பீகாரில் பாஜக மற்றும் ஐக்கிய ஜனதா தளம் சமமான தொகுதிகளை பங்கீடு செய்ததன் பின்னணி வெளியாகியுள்ளது. இதற்கு பின் மோடி மற்றும் அமித்ஷாவின் பக்கா ஸ்கெட்ச் இருப்பதாகவும் கூறப்படுகிறது.

Continues below advertisement

பீகார் மாநிலத்தில் சட்டமன்ற தேர்தல் வரும் நவம்பர் 6 மற்றும் 11 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டமாக நடைபெற உள்ளது. 243 சட்டமன்ற தொகுதிகளை கொண்ட இங்கு, தேர்தல் முடிவுகள் நவம்பர் 14 தேதி  அன்று வெளியிடப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.

தற்போது அங்கு முதலமைச்சராக இருப்பவர் தேசிய ஜனநாயக கூட்டணியைச் சேர்ந்த ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் தலைவர் நிதிஷ்குமார்தான். இவர் மீண்டும் முதலமைச்சராகிவிட வேண்டும் என்று முனைப்பு காட்டி வருகிறார். இச்சூழலில்தான் நேற்று முன் தினம் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில்  எந்த கட்சிக்கு எத்தனை தொகுதி என்பது தொடர்பான தகவல் வெளியானது.

Continues below advertisement

தொகுதி பங்கீடு

அதில் பாஜக  101 தொகுதிகளிலும் அதேபோல் ஐக்கிய ஜனதா தளம் 101 தொகுதிகளிலும்  சிராக் பாஸ்வானின் லோக் ஜனசக்தி கட்சி 29 தொகுதிகளிலும், உபேந்திரா குஷ்வேகா தலைமையிலான ராஷ்ட்ரிய லோக் மோர்ச்சா  மற்றும் ஜிதன் ராம் மாஞ்சி தலைமையிலான  ஹிந்துஸ்தானி அவாமி மோர்ச்சா தலா 6 தொகுதிகளில் போட்டியிடுவதாகவும் அறிவிக்கப்பட்டது. 

இந்த நிலையில்தான் கூட்டணி தொடர்பான தொகுதி பங்கீட்டில் பாஜக பக்கா ஸ்கெட்ச் போட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. அதாவது பீகாரில் இதுவரை பாஜக முதலமைச்சர் நாற்காலியில் அமர்ந்ததில்லை.  கூட்டணி கட்சிகள் மூலம் மட்டுமே அங்கு பாஜக அதிகாரம் செலுத்தி வருகிறது. இச்சூழலில் தான் இந்த முறை நிதிஷ் குமாரை முதல்வர் வேட்பாளராக முன்னிலைபடுத்த வேண்டாம் என்ற நினைப்பில் பாஜக இருப்பதாக சொல்லப்படுகிறது. கிட்டத்தட்ட 10 ஆண்டுகளாக தொடர்ந்து நிதிஷ் குமார் முதலமைச்சராக இருப்பதால் அவர்மீது இளைஞர்களிடம் அதிகமான அதிருப்தி இருப்பதாக சொல்லப்படுகிறது. 

மோடி, அமித்ஷாவின் பிளான்

இதனை கருத்தில் கொண்டுதான் பாஜக சரிசமான தொகுதிகளை பிரித்து கொண்டதாம். அதாவது நிதிஷ் குமாருக்கு கொடுக்கப்பட்ட 101 தொகுதிகளில் அவர் சில தொகுதிகளில் அவரது கட்சியினர் தோல்வி அடைந்தால் கூட தங்களுக்கு ஒதுக்கப்பட்டிருக்கும் தொகுதிகளில் நிதிஷ் குமார் கட்சியை விட அதிக தொகுதிகளில் வெற்றி பெற்று விட்டால் மற்ற கூட்டணி கட்சிகளின் ஆதரவுடன் முதலமைச்சர் நாற்காலியை அலங்கரித்து விடலாம் என்று மோடியும் அமித்ஷாவும் ப்ளான் போட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பீகாரில் ஆட்சிகட்டிலில் அமர்வதற்கு 122 தொகுதிகள் மெஜாரிட்டி தேவை. அதே  நேரம் கடந்த முறை பாஜக 74 தொகுதிகளை கைப்பற்றி இருந்தது குறிப்பிடத்தக்கது.