மத்தியில் பாஜக ஆட்சியில் முக்கிய பங்கு வகிக்கும் கட்சியாக நிதிஷ்குமாரின் ஐக்கிய ஜனதா தளம் கட்சிதான் தற்போது பீகாரில் ஆட்சி செய்து வருகிறது. பீகாரில் நடப்பாண்டு இறுதியில் சட்டமன்ற தேர்தல் நடைபெறும் என்று ஏற்கனவே அனைவரும் அறிந்ததே. 

Continues below advertisement

பீகார் சட்டமன்ற தேர்தல் தேதி

பீகார் சட்டமன்ற தேர்தல் தேதி எப்போது அறிவிக்கப்படும்? என்று தொடர்ந்து எதிர்பார்ப்பு நிலவி வந்த நிலையில் இன்று தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டது. பீகார் மாநிலத்திற்கான சட்டமன்ற தேர்தல் இரண்டு கட்டங்களாக நடைபெற உள்ளது. வரும் நவம்பர் மாதம் 6ம் தேதி முதற்கட்ட வாக்குப்பதிவும். நவம்பர் 11ம் தேதி இரண்டாம் கட்ட வாக்குப்பதிவும் நடைபெற உள்ளது. பீகார் மாநிலத்தில் ஆட்சி அமைக்கப்போவது யார்? என்பதை தீர்மானிக்கும் வாக்கு எண்ணிக்கை நவம்பர் 14ம் தேதி நடக்கிறது. முதற்கட்டமாக 121 தொகுதிகளிலும், இரண்டாம் கட்டமாக 122 தொகுதிகளிலும் வாக்குப்பதிவு நடக்கிறது. மொத்தமுள்ள 243 தொகுதிகளிலும் தற்போது முதல் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்தது. 

வேட்புமனுத் தாக்கல் எப்போது?

முதற்கட்ட தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் தொடங்கும் நாள் இந்த மாதம் 10ம் தேதி ஆகும். முதற்கட்ட தேர்தலில் ஒதுக்கப்பட்ட தொகுதிகளுக்கான வேட்புமனு தாக்கல் செய்வதற்கான கடைசி நாள் 17ம் தேதி ஆகும். முதற்கட்ட தேர்தலில் போட்டியிடுவதற்கு  தாக்கல் செய்யப்பட்ட வேட்புமனுவைத் திரும்ப பெற கடைசி நாள் வரும் இந்த மாதம் 20ம்  தேதி ஆகும். 

Continues below advertisement

இரண்டாம் கட்ட தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் இந்த மாதம் 13ம் தேதி தொடங்குகிறது. வேட்புமனுத் தாக்கல் செய்வதற்கான கடைசி நாள் வரும் 20ம் தேதி ஆகும். இரண்டாம் கட்ட தேர்தலில் போட்டியிடுவதற்கு தாக்கல் செய்த வேட்புமனுவைத் திரும்ப பெறுவதற்கான கடைசி நாள் இந்த மாதம் 23ம் தேதி ஆகும். இவ்வாறு தேர்தல் ஆணையம் இன்று அறிவித்துள்ளது.

பீ்காரில் ஆட்சியைப் பிடிப்பதற்கு நிதிஷ்குமாரின் ஐக்கிய ஜனதா தளத்திற்கு கடும் போட்டியாக ராஷ்ட்ரிய ஜனதா தளம் உள்ளது. முன்னாள் முதலமைச்சர் லல்லு பிரசாத் யாதவ்வின் இந்த கட்சியை தற்போது தேஜஸ்வி யாதவ் நிர்வகித்து வருகிறார். அவரது தலைமையில் இந்த தேர்தலை ராஷ்ட்ரிய ஜனதா தளம் சந்திக்கிறது. 

மொத்தமுள்ள 243 தாெகுதிகளில் குறிப்பிட்ட அளவு இடத்தை பிடிக்க பாஜகவும் முயற்சித்து வருகிறது. அந்த மாநில பாஜக தலைவர் திலீப் ஜெய்ஸ்வால் தலைமையில் பாஜக தீவிரமாக செயல்பட்டு வருகிறது. 

தற்போது நிதிஷ்குமாரின் ஐக்கிய ஜனதா தளத்தில் பாஜக, லோக் ஜனசக்தி, ராஷ்ட்ரிய லோக் மோர்ச்சா மற்றும் ஹிந்துஸ்தானி அவாம் மோர்ச்சா கட்சிகள் உள்ளது. தேஜஸ்வி யாதவின் தலைமையிலான ராஷ்ட்ரியா ஜனதா தளம் கூட்டணியில் காங்கிரஸ், மார்க்சிஸ்ட், கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட் கம்யூனிஸ்ட், விகாஸ்ஷீல் இன்சான், ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா, ராஷ்ட்ரிய லோக் ஜனசக்தி ஆகிய கட்சிகள் உள்ளது. 

பீகாரில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில் அங்கு மேற்கொள்ளபட்ட வாக்காளர் சிறப்பு திருத்த பட்டியல் முகாம் மிகப்பெரிய அளவு தாக்கத்தை வரும் சட்டமன்ற தேர்தலில் ஏற்படுத்தும் என்று கருதப்படுகிறது.