Bengaluru Power Cut: ஐடி ஊழியர்களே அலர்ட்! நாளை(17-02-2026) பெங்களூருவில் மின் தடை ஏற்படும் இடங்கள்.. முழு விவரம்
Bengaluru Power Cut : மன்யதா டெக் பார்க்,மாருதி லேஅவுட், புவனேஸ்வர்நகர், ஏர் லேஅவுட், ராஜேனஹள்ளி, பிடி லேஅவுட், ஸ்ரீராம்புரா, மாஸ்டர் பில்டர், சாமுண்டேஸ்வரி லேஅவுட் ஆகிய இடங்களிலும் மின் தடை செய்யப்படவுள்ளது

பெங்களூருவில் உள்ள மான்யதா டெக் பார்க் துணை மின் நிலையத்தில் அவசரகால பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், பிப்ரவரி 17 ஆம் தேதி சுற்றியுள்ள பகுதிகளில் மின்சாரம் நிறுத்தப்படும் என்று பெஸ்காம் தெரிவித்துள்ளது.
இதன்படி பெங்களூரு, தாலுகாக்கள் மற்றும் நகர் பகுதிகளில் 10 மணி முதல் 5 மணி வரையிலும், மின்சாரம் இருக்காது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. வழக்கமான பராமரிப்புப் பணி காரணமாகவே இந்த மின் தடை என்று பெஸ்காம் தெரிவித்துள்ளது. பொது மக்கள், தேவையான சமாளிப்புகளை மேற்கொண்டு ஒத்துழைப்பை வழங்கவும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
எங்கெல்லாம் மின் தடை?
மன்யதா டெக் பார்க்,மாருதி லேஅவுட், புவனேஸ்வர்நகர், ஏர் லேஅவுட், ராஜேனஹள்ளி, பிடி லேஅவுட், ஸ்ரீராம்புரா, மாஸ்டர் பில்டர், சாமுண்டேஸ்வரி லேஅவுட் ஆகிய இடங்களிலும் மின் தடை செய்யப்படவுள்ளது
நகரின் பிற பகுதிகளான வர்தூர் ரோடு, நாகவர்பாளையம், நாகப்ப ரெட்டி லேஅவுட், அப்பிரெட்டி லேஅவுட், பாலாஜி லேஅவுட், தர்மராஜா பாளையம், விஜயநகர் பை லேஅவுட், உதயநகர், கங்கப்பா லேஅவுட், சதானந்தநகர், கஸ்தூரி நகர், கிருஷ்ணப்பனா பால்யா, சுத்தகுண்டேபாளையா, ஆர்எம் இசட் லேஅவுட், அங்கப்ப ரெட்டி. லேஅவுட், சிவன் கோயில் சாலை. ஐயப்பன் கோயில் சாலை ஆகிய பகுதிகளிலும் மின் விநியோகம் தடைபடும்.
பொதுமக்கள் கவனத்திற்கு:
- மின்தடை காலங்களில் தகவல்களைப் பெறுவது மிகவும் முக்கியம்.
- மின்சாரம் மீண்டும் வழங்கப்படும் நிலை மற்றும் அவசர அறிவிப்புகள் குறித்து தெரிந்துகொள்ள, குடியிருப்போர் பேட்டரி சக்தியில் இயங்கும் வானொலிகள் அல்லது முழுமையாக சார்ஜ் செய்யப்பட்ட மொபைல் போன்களை பயன்படுத்த வேண்டும்.
- மொபைல் பேட்டரி ஆயுளை பாதுகாக்க, பவர் சேவிங் மோடினை இயக்கி, அவசர அழைப்புகள் மற்றும் குறுந்தகவல்கள் போன்ற தேவையான பயன்பாட்டிற்கு மட்டுமே போனைப் பயன்படுத்த வேண்டும்.
- பெங்களூரு மாநிலத்தைப் பொறுத்தவரை, திட்டமிடப்பட்ட மின் தடை குறித்த கூடுதல் தகவல்கள் அல்லது லேட்டஸ்ட் விவரங்களை, http://bescom.karnataka.gov.in என்ற இணைய முகவரி மூலம் பெறலாம். அதேபோல 1912 என்ற இலவச தொலைபேசி எண்ணை அழைத்தும் மின் தடை பெறலாம்.
























