ஜூப்ளி ஹில்ஸில் வசிக்கும் 89 வயதான வி கிருஷ்ணா ரெட்டி, கடந்த திங்கள்கிழமை மாலை வங்கிக்கு வந்திருந்தார். அப்பொழுது, அவர் தனது லாக்கரில் உள்ள டெபாசிட்களை சரிபார்க்க லாக்கர் அறைக்குள் நுழைந்தார். சிறிது நேரம் கழித்து, கிருஷ்ணா ரெட்டி திரும்பிப்பார்த்தபோது தான் ஒரு பெரிய இரும்பு லாக்கருக்குள் மாட்டி இருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார். அடுத்தநாள் காலை வரை அந்த லாக்கரில் சிக்கி தவித்துள்ளார். 


இதையடுத்து செவ்வாய்க்கிழமை காலை சிறிது சலசலப்புக்குப் பிறகு அந்த முதியவர் மீட்கப்பட்டுள்ளார். செவ்வாய்க்கிழமை வங்கி ஊழியர்கள் காலை 10.30 மணியளவில் லாக்கரின் கதவைத் திறந்தபோது கிருஷ்ணா ரெட்டி லாக்கர் அறையில் தரையில் மயங்கி கிடந்துள்ளார். இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த வங்கி ஊழியர்கள் முதியவரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். 


நீரிழிவு நோயாளியான கிருஷ்ணா ரெட்டியை ஜூப்ளி ஹில்ஸ் போலீசார் அவசர பரிசோதனைக்காக அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். பின்னர் குடும்பத்தினர் வந்து அவரை வீட்டிற்கு அழைத்து சென்றனர்.


இதற்கிடையில், கிருஷ்ணா ரெட்டி குடும்பத்தாரால் காணாமல் போனோர் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக ஜூப்ளி ஹில்ஸ் போலீசார் தெரிவித்தனர். “இப்போது வழக்கு முடிக்கப்படும். ஆனால் வங்கி ஊழியர்களுக்கு எதிராக ஐபிசி 336 மற்றும் 342 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்வோம்” என்று இன்ஸ்பெக்டர் ராஜசேகர் ரெட்டி கூறினார்.




வங்கியின் உதவி மேலாளர் லாக்கர் அறையை மூடிவிட்டதாக போலீசார் தெரிவித்தனர். செவ்வாய்கிழமை, வங்கியின் சிசிடிவி கேமராக்களில் அவரது நடமாட்டம் ஏதேனும் பதிவாகி உள்ளதா என்பதைச் சரிபார்க்க குடும்பத்தினருடன் போலீஸாருடன் வங்கிக்குச் சென்றனர்.


இதுகுறித்து வங்கி மேலாளர் முரளிமோகன் ரெட்டி கூறுகையில், மீடியாக்களிடம் பேசுவதை தவிர்க்குமாறு வங்கி உயர் அதிகாரிகள் கேட்டுக் கொண்டுள்ளனர். விசாரணையில், வங்கியின் உதவி மேலாளர், திங்கள்கிழமை மாலை 4.45 மணியளவில் கிருஷ்ணா ரெட்டியை லாக்கர் அறைக்குள் அனுமதித்திருப்பது தெரியவந்தது. செவ்வாய்கிழமை காலை வங்கி ஊழியர்களில் ஒருவர் திங்கள்கிழமை மாலை ஒரு முதியவர் லாக்கர் அறைக்குள் செல்ல அனுமதிக்கப்பட்டதை நினைவு கூர்ந்தார். பின்னர், ஊழியர்கள் லாக்கருக்கு விரைந்து சென்று அதன் கனமான இரும்புக் கதவைத் திறந்து பார்த்தபோது கிருஷ்ணா ரெட்டி தரையில் மயங்கி கிடந்ததைக் கண்டனர்.


முரளி மோகன் ரெட்டி பின்னர் ஒரு தொலைக்காட்சி சேனலிடம், திங்கள்கிழமை முதல் பொது வேலைநிறுத்தத்தைத் தொடர்ந்து, வங்கியின் வழக்கமான ஊழியர்களில் பெரும்பாலோர் வரவில்லை என்றும், “சில மாற்று ஊழியர்கள்” நாள் முடிவில் வளாகத்தை மூடிவிட்டனர் என்றும் கூறினார்.


ஐபிசியின் 336, 342 பிரிவுகள் கூறுவது என்ன..? 


336 - மற்றவர்களின் உயிருக்கு அல்லது தனிப்பட்ட பாதுகாப்பிற்கு ஆபத்தை விளைவிக்கும் செயல். தண்டனையானது மூன்று மாதங்கள் வரை நீட்டிக்கப்படக்கூடிய ஒரு காலத்திற்கான விளக்கத்துடன் கூடிய சிறைத்தண்டனை அல்லது ரூ. 250 வரை நீட்டிக்கக்கூடிய அபராதம் அல்லது இரண்டும் சேர்த்து இருக்கலாம்.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண