மோடிக்கு ஷாக்.. ஆதரவை வாபஸ் பெற்ற நிதிஷ் குமார்.. கவிழ்கிறதா பாஜக அரசு?

மத்தியில் நிதிஷ் குமாரின் ஆதரவோடு, ஆட்சி நடத்தி வரும் பாஜகவுக்கு, மணிப்பூரில் அவர் எடுத்த முடிவு அதிர்ச்சியை தந்துள்ளது.

Continues below advertisement

மணிப்பூரில் பாஜக அரசுக்கு வழங்கி வந்த ஆதரவை நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளம் கட்சி, வாபஸ் பெற்றுள்ளது. இதனால், ஐக்கிய ஜனதா தள கட்சியை சேர்ந்த ஒரே எம்எல்ஏ, எதிர்க்கட்சி வரிசையில் அமர உள்ளார். வழங்கி வந்த ஆதரவை கூட்டணி கட்சி வாபஸ் பெற்ற பிறகும், பாஜக அரசுக்கு பெரும்பான்மை எம்எல்ஏக்களின் ஆதரவு உள்ளது. இதனால், பாஜக அரசுக்கு, இப்போதைக்கு ஆபத்து இல்லை என கூறப்படுகிறது. ஆனால், மத்தியில் நிதிஷ் குமாரின் ஆதரவோடு, ஆட்சி நடத்தி வரும் பாஜகவுக்கு, மணிப்பூரில் அவர் எடுத்த முடிவு அதிர்ச்சியை தந்துள்ளது.

Continues below advertisement

அதிர்ச்சி கொடுத்த நிதிஷ் குமார்:

கடந்த ஆண்டு நடந்த மக்களவை தேர்தல் முடிவுகள் பலருக்கு ஆச்சரியத்தையும் சிலருக்கு அதிர்ச்சியையும் தந்தது. தொடரந்து மூன்றாவது முறையாக பாஜக ஆட்சி அமைத்தபோதிலும், எதிர்பார்த்த அளவுக்கு வெற்றி கிட்டவில்லை.

பாஜக தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், ஐக்கிய ஜனதா தளம், தெலுங்கு தேசம் உள்ளிட்ட கூட்டணி கட்சிகளின் ஆதரவுடன் ஆட்சி அமைத்தது. அடுத்த ஐந்தாண்டுகளுக்கு மத்தியில் பாஜக ஆட்சி நடத்த வேண்டும் என்றால் கூட்டணி கட்சிகளின் ஆதரவு அதற்கு தேவைப்படுகிறது.

இந்த நிலையில், மணிப்பூரில் பாஜக அரசுக்கு வழங்கி வந்த ஆதரவை நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளம் கட்சி, வாபஸ் பெற்றுள்ளது. இதன் விளைவாக, மணிப்பூரில் ஐக்கிய ஜனதா தள கட்சியை சேர்ந்த ஒரே எம்எல்ஏ எதிர்க்கட்சி வரிசையில் அமர இருக்கிறார்.

கவிழ்கிறதா பாஜக அரசு?

நிதிஷ் குமாரின் இந்த முடிவால், மணிப்பூர் பாஜக அரசுக்கு எந்த நெருக்கடியும் இல்லை. ஏன் என்றால், அவர்களுக்கு பெரும்பான்மை எம்எல்ஏக்களின் ஆதரவு உள்ளது. இருப்பினும், வழங்கி வந்த ஆதரவை கூட்டணி கட்சி வாபஸ் பெற்றிருப்பது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

குறிப்பாக, மத்தியில் தன்னுடைய ஆதரவோடு ஆட்சி நடத்தி வரும் பாஜகவுக்கு, நிதிஷ் குமார் மறைமுக செய்தி சொல்வது போல் அமைந்துள்ளதாக அரசியல் நிபுணர்கள் கூறுகின்றனர். இதேபோல, கான்ராட் சங்மா தலைமையிலான தேசிய மக்கள் கட்சியும் மணிப்பூர் பாஜக அரசுக்கு ஆதரவை வாபஸ் பெற்றுள்ளது. பீகாரில் நிதிஷ் குமாருடனும் மேகாலயாவில் கான்ராட் சங்மாவுடன் பாஜக கூட்டணியில் இருப்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க: Vanathi Srinivasan: மாட்டு கோமியம் குடிப்பது தனிப்பட்ட விருப்பம் - வானதி சீனிவாசன்

Continues below advertisement