பெங்களூருவில் உள்ள கியாசம்பள்ளி பகுதியில் அவசரகால பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால்  மின்சாரம் நிறுத்தப்படும் என்று பெஸ்காம்  தெரிவித்துள்ளது.

இதன்படி பெங்களூரு, தாலுகாக்கள் மற்றும் நகர் பகுதிகளில் 9 மணி முதல் 6 மணி வரையிலும்,  மின்சாரம் இருக்காது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. வழக்கமான பராமரிப்புப் பணி காரணமாகவே இந்த மின் தடை என்று பெஸ்காம் தெரிவித்துள்ளது. பொது மக்கள், தேவையான சமாளிப்புகளை மேற்கொண்டு ஒத்துழைப்பை வழங்கவும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

எங்கெல்லாம் மின் தடை?

கியாசம்பள்ளி கிளையின் F-02, F-03, F-04, F-11 மற்றும் F-12 ஃபீடர்களுடன் இணைக்கப்பட்டுள்ள கிராமங்களில் மின் விநியோகம் பாதிக்கப்படலாம். மற்ற பகுதிகளான க்யாசம்பள்ளி, பாரண்டஹள்ளி தொட்ட போனந்தஹள்ளி, சிக்க போனந்தஹள்ளி, பல்லா, குட்டஹள்ளி, காமசமுத்திரம் (பாகங்கள்), நல்லூர், ராமசந்திரா, சுந்தரபாளையா மற்றும் அதைச் சுற்றியுள்ள கிராமப் பகுதிகளிலும் மின்சாரம் துண்டிக்கப்படலாம்.

பொதுமக்கள் கவனத்திற்கு:

  • மின்தடை காலங்களில் தகவல்களைப் பெறுவது மிகவும் முக்கியம்.
  • மின்சாரம் மீண்டும் வழங்கப்படும் நிலை மற்றும் அவசர அறிவிப்புகள் குறித்து தெரிந்துகொள்ள, குடியிருப்போர் பேட்டரி சக்தியில் இயங்கும் வானொலிகள் அல்லது முழுமையாக சார்ஜ் செய்யப்பட்ட மொபைல் போன்களை பயன்படுத்த வேண்டும்.
  • மொபைல் பேட்டரி ஆயுளை பாதுகாக்க, பவர் சேவிங் மோடினை இயக்கி, அவசர அழைப்புகள் மற்றும் குறுந்தகவல்கள் போன்ற தேவையான பயன்பாட்டிற்கு மட்டுமே போனைப் பயன்படுத்த வேண்டும்.
  • பெங்களூரு மாநிலத்தைப் பொறுத்தவரை, திட்டமிடப்பட்ட மின் தடை குறித்த கூடுதல் தகவல்கள் அல்லது லேட்டஸ்ட் விவரங்களை, http://bescom.karnataka.gov.in என்ற இணைய முகவரி மூலம் பெறலாம். அதேபோல 1912 என்ற இலவச தொலைபேசி எண்ணை அழைத்தும் மின் தடை பெறலாம்.

பெஸ்காம் வாட்ஸ்அப் ஹெல்ப்லைன்

* பெங்களூரு நகர தெற்கு வட்டம்: 8277884011* மேற்கு வட்டம்: 8277884012* கிழக்கு வட்டம் 8277884013* வடக்கு வட்டம் 8277884014