- முகப்பு
- தமிழ்நாடு
- இந்தியா
- உலகம்
- சென்னை
- கோவை
- மதுரை
- தஞ்சாவூர்
- சேலம்
- திருச்சி
- நெல்லை
- வேலூர்
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவண்ணாமலை
- மயிலாடுதுறை
- சினிமா செய்திகள்
- சினிமா விமர்சனம்
- பிக் பாஸ் தமிழ்
- தொலைக்காட்சி
- கிரிக்கெட்
- ஐபிஎல் 2024
- கால்பந்து
- கல்வி
- ஜோதிடம்
- வெப் ஸ்டோரீஸ்
- அரசியல்
- ஆன்மிகம்
- ட்ரெண்டிங்
- க்ரைம்
- பிக் பாஸ் சீசன் 7
- JOBS ALERT
- வணிகம்
- லைப்ஸ்டைல்
- கேலரி
- உணவு
- தொழில்நுட்பம்
- ஆட்டோ
- IDEAS OF INDIA
- தொடர்பு கொள்ள
Bihar Election 2025 Result LIVE: படுதோல்வியை நோக்கி காங்கிரஸ் கூட்டணி! 200 தொகுதிகளில் பாஜக கூட்டணி முன்னிலை..
Bihar Election 2025 Result LIVE Updates: 243 சட்டமன்ற தொகுதிகளைக் கொண்ட பீகாரில் வாக்கு எண்ணிக்கை விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இதில் ஐக்கிய ஜனதா தளம் - பாஜக கூட்டணி முன்னிலையில் உள்ளது.
Background
Bihar Election 2025 Result LIVE Updates:பெரும் எதிர்பார்ப்புகளுக்கிடையே பீகார் சட்டமன்ற தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று (நவம்பர் 14) நடைபெறுகிறது. 243 சட்டமன்ற தொகுதிகளைக் கொண்ட பீகாருக்கு கடந்த நவம்பர் 4 ஆம் தேதி மற்றும் நவம்பர் 11ம் தேதி...More
ராகோபூர் தொகுதியில் போட்டியிட்ட ஆர்ஜேடி தலைவர் தேஜஸ்வி யாதவ் கடும் இழுப்பறிக்கு மத்தியில் 13,880 வாக்குகள் முன்னிலை பெற்றுள்ளார். இன்னும் ஒரு சுற்று வாக்கு எண்ணிக்கை மட்டுமே உள்ள நிலையில் தேஜஸ்வியின் வெற்றி வாய்ப்பை பிரகாசமாகியுள்ளது.
பீகார் தேர்தலில் ரகோப்பூர் தொகுதியில் போட்டியிட்ட ஆர்ஜேடி தலைவர் தேஜஸ்வி யாதவ் மீண்டும் முன்னிலை வகிக்கிறார்.
பீகார் தேர்தலில் 243 தொகுதிகளில் 61 இடங்களில் போட்டியிட்ட காங்கிரஸ் 2 இடங்களில் மட்டுமே முன்னிலை வகிக்கிறது.
பீகார் தேர்தலில் ஆர்ஜேடி தலைவரான தேஜஸ்வி யாதவ் தொடர்ந்து பின்னடைவு. 11வது சுற்று முடிவில் பாஜக வேட்பாளரான சதீஷ் குமாரை விட 4829 வாக்குகள் பின் தங்கி உள்ளார்
பீகார் சட்டமன்ற தேர்தலில் இந்தியா கூட்டணி 38 இடங்களில் முன்னிலை வகிக்கிறது. 61 இடங்களில் போட்டியிட்ட காங்கிரஸ் கட்சி 4 இடங்களில் மட்டுமே முன்னிலை வகிக்கிறது.
பீகார் சட்டமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் 17 தொகுதிகளில் 1000 வாக்குகளுக்கு குறைவாக வேட்பாளர்கள் இடையே போட்டி நிலவுவதால் வெற்றி வாய்ப்பு கணிக்க முடியாத ஒன்றாக மாறியுள்ளது.
பீகார் சட்டமன்ற தேர்தலில் பாஜக கூட்டணி 200 தொகுதிகளுக்கும் மேல் முன்னிலை வகிப்பதால் மிகப்பெரிய விவாதம் அரசியல் உலகில் எழுந்துளது. 101 தொகுதிகளில் போட்டியிட்ட பாஜக 91 தொகுதிகளில் முன்னிலை பெற்றுள்ளது.
பீகார் சட்டமன்ற தேர்தல் முடிவுகள் தமிழ்நாடு உள்ளிட்ட 5 மாநில தேர்தலிலும் எதிரொலிக்கும் என தமிழக பாஜக மூத்த தலைவர் வானதி சீனிவாசன் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
பீகார் சட்டமன்ற தேர்தலில் 101 இடங்களில் போட்டியிட்ட பாஜக 89 தொகுதிகளில் முன்னிலை வகிப்பதால் அக்கட்சி தொண்டர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.
பீகார் சட்டமன்றத் தேர்தலில், காங்கிரஸ் தலைமையிலான இந்தியா கூட்டணிக்கு மக்கள் அதற்குப் பொருத்தமான பதிலடியைக் கொடுத்துள்ளனர். தேர்தல் முடிவுகள் கூட்டுத் தலைமை, வளர்ச்சிக்கான உறுதிப்பாட்டின் மீதான மக்களின் நம்பிக்கையை மீண்டும் உறுதிப்படுத்துகிறது என எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தூள்ளார்.
பீகாரின் ரகோபூர் தொகுதியில் பின்னடைவை சந்தித்த ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சியின் தலைவர் தேஜஸ்வி யாதவ் மீண்டும் முன்னிலை பெற்றதால் தொண்டர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
பீகார் தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் தேசிய ஜனநாயக கூட்டணி மிகப்பெரிய அளவில் தேவைப்படும் பெரும்பான்மையை விட முன்னிலை பெற்றுள்ளது. இந்த நிலையில் அக்கூட்டணியில் பாஜக, ஐக்கிய ஜனதா தளம் இடையே யார் அதிக இடங்களை பெறுவார் என்பதில் போட்டி ஏற்பட்டுள்ளது.
பீகாரின் வைஷாலி மாவட்டத்தில் உள்ள ரகோபூர் தொகுதியில் இந்தியா கூட்டணியின் முதல்வர் வேட்பாளர் தேஜஸ்வி யாதவ் பின்தங்கியுள்ளார். அந்த தொகுதியில் பாஜகவின் சதீஷ் குமார் முன்னிலை வகிப்பதாகவும், தேஜஸ்வி யாதவ் சுமார் 1,273 வாக்குகள் வித்தியாசத்தில் இரண்டாவது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய தேர்தல் ஆணையத்தில் அதிகாரப்பூர்வ வலைத்தளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ள தகவல் அடிப்படையில் 11 மணி நிலவரப்படி பீகார் தேர்தலில் கட்சி வாரியாக தொகுதிகளில் முன்னிலை நிலவரம் இதோ!
- பாஜக - 82 தொகுதிகள்
- ஐக்கிய ஜனதா தளம் - 80 தொகுதிகள்
- ராஷ்ட்ரிய தனதா தளம் - 33 தொகுதிகள்
- லோக் ஜனசக்தி கட்சி - 22 தொகுதிகள்
- காங்கிரஸ் - 6 தொகுதிகள்
- இந்துஸ்தானி அவாம் மோர்ச்சா - 4 தொகுதிகள்
- அகில இந்திய மஜ்லிஸ்-இ-இத்தேஹாதுல் முஸ்லிமீன் (ஓவைசி) - 3 தொகுதிகள்
- சிபிஐ - 6 தொகுதி
- சிபிஎம் - 1 தொகுதி
- ராஷ்ட்ரிய லோக் மோர்ச்சா - 2 தொகுதிகள்
- பகுஜன் சமாஜ் கட்சி - ஒரு தொகுதி
பீகார் சட்டமன்ற தேர்தலில் 11.10 மணி வரை வாக்கு எண்ணிக்கை நிலவரம்
பீகார் தேர்தல் முடிவுகள் தேர்தல் ஆணையம் வீழ்ந்து விட்டதை குறிக்கிறது என காங்கிரஸ் கட்சி கடும் விமர்சனம் செய்துள்ளது. வாக்கு திருட்டு, எஸ்.ஐ.ஆர் ஆகியவை தாண்டி மக்கள் அதிகமாக வாக்களித்துள்ளனர் எனவும் தெரிவித்துள்ளது.
பீகார் சட்டமன்ற தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் காங்கிரஸ் கட்சி கடுமையான பின்னடைவை சந்தித்துள்ளது. இதனால் தொண்டர்கள் அதிருப்தியடைந்துள்ளனர்.
பீகார் சட்டமன்ற தேர்தலில் மொகாமா தொகுதியின் ஐக்கிய ஜனதா தள வேட்பாளருமான அனந்த் சிங், ஒரு கொலை வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவர் வாக்குப்பதிவில் முன்னிலை வகிக்கும் நிலையில் தொகுதியில் சிறை கதவுகள் உடைக்கப்படும், நமது சிங்கம் விடுவிக்கப்படும் என வாசகம் அடங்கிய சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளது.
பீகார் தேர்தல் முடிவுகளின்படி தேசிய ஜனநாயக கூட்டணி முன்னிலை வகித்து வருவதால் ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் தொண்டர்கள் கட்சியின் தலைமை அலுவலகத்துக்கு படையெடுத்து வந்த வண்ணம் உள்ளனர்.
பீகார் சட்டமன்ற தேர்தலில் வாக்கு எண்ணிக்கை மிகவும் அமைதியாக நடந்து வருகிறது என லக்கிசராய் எஸ்பி அஜய் குமார் தெரிவித்துள்ளார். வாக்கு எண்ணும் மையங்களில் போதுமான பாதுகாப்பு படைகள் நிறுத்தப்பட்டுள்ளது. பதட்டமான இடங்களில் கூடுதல் போலீசார் நிறுத்தப்பட்டுள்ளனர் என தெரிவித்துள்ளார்.
பீகார் சட்டமன்ற தேர்தலின் வாக்கு எண்ணிக்கையில் பாஜக, ஜேடியு கூட்டணி முன்னிலை வகிக்கிறது. இந்த நிலையில் பீகார் மக்கள் மீண்டும் ஒருமுறை நிதிஷ் குமார் மீது நம்பிக்கையை வெளிப்படுத்தியுள்ளனர். பீகாரில் அமோக பெரும்பான்மையுடன் கூடிய தேசிய ஜனநாயக கூட்டணி அரசு அமையும் என ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் மாநில தலைவர் உமேஷ் குஷ்வாஹா நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
பீகாரில் உள்ள 243 தொகுதிகளுக்கான சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. பெரும்பான்மையை நிரூபிக்க122 தொகுதிகளில் வெற்றி தேவை என்ற நிலையில் களம் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. முன்னிலை நிலவரங்களில் பாஜக கூட்டணி முதலிடம் பிடித்துள்ளது.
பிரபல போஜ்புரி பின்னணி பாடகியான மைதிலி தாக்கூர் பாஜக சார்பில் அலிநகர் தொகுதியில் போட்டியிட்ட நிலையில் அவர் முன்னிலை பெற்றுள்ளார்.
பீகார் சட்டமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வரும் நிலையில் போஜ்புரி சூப்பர் ஸ்டார் பவன் சிங்கின் மனைவி ஜோதி சிங், கரகட் தொகுதியில் பின்தங்கியுள்ளார். வாக்கு எண்ணிக்கைக்கு முன்பு, ஜோதி சிங் தான் நிச்சயம் வெற்றி பெறுவேன் என தெரிவித்திருந்தார்.
பீகார் சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்ட தேர்தல் வியூக நிபுணர் பிரஷாந்த் கிஷோரின் ஜன் சுராஜ் கட்சி 5 தொகுதிகளில் முன்னிலை வகிக்கிறது. அவர் கட்சி வேட்பாளர்கள் வெற்றி பெறுவார்களா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
பீகார் சட்டமன்ற தேர்தலில் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் நிலையில் இந்தியா கூட்டணியின் முதல்வர் வேட்பாளரும், ராஷ்டிரிய ஜனதா தளத் தலைவருமான தேஜஸ்வி யாதவ் ரகோபூர் தொகுதியில் முன்னிலையில் உள்ளார். அதேசமயம் மஹூவா தொகுதியில் அவரின் சகோதரர் தேஜ் பிரதாப் யாதவ் பின்தங்கியுள்ளார்
பீகார் சட்டமன்ற தேர்தலில் வாக்கு எண்ணிக்கை நடைபெறும் நிலையில் இந்தியா கூட்டணியின் முதல்வர் வேட்பாளரும், ராஷ்டிரிய ஜனதா தளத் தலைவருமான தேஜஸ்வி யாதவ், "நாங்கள் வெற்றி பெறப் போகிறோம். அனைவருக்கும் நன்றி. ஒரு மாற்றம் வரப்போகிறது. நாங்கள் புதிய அரசு அமைப்போம்” என நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
பீகார் சட்டமன்ற தேர்தலில் கருத்துக்கணிப்பு முடிவுகள் பாஜக - ஒருங்கிணைந்த ஜனதா தளம் கூட்டணிக்கு சாதகமாக அமைந்தது. இந்த நிலையில் இந்த முடிவு வாக்கு எண்ணிக்கையில் எதிரொலிக்குமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
பீகார் சட்டமன்ற தேர்தலில் வாக்கு எண்ணிக்கை இன்று நடைபெறும் நிலையில் தபால் வாக்குகள் எண்ணப்பட்டு வருகிறது. இதில் பாஜக கூட்டணி முன்னிலை வகிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
பெரும் எதிர்பார்ப்புகளுக்கிடையே பீகார் சட்டமன்ற தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணும் பணியானது தொடங்கியது. வாக்கு எண்ணும் மையத்தை சுற்றி மூன்றடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
பீகார் வாக்கு எண்ணிக்கை இன்று நடக்கும் நிலையில் காங்கிரஸ் மாநிலத் தலைவர் ராஜேஷ் ராம் கூறுகையில், "வாக்கு எண்ணிக்கை நியாயமாக நடந்தால், எங்கள் ஆட்சி அமைக்கக்கூடும். இந்தியா கூட்டணியின் தலைவர்கள் களத்தில் சிறப்பாகப் போராடியுள்ளனர் எனவும் அவர் கூறினார்.
பீகாரில் மீண்டும் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமைக்கும். தேசிய ஜனநாயக கூட்டணி 200க்கும் மேற்பட்ட இடங்களை வெல்லும் என்று நான் நம்புகிறேன் என ஆளும் அரசில் அமைச்சராக உள்ள டாக்டர் பிரேம் குமார் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
பீகார் மாநிலத்தில் வாக்கு எண்ணிக்கை இன்று நடக்கும் நிலையில் பீகார் துணை முதல்வரும் லக்கிசராய் சட்டமன்றத் தொகுதியின் பாஜக வேட்பாளருமான விஜய் குமார் சின்ஹா, அங்குள்ள கோயிலில் பூஜை செய்தார். பீகாரில் தேசிய ஜனநாயகக் கூட்டணி மீண்டும் ஆட்சி அமைக்கும் என்று நம்பிக்கை தெரிவித்தார்.
பீகார் சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கைக்கு இன்று நடைபெறும் நிலையில், 2020 ஆம் ஆண்டு வாக்கு எண்ணிக்கை நான்கு மணி நேரம் நிறுத்தப்பட்டது. இந்த முறையும் இதுபோன்ற ஏதாவது நடந்தால், நேபாளம் போன்ற ஒரு சூழ்நிலை இருக்கும். இதற்குக் காரணமான அதிகாரிகள் தப்ப மாட்டார்கள் என ராஷ்ட்ரிய ஜனதா தளம் (ஆர்ஜேடி) தலைவர் சுனில் சிங் தெரிவித்தது சர்ச்சையை கிளப்பியது. இதனால் அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
பீகார் சட்டமன்றத் தேர்தலில் வாக்கு எண்ணிக்கை இன்று நடைபெறுகிறது. முதலில் தபால் வாக்குகள் எண்ணப்படும். மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் எண்ணும் பணி காலை 8:30 மணிக்கு தொடங்கும். மாநிலத்தின் 38 மாவட்டங்களில் 46 வாக்கு எண்ணும் மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன, அங்கு 4,372 மேசைகளில் வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.