பாரத் டாக்சி: ஓட்டுநர்களுக்கு முழுப் பணம்! ஊபர், ஓலா-வை மிஞ்சும் சேவை! இன்று முதல் தொடக்கம்!
"பாரத் டாக்ஸி திட்டம் டெல்லியில் சோதனை ஓட்டம் வெற்றி அடைந்ததால், நாடு முழுவதும் இன்று முதல் அறிமுகம் செய்யப்படுகிறது"

ஆன்லைன் மூலமாக டாக்ஸி புக் செய்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இந்தியாவில் ஊபர், ஓலா, ராபிடோ உள்ளிட்ட ஆன்லைன் தளங்கள் மூலம் டாக்ஸி புக் செய்யப்பட்டு வருகிறது. தமிழகத்திலும் ஊபர், ஓலா, ராபிடோ உள்ளிட்டவற்றில், கார் மற்றும் ஆட்டோ ஆகியவை புக் செய்யப்பட்டு வருகிறது. வளரும் நகரங்கள் மற்றும் வளர்ந்த நகரங்களில் இவற்றை பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
பாரத் டாக்சி - Bharat Taxi
இது போன்ற பொது போக்குவரத்து சேவை நிறுவனங்களுக்கு போட்டியாக, மத்திய அரசு சமீபத்தில் "பாரத் டாக்சி" செயலியை மத்திய அரசு டெல்லி மற்றும் குஜராத் ஆகிய பகுதிகளில் அறிமுகப்படுத்தியது. இந்த செயலிக்கு மக்களிடையே வரவேற்பு கிடைத்து வருகிறது. தினசரி 45,000 புதிய பயனர்கள் செயலியில் பதிவு செய்து வருவதால், இந்த சேவையை இந்தியாவில் உள்ள பல்வேறு நகரங்களில் செயல்படுத்த முடிவெடுக்கப்பட்டது.
இதுவரை மூன்று லட்சத்திற்கும் மேற்பட்ட ஓட்டுநர்கள், இந்தத் செயலில் பதிவு செய்துள்ளனர். இதுவரை பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட சவாரிகள் வெற்றிகரமாக முடிக்கப்பட்டுள்ளன. ஓட்டுனர்களுக்கு இதுவரை சுமார் 10 கோடி ரூபாய் வரை நேரடியாக வருவாய் வரவு வைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் சோதனை முயற்சி வெற்றிகரமாக அமைந்துள்ளது.
பாரத் டாக்சி செயலியின் சிறப்பம்சங்கள் என்ன ?
ஊபர், ஓலா, ராபிடோ போன்ற சேவை நிறுவனங்களின் செயலிகளில் உள்ள அனைத்து அம்சங்களும், 'பாரத் டாக்சி' செயலியில் இடம் பெற்றுள்ளன. ஆனால், இதில் முக்கியமாக கமிஷன் வசூலிக்கப்படாது. அதனால், பயணிகள் செலுத்தும் முழு தொகையும், ஓட்டுநருக்கே கிடைத்துவிடும். இதனால் ஓட்டுனர் மற்றும் பயணிகள் ஆகிய இருவருக்கும், மிக முக்கிய இணைப்பு பாலமாக இந்த செயலி உருவெடுத்துள்ளது.
இந்த செயலியில் சுகாதார காப்பீடு, விபத்து காப்பீடு மற்றும் ஓய்வூதியம் சேமிப்பு ஆகியவை ஒரு பிரத்தியேக ஆதரவு அமைப்பு மூலம் "சாரதிஸ்" ஓட்டுநருக்கான சமூக பாதுகாப்பிற்கான இந்த தளம் முன்னுரிமை அளித்து வருகிறது. அடுத்த இரண்டு ஆண்டுகளில் இந்த திட்டத்தை இந்தியா முழுவதும் கொண்டு செல்ல மத்திய அரசு முடிவு எடுத்துள்ளது. அதன் ஒரு பகுதியாக இன்று பாரத் டாக்ஸி திட்டத்தை மத்திய அமைச்சர் அமித்ஷா இன்று துவங்கி வைக்க உள்ளார்.






















