பெங்களூர் அருகே ரயிலில் இருந்து இறங்கி ரயில் தண்டாவளத்தை குடும்பம் கடக்க முயன்றபோது ஒரு பெண்மணி கடைசி நேரத்தில் உயிர் தப்பிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
12245 ஹவுரா - யஸ்வந்த்பூர் துரந்தோ எக்ஸ்பிரஸ் ரயில் ஒன்று ஆள்நடமாட்டம் இல்லாத ஒரு பாதையில் நிற்கிறது . அந்த நேரத்தில் அங்கிருந்த ஒரு சில பயணிகள் கூட்டம் கூட்டமாக தங்கள் உடைமைகளை எடுத்துகொண்டு தாங்கள் பயணித்த ரயிலில் இருந்து இறங்கி மறுபுறம் உள்ள பாதையை நோக்கி கடக்கின்றனர்.
அப்பொழுது, எதிர்பாராதவிதமாக வலது புறம் இருந்த தண்டவாளத்தில் இருந்து ஒரு ரயில் வேகமாக வந்து கொண்டிருந்தது. இறங்கிய கூட்டத்தில் இருந்த சில உறுப்பினர்கள் தங்கள் பைகளை இழுத்துக்கொண்டு மறுபுறம் கடந்து செல்வதைக் காணலாம். இதைப் பார்த்துக்கொண்டிருக்கும் பயணி ஒருவர், வரும் ரயிலின் ஹாரன் சத்தம் அதிகமாகும்போது பெங்காலி மொழியில் அவர்களை எச்சரிக்கும் சத்தமும் கேட்கிறது.
ஒருவர் மாற்றி ஒருவர் தண்டவாளத்தை கடக்க, மறுபுறம் வந்த ரயில் மின்னல் வேகத்தில் இவர்களை நோக்கி வேகமாக வந்து விடுகிறது. பின்னால் சென்ற ஒரு நடுத்தர வயதுப் பெண்மணி, 22626 கே.எஸ்.ஆர் பெங்களூரு சிட்டி - எம்.ஜி.ஆர் சென்னை சென்ட்ரல் ஏசிக்கு சில வினாடிகளுக்கு முன்பு, தண்டவாளத்தின் குறுக்கே ஓடி சென்று தனது குடும்ப உறுப்பினருடன் இணைந்து விடுகிறார். இது அனைத்தும் கண் இமைக்கும் நேரத்தில் நடக்க, அந்த பெண் கடந்த அடுத்த நொடி டபுள் டெக்கர் எக்ஸ்பிரஸ் ரயில் டக்கென்று உள்ளே நுழைகிறது.
டபுள் டெக்கர் எக்ஸ்பிரஸ் வேகமாக நெருங்கி வருவதைக் காணும் போதும், அந்த பெண் பயணியின் செயல் அனைவரையும் ஒரு நொடியில் பயத்தில் ஆழ்த்தியது. இத்தகைய செயல் நடந்த சில நாட்களில் யாரோ ஒருவர் எடுத்த வீடியோ சமூக வலைத்தளங்களில் படு வேகமாக வைரலாகியது.
அதேபோல், கடந்த சில நாட்களுக்கு முன்பாக பெங்களூரு கேஆர் புரம் ரயில் நிலையத்தில் தண்டவாளத்தை கடக்க முயன்ற பயணி ஒருவரின் உயிரை பாதுகாப்புப் படை (ஆர்பிஎஃப்) போலீசார் காப்பாற்றிய வீடியோவும் இணையத்தில் வைரலானது குறிப்பிடத்தக்கது.
RPF பயணிகளை சட்டவிரோதமாக தண்டவாளத்தை கடக்க வேண்டாம் என்றும், தவறு செய்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தொடர்ச்சியாக எச்சரிக்கை விடுத்து வருகிறது. அப்படியும் ஒரு சிலர் இதுபோன்ற செயல்களை அவ்வபோது செய்து தங்கள் உயிரை ரயிலுக்கு தாரை வார்க்கின்றனர்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்