30 நிமிடத்தில் 8 கிலோ பாகுபலி சமோசா சாப்பிட்டால் ரூபாய் 51,000 பரிசு தருவதாக உத்திர பிரதேசம் மீரூட் பகுதியின் கடை வீதியில் உள்ள ஒரு சாட்டெட் தின்பண்டங்களை விற்பனை செய்யும் கடையில் அறிவிக்கப்பட்டுள்ளது. 


உலகம் முழுவதும் பல்வேறு வகையான சாப்பாடு போட்டிகள் நடைபெறுவது வழக்கம். போட்டிகளில் முதலில் யார் சாப்பிடுவது, இரண்டாவது யார், மூன்றாவது யார் என்ற வரிசையில் பரிசுகள் வழங்கப்படும். ஒரு சில இடங்களில் உட்கொள்ளும் உணவின் அளவின் அடிப்படையில் பரிசுகள் வழங்கப்படும். ஒரு சில இடங்களில் மிகவும் பிரம்மாண்டமான முறையில் தயாரிக்கப்படும் உணவுப் பொருட்களை சாப்பிட்டால், பரிசுகள் வழங்கப்படும். இப்படியான போட்டிகள் கடைகளின் விளம்பரத்திற்காக அவ்வப்போது நடத்தப்படுவதும் உண்டு.






அவ்வகையில் உத்திர பிரதேசத்தின், மீரூட் பகுதியில் உள்ளன் கடை வீதியில் உள்ள ஒரு சாட்டெட் தின்பண்டங்கள் விற்பனை செய்யும் கடையில், எட்டு கிலோ எடையுள்ள பிரம்மாண்ட பாகுபலி சமோசா தயாரிக்கப்படுகிறது. இந்த பிரம்மாண்ட பாகுபலி சமோசாவினை 30 நிமிடங்களில் சாப்பிட்டு முடிப்பவர்களுக்கு ரூபாய் 51,000 பரிசு வழங்கப்போவதாக  கடையின் உரிமையாளார், சுபம் தெரிவித்துள்ளார். மேலும், சுபம் தெரிவித்துள்ளதாவது, நான் எங்கள் கடையினை செய்திகளில் இடம் பெறச் செய்ய வேண்டும் என யோசித்தேன், அதற்கான் முயற்சி தான் இந்த பாகுபலி சமோசா. முதலில் 4 கிலோ சமோசா தான் தயாரித்தோம், அதன் பின்னர் எட்டு கிலோ சமோசா தயாரித்து வருகிறோம். மிகவும் தரமான முறையில் தயாரிக்கப்படும் இந்த சமோசாவின் விலை 1,100 மட்டுமே. போட்டி அறிவிக்கப்பட்ட நாளில் இருந்து இதுவரை ஒருவர் கூட எட்டு கிலோ சமோசாவினை முழுமையாக சாப்பிடவில்லை. ஆனால் நாங்கள் அடுத்து 10 கிலோ சமோசா தயாரிக்க திட்டமிட்டு வருகிறோம். இவ்வாறு கடையின் உரிமையாளர் சுபம் தெரிவித்துள்ளார். 


இந்த பிரம்மாண்ட பாகுபலி சமோசா பற்றிய அறிவிப்பு சாப்பாட்டு பிரியர்களிடம் பெரும் ஆவலைத் தூண்டியுள்ளது. இந்த பிரம்மாண்ட பாகுபலி சமோசாவினைப் பற்றி கேள்விப்பட்ட நாடெங்கும் உள்ள சாப்பாட்டு பிரியர்கள், சுபம் அவர்களின் கடையினை நோக்கி படையெடுத்து வருகின்றனர்.  




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண