை விஸ்வரூபம் எடுத்தது. இந்த விவகாரம் தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் திமுக அரசு வழக்கு தொடர்ந்தது. அந்த வழக்கில் மாநில அரசுக்கு ஆதரவாக முக்கியத்தும் வாய்ந்த தீர்ப்பு ஒன்றை வழங்கியது உச்ச நீதிமன்றம்.

ஆளுநரின் செயல்பாடுகளை கடுமையாக சாடிய உச்ச நீதிமன்றம், மசோதாக்களுக்கு ஒப்புதல் வழங்குவதற்கு ஆளுநருக்கு மட்டும் இன்றி குடியரசு தலைவருக்கும் 3 மாதங்கள் வரை கால அவகாசம் நிர்ணயித்தது. அதோடு, அரசியலமைப்பு சட்டப்பிரிவு 142இன் கீழ் தனது சிறப்பு அதிகாரத்தை பயன்படுத்தி தமிழக சட்டமன்றத்தில் நிறைவேற்றிய மசோதாக்களுக்கு ஒப்புதல் வழங்கியது.

இந்த தீர்ப்பு, ஆளுநருக்கு மட்டும் இன்றி குடியரசு தலைவருக்கும் பெரும் சங்கடத்தை ஏற்படுத்தும் வகையில் அமைந்தது. உச்ச நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பை குடியரசுத் துணை தலைவர் ஜெகதீப் தன்கர் தொடங்கி பாஜக தலைவர்கள் வரை கடுமையாக சாடி வருகின்றனர்.

"மதக் கலவரத்தை தூண்டும் உச்ச நீதிமன்றம்"

"சூப்பர் நாடாளுமன்றமாக நீதிமன்றம் இயங்கி வருகிறது. ஜனநாயக சக்திகள் மீது அணு ஏவுகணை தாக்குதலை நீதித்துறை நடத்தக்கூடாது" என ஜெகதீப் தன்கர் தெரிவித்தார். இதையடுத்து, உச்ச நீதிமன்றம் மீது சரமாரி விமர்சனம் மேற்கொண்ட பாஜக எம்.பி. நிஷிகாந்த் துபே, "உச்ச நீதிமன்றமே அனைத்து முடிவுகளையும் எடுத்தால் நாடாளுமன்றம் எதற்கு? அதை இழுத்து மூட வேண்டியதுதான்.

உச்ச நீதிமன்றத்திற்கு ஒரே ஒரு குறிக்கோள் மட்டுமே உள்ளது. எனக்கு முகத்தைக் காட்டு, நான் உங்களுக்குச் சட்டத்தைக் காட்டுவேன் என்பதுதான். உச்ச நீதிமன்றம் அதன் வரம்புகளை மீறிச் செயல்படுகிறது. எல்லாவற்றிற்கும் ஒருவர் உச்ச நீதிமன்றத்திற்குச் செல்ல வேண்டியிருந்தால், நாடாளுமன்றமும் மாநில சட்டமன்றமும் மூட வேண்டியதுதான்.

ராம் மந்திர், கிருஷ்ண ஜென்மபூமி அல்லது ஞானவாபி பிரச்சினை எழும்போது, ​​நீங்கள் (உச்ச நீதிமன்றம்) 'எங்களுக்கு ஆவணத்தை காட்ட வேண்டும்' என்று சொல்கிறீர்கள். ஆனால், முகலாயர்கள் வந்த பிறகு கட்டப்பட்ட மசூதிகளுக்கு, ஆவணத்தை எப்படிக் காண்பிக்க முடியும் என்று சொல்கிறீர்கள்? இந்த நாட்டில் மத கலவரத்தை தூண்டுவதற்கு உச்ச நீதிமன்றமே பொறுப்பு. அது அதன் வரம்புகளை மீறுகிறது" என்றார்.

பாஜக எம்.பி.யின் கருத்துக்கு கண்டனம் தெரிவித்த ஏஐஎம்ஐஎம் கட்சி தலைவரும் எம்பியுமான ஒவைசி, "இங்கு, உச்ச நீதிமன்ற தீர்ப்புதான் சட்டம். நீங்கள் டியூப்லைட்டுகள், நீங்கள் கட்டைவிரலை உயர்த்தி பேசுகிறீர்கள். நீதிமன்றங்களை அச்சுறுத்துகிறீர்களா? அரசியலமைப்பின் 142வது பிரிவு (இது உச்ச நீதிமன்றத்திற்கு சிறப்பு அதிகாரங்களை வழங்குகிறது) பி.ஆர். அம்பேத்கரால் கொண்டு வரப்பட்டது. அம்பேத்கர் உங்களை விட தொலைநோக்குப் பார்வை கொண்டவர்" என்றார்.

 

பாஜக எம்.பி. நிஷிகாந்த் துபேவின் கட்சியின் நிலைபாடு என விளக்கம் அளித்துள்ள பாஜக தேசிய தலைவர் நட்டா, "நீதித்துறை மற்றும் நாட்டின் தலைமை நீதிபதி குறித்து பாஜக எம்.பி.க்கள் நிஷிகாந்த் துபே தெரிவித்த கருத்துக்களுக்கும் பாரதிய ஜனதா கட்சிக்கும் எந்த தொடர்பும் இல்லை. இவை அவரின் தனிப்பட்ட கருத்து. ஆனால், பாஜக அத்தகைய கருத்துகளை ஏற்கவோ ஆதரிக்கவோ இல்லை. பாஜக இம்மாதிரியான கருத்துகளை முற்றிலுமாக நிராகரிக்கிறது" என்றார்.

 

Continues below advertisement
Sponsored Links by Taboola