மனிதர்களுக்கும் விலங்குகளுக்கும் இடையேயான உறவு என்பது எப்போதும் தனித்துவமானது. மனிதனைக் காட்டிலும் அன்பிலும், குறும்புத்தனத்திலும் விலங்குகள் எப்போதும் அதிகளவிலே காட்டும். அந்த வரிசையில் யானையின் அன்பும், குறும்புத்தனம் அலாதியானது. உருவத்தில் மிகப்பெரிய தோற்றத்தைக் கொண்டிருந்தாலும் யானை, குழந்தைத்தனத்திலும், அன்பிலும் குழந்தையைப் போன்று மனிதர்களிடம் நடந்து கொள்ளும் குணம் கொண்டது.
இப்படிப்பட்ட குறும்புத்தனத்தை வெளிப்படுத்தும் காட்டு யானைகளின் வீடியோக்கள் அவ்வபோது இணையத்தில் வெளியாகி ஒரு கலக்கு கலக்கும். தற்போதும், அதேபோல், ஒரு வீடியோ வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்திய ஐ.எஃப்.எஸ் அதிகாரி ஒருவர் தனது ட்விட்டர் பக்கத்தில் குட்டியானை செய்த சேட்டை அடங்கிய வீடியோ ஒன்றை வெளியிட்டார். அதில், பிறந்த சில நிமிடங்களே ஆன யானை குட்டி ஒன்று தனது முதல் அடியை எடுத்து வைக்கிறது. எடுத்து வைத்த அடுத்த அடியில் தட்டி தடுமாறி கீழே விழுக, மீண்டும் அடுத்த நொடியில் மீண்டு எழுந்து நடக்க தொடங்கிறது. இப்படியே தான் முதல் மற்றும் முத்தான அடிகளை எடுத்து வைத்து நடை பயில்கிறது.
இந்த வீடியோ எடுக்கப்பட்ட இடம், இந்தியாவா அல்ல வேறு நாட்டு பகுதியா என்பது உறுதியாக தெரியவில்லை. ஆனால், யானைகளைப் பார்த்தால் இந்தியாவைப் போலதான் இருக்கின்றது.
இதேபோல், இதற்கு முன்னதாக இதே ஐ.எஃப்.எஸ் அதிகாரி யானைகள் சாலையை கடக்கும்போது எடுக்க வீடியோ ஒன்றை வெளியிட்டார். அந்த வீடியோவில் கூட்டமாக சாலையைக் கடக்கும் யானைகளுக்கு வழிவிட்டு தூரத்தில் வாகனங்களோடு நிற்கின்றனர் மக்கள். சாலையைக் கடந்துவிடும் யானைகளின் கூட்டத்தின் கடைசி யானை, வாகனங்கள் நின்று கொண்டிருந்த பக்கத்தை திரும்பி பார்த்து தும்பிக்கையை தூக்கி நன்றி தெரிவிக்கும் காட்சி வீடியோவில் பதிவாகியுள்ளது. இந்த வீடியோ இணையத்தில் தாறுமாறாக வைரலானது குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்