• நாட்டின் 73 வது குடியரசு தினவிழாவை முன்னிட்டு, தொழில்நுட்ப மேம்பாட்டு வாரியத்தின் உதவியோடு பீட்டிங் தி ரிட்ரீட் நிகழ்வை சுமார் 1000 ட்ரோன்களைக் கொண்டு வானத்தை ஒளிரச்செய்யும் நிகழ்வு இன்று மாலை நடைபெறவுள்ளது.


இந்தியாவிற்கு 1947 ஆம் ஆண்டு சுதந்திரம் கிடைத்திருந்தாலும், இந்தியாவின் அரசியலமைப்பு சட்டம் 1950 ஆண்டு ஜனவரி 26 ஆம் நாள் தான் அமலுக்கு வந்தது. அந்த நாளைத் தான் நாம் குடியரசுத்தினமாக இதுவரை கொண்டாடிவருகிறோம். அதன் படி இன்று நாட்டின் 73 ஆவது சுதந்திர தின விழாக் கொண்டாடப்படுகின்ற நிலையில், டெல்லி உள்ளிட்ட முக்கிய நகரங்களில் போலீசார் பாதுகாப்பு பணியில் குவிக்கப்பட்டு உள்ளனர். இதோடு சந்தேகத்திற்குரிய வகையில் சுற்றித்திரியம் நபர்களைக் கண்காணித்து வருகின்றனர்.





இந்தாண்டு சுமார் 10.30 மணியளவில் தொடங்கப்படும் குடியரசு தின விழாவானது நண்பகல் 12 மணியோடு நிறைவடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக பிரதமர் நரேந்திரமோடி தேசிய போர் நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்துகிறார். இதனையடுத்து விஜய் சவுக் பகுதியில் இருந்து ராஜபாதை வழியாக முப்படைகளின் அணிவகுப்பு நடைபெறும். இதில் இந்திய ராணுவத்தின் பலத்தை வெளிப்படுத்தும் விதமாக அதி நவீன பீரங்கிகள், டாங்கிகள், ஆகாஷ் ஏவுகணைகள் அணிவகுப்பில் இடம் பெறவுள்ளன. இதோடு அதி நவீன ட்ரோன்கள் உள்ளிட்ட நவீன போர் விமானங்கள் கொண்ட விமானப்படை சாகசமும் நடைபெறுகிறது.


இதோடு மட்டுமின்றி இன்று மாலை சுமார் 1000 நவீன ட்ரோன்களைப்பயன்படுத்தி, விளக்குகளால் பீட்டிங் தி ரீட்ரிட் நிகழ்வை ஒளிமயமாக காண்பிப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ள நிலையில், அதற்கான ஒத்திகை நேற்று நடைபெற்றது. இவை எப்படி மேற்கொள்ளப்பட்டுள்ளது என தெரிந்துக்கொள்வதற்கு முன்னதாக, பீட்டிங் தி ரீ ட்ரிட் நிகழ்வு குறித்து இங்கு அறிந்துக்கொள்வோம்.


 






” பீட்டிங் தி ரீ ட்ரிட் (Beating the retreat ceremony) என்பது பழமையான ராணுவ பாரம்பரியத்தைக்குறிக்கிறது. அதாவது போர்ப்படை வீரர்கள் தங்களுடைய சண்டையை நிறுத்திவிட்டு, ஆயுதங்களை எடுத்துக்கொண்டு பாசறைகளுக்குத் திரும்பிச் செல்வதைக்குறிக்கும். குறிப்பாக கடந்த 1950 களின் முற்பகுதியில் இந்திய ராணுவத்தின் மேஜர் ராபர்ட்ஸ் என்பவரால் மக்களின் மத்தியில் தனித்துவமாகக் காட்சிப்படுத்துவதற்காக பீட் தி ரீ ட்ரீட் விழாவானது கொண்டாடப்பட்டு வருகிறது.


இந்த நிகழ்வுகளை மக்கள் முன்பாகக் கொண்டுவருவதாக இந்த குடியரசு தினவிழாவில், தொழில்நுட்ப மேம்பாட்டு வாரியத்தின் ஆதரவுடன், ட்ரோன் லைட்  ஷோக்களுக்காக சுமார் 1000 ட்ரோன்களைக்கொண்டு வண்ண மயமான வடிவங்களைக் கொண்டுவந்துள்ளனர். இது நிச்சயம் காண்போர் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தும் வகையில் அமைந்திருக்கும் என கூறப்படுகிறது. மேலும் சீனா, ரஷ்யா மற்றும் இங்கிலாந்துக்கு அடுத்தபடியாக 1,000 ட்ரோன்களுடன் இவ்வளவு பெரிய அளவிலான நிகழ்ச்சியை நடத்தும் நான்காவது நாடாக இந்தியா இருக்கும் என்று மத்திய அமைச்சகம் தெரிவித்துள்ளது.