Ayodhya Ram Mandir LIVE: ராமர் கோவிலுக்காக பாடுபட்ட கரசேவகர்களுக்கு நன்றி - பிரதமர் மோடி
Ayodhya Ram Mandir Opening LIVE Updates: அயோத்தி ராமர் கோயில் திறப்பு விழா இன்று நடைபெற உள்ள நிலையில், அதுகுறித்த தகவல்களை உடனுக்குடன் இங்கே காணலாம்.
ராமர் கோவில் கும்பாபிஷேகம் செய்யப்பட்டுள்ளது என மகிழ்ச்சி அளிக்கின்றது. எனது மகிழ்ச்சியை வார்த்தைகளால் விவரிக்க முடியவில்லை என தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
நாட்டைக்கட்டமைக்க ராமாயணம் உதவும் என பிரதமர் மோடி அயோத்தியில் பேசி வருகின்றார்.
ராமர் கோவிலுக்காக பாடுபட்ட கரசேவகர்களுக்கு இருகரம் கூப்பி நன்றி தெரிவிக்கின்றேன் என பிரதமர் மோடி பேசி வருகின்றார்.
Ram Temple : ராமர் சிலைக்கு முதல் முறையாக தீபாராதனை செய்தார் பிரதமர் மோடி
அயோத்தி ராமர் கோயிலில் நிறுவப்பட்டுள்ள ராமருக்கு முதல் பூஜையை செய்தார் பிரதமர் மோடி.
அயோத்தில் ராமர் கோயில் நிறுவப்பட்டுள்ள பால ராமர் சிலைக்கு பிரான பிரதிஷ்டை பூஜை நிறைவு பெற்றது. அயோத்தி ராமர் ஆலயத்தில் நிறுவப்பட்டுள்ள பால ராமர் சிலைக்கு பூஜைகள் நடத்தி உயிரூட்டப்பட்டது.
நிறுவப்பட்ட ராமர் சிலைக்கு பிரதமர் மோடி வழிபாடு செய்து வருகிறார்.
ராமர் கோயிலில் குழந்தை ராமர் சிலை பிராண பிரதிஷ்டை செய்யப்பட்டது. குழந்தை ராமர் சிலையின் கண்களில் இருந்து துணி அகற்றப்பட்டு பிரதிஷ்டை செய்யப்பட்டது.
பிராண பிரதிஷ்டையில் பங்கேற்றார் ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத். பிரதமருக்கு பக்கத்தில் அமர்ந்து பூஜையில் பங்கேற்கிறார்.
ராமர் கோயில் பிரதிஷ்டை இன்னும் சற்று நேரத்தில் தொடங்கவுள்ள நிலையில், அதற்கான சிறப்பு பூஜைகளில் பிரதமர் மோடி, ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத் ஈடுபட்டனர்.
அயோத்தியில் கட்டப்பட்ட ராமர் கோயில் கும்பாபிஷேக விழாவிற்கு வந்தடைந்தார் பிரதமர் மோடி.
ராமர் கோயில் குடமுழுக்கு விழாவில் ஆந்திர மாநில முன்னாள் முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு பங்கேற்றுள்ளார்.
அயோத்தியில் நடைபெறும் ராமர் கோயில் குடமுழுக்கு விழாவில் சங்கர் மகாதேவன், சோனு நிஹாம் பஜனை செய்து வருகின்றனர்.
தொழிலதிபர்கள் அனில் அம்பானி, குமார் மங்கலம் பிர்லா ஆகியோரும் அயோத்தி குடமுழுக்கு விழாவில் பங்கேற்றுள்ளனர். ராமர் கோயில் குடமுழுக்கு விழாவில் அம்பானியும், நடிகட் ரஜினிகாந்தும் கைகுலுக்கி நலம் விசாரித்து கொண்டனர்.
Ram Mandir Ayodhya : காஞ்சி காமாட்சியம்மன் கோவிலில் எல்.இ.டி திரை. உயர்நீதிமன்ற வழிகாட்டலை அடுத்து காஞ்சி காமாட்சி கோயிலில் ராமர் கோயில் நிகழ்ச்சியை ஒளிபரப்ப எல்.இ.டி வைக்கப்பட்டது
சடங்குகள் செய்து, மந்திரங்கள் ஓதி குழந்தை ராமர் சிலைக்கு சக்தியளிக்கப்படும் நிகழ்வுதான் பிராண பிரதிஷ்டை என்பதாகும்
அயோத்தியில் ராமர் கோவில் கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தனது இல்லத்தில் பூஜை செய்தார்.
அயோத்தி ராமர் கோயில் குடமுழுக்கு விழாவினை முன்னிட்டு விழுப்புரத்தில் 300 ஆண்டுகள் பழமைவாய்ந்த ஆஞ்சநேயர் கோயிலில் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு வெள்ளி கவசம் பொருத்தபட்டிருப்பதை பக்தர்கள் வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர்.
உத்தரபிரதேசம்: தெலுங்கு சூப்பர் ஸ்டார் சிரஞ்சீவி மற்றும் ராம் சரண் அயோத்தி வந்தடைந்தனர்.
அயோத்தி ராமர் கோயில் விழாவை தனியார் கோயில்கள், தனியார் மண்டபங்களில் நேரலை செய்ய அரசு அனுமதி தேவையில்லை. அரசுக்கு சொந்தமான கோயில்களில் செயல் அலுவலரிடம்அனுமதி தேவை என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
அயோத்தியில் நடைபெறும் ராமர் கோயில் கும்பாபிஷேக நிகழ்ச்சி கலந்துகொள்வதற்காக அயோத்தி வந்தடைந்தார் பிரதமர் மோடி.
இன்று நிர்மலா சீதாராமன் கலந்து கொள்ளும் நிகழ்ச்சி வைக்கப்பட்ட எல்இடி அகற்றப்பட்ட நிலையில், சம்பந்தப்பட்ட தனியார் அமைப்பு சார்பில் காவல் துறைக்கு அனுமதி கடிதம் எழுதிய பொழுது, நேரடி ஒளிபரப்பு செய்ய மாட்டோம் என எழுதி கொடுத்த கடிதம் வெளியாகி உள்ளது.
ஐந்து வயது குழந்தை இராமருக்கு அயோத்தியில் மாபெரும் கோவில். நாடெங்கிலும் இராமர் படம் பொறித்த காவிக் கொடிகள் பெருமிதம் குலுங்க பறக்கின்றன. கொண்டாடிக் கூத்தாடும் வெற்றிக் களிப்பில் சங் பரிவார்கள்.
பாதுகாப்பில்லாத நெருக்கடி நிலையில் இசுலாமியர்கள்.
அப்பாவி இந்து மக்களை ஏய்க்கும் தேர்தல் பிரச்சார அரசியல் விழா!
சங் பரிவார்களின் சதி அரசியலை முறியடிக்க அனைத்து தரப்பு இந்து மக்கள் அணிதிரள வேண்டும்!
நான் மிகவும் மகிழ்ச்சியாகவும் உற்சாகமாகவும் இருக்கிறேன். நானும் என் மனைவியும் அயோத்தி ராமர் கோயில் திறப்பு விழா நிகழ்ச்சியில் ஒரு அங்கமாக பங்கேற்றிருப்பதை ஆசீர்வதித்ததாக உணர்கிறோம். உலகில் அமைதி நிலவ பிரார்த்திக்கிறேன் என பிரபல பாடகர் ஷங்கர் மகாதேவன் தெரிவித்துள்ளார்.
ஒடிசா மாநிலம் பூரியில் உள்ள சிற்ப கலைஞர் சாஸ்வத் ரஞ்சன் அயோத்தியில் உள்ள ராமர் கோயில் திறப்பு விழாவை முன்னிட்டு கோயில் மாதிரியை தீக்குச்சிகளைப் பயன்படுத்தி உருவாக்கியுள்ளார்.
ஒடிசா மாநிலம் பூரியில் உள்ள சிற்ப கலைஞர் சாஸ்வத் ரஞ்சன் அயோத்தியில் உள்ள ராமர் கோயில் திறப்பு விழாவை முன்னிட்டு கோயில் மாதிரியை தீக்குச்சிகளைப் பயன்படுத்தி உருவாக்கியுள்ளார்.
அயோத்தியின் ராமர் கோயில் திறப்பு விழாவை முன்னிட்டு அமெரிக்காவின் நியூயார்க்கில் உள்ள டைம்ஸ் சதுக்கத்தில் ராம பக்தர்களால் லட்டுகள் விநியோகிக்கப்பட்ட வீடியோக்கள் இணையத்தில் வைரலாகியுள்ளது.
நாளை அயோத்தி ராமர் கோவில் திறப்பு விழா நடைபெறவுள்ளாதால், பூக்களால் அலங்கரிக்கப்பட்ட காட்சிகள் இணையத்தில் வைரல் ஆகி வருகின்றது.
அயோத்தி ராமர் கோயிலுக்கு பேட்மிண்டன் வீராங்கனை சாய்னா நேவால் வருகை தந்துள்ளார். இதுதொடர்பாக பேசிய அவர், “நான் இங்கு வந்ததை எனது அதிர்ஷ்டம் என்று நினைக்கிறேன். பல ஆண்டுகளுக்குப் பிறகு கோவில் திறக்கும் தருணத்திற்காக நாங்கள் காத்திருக்கிறோம், கொண்டாடுகிறோம். ராமர் சிலையை இங்கே இருப்பது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது" என கூறியுள்ளார்.
அயோத்தி ராமர் கோயிலுக்கு மும்பையில் இருந்து ஷப்னம் என்ற இஸ்லாமிய பெண் பாதயாத்திரை மேற்கொண்டுள்ளார். தான் ஒரு இஸ்லாமியராக இருந்தாலும் ராமர் மேல் அசைக்க முடியாத பக்தி உள்ளதாக தெரிவித்துள்ளார்.
அயோத்தி ராமர் கோயில் நாளை திறக்கப்படுவதை முன்னிட்டு எக்ஸ் வலைத்தளத்தில் #WorldInAyodhya என்ற ஹேஸ்டேக் இந்திய அளவில் ட்ரெண்டிங்கில் உள்ளது.
அயோத்தி ராமர் கோயிலில் ஐந்து வயது குழந்தை ராமர் தாமரையின் மீது நிற்பது போன்று சிலை வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த சிலையை கர்நாடகாவின் பிரபல சிற்பி அருண் யோகிராஜ் செதுக்கியுள்ளார். ஷியாமல் கல்லில் வடிவமைக்கப்பட்டுள்ளது
அயோத்தி ராமர் கோயிலின் வடிவமைப்பு 6.5 ரிக்டர் அளவு நிலநடுக்கத்தைத் தாங்கும் திறன் கொண்டது, மேலும் 1,000 ஆண்டுகளுக்கு பழுதுபார்ப்பு தேவையில்லை என்று கணிக்கப்பட்டுள்ளது.
கோயிலில் அமைக்கப்பட்டுள்ள 380 தூண்களும் முற்றிலுமாக கற்களால் அமைக்கப்பட்டுள்ளன. நவீன இரும்பு, எஃகு அல்லது சிமென்ட் ஆகியவை முற்றிலும் தவிர்க்கப்பட்டுள்ளது.
சுமார் 1800 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள இந்த கோயில், 1000 ஆண்டுகளையும் கடந்து நிலைத்து நிற்கும் வகையில் அறிவியல் பூர்வமாக கட்டப்பட்டுள்ளது. பூகம்பங்கள் மற்றும் மிகத் தீவிரமான வெள்ளம் போன்றவற்றையும் தாங்கும் வகையில், தத்ரூபமாக வடிவமைக்கப்பட்டு இந்த கோயில் இறுதி வடிவம் பெற்றுள்ளது.
ராமர் கோயில் வளாகத்திற்குள், மகரிஷி வால்மீகி, மகரிஷி வசிஷ்டர், மகரிஷி விஸ்வாமித்ரா, மகரிஷி அகஸ்தியர், நிஷாத் ராஜ், மாதா ஷப்ரி மற்றும் தேவி அஹில்யாவின் மரியாதைக்குரிய மனைவி ஆகியோருக்கு என பிரத்யேக கோயில்கள் அமைக்கப்பட்டுள்ளது.
Background
Ayodhya Ram Mandir: அயோத்தி ராமர் கோயில் வலிமையான பூகம்பங்கள் மற்றும் மிகத் தீவிரமான வெள்ளம் போன்றவற்றை தாங்கும் வகையில், அறிவியல்பூர்வமாக கட்டப்பட்டுள்ளது.
அயோத்தி ராமர் கோயில் குடமுழுக்கு:
உத்திரபிரதேச மாநிலம் அயோத்தியில் ராமர் கோயில் பிரமாண்டமாக கட்டி முடிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து அந்த கோயிலின் குடமுழுக்கு விழா இன்று வெகு விமரிசையாக நடைபெற உள்ளது. பிரதமர் மோடி தலைமை தாங்கும் இந்த நிகழ்வில், நாட்டில் உள்ள பல முக்கிய பிரமுகர்கள் பங்கேற்க உள்ளனர். இந்நிலையில், சுமார் 1800 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள இந்த கோயில், 1000 ஆண்டுகளையும் கடந்து நிலைத்து நிற்கும் வகையில் அறிவியல்பூர்வமாக கட்டப்பட்டுள்ளது. பூகம்பங்கள் மற்றும் மிகத் தீவிரமான வெள்ளம் போன்றவற்றையும் தாங்கும் வகையில், தத்ரூபமாக வடிவமைக்கப்பட்டு இந்த கோயில் இறுதி வடிவம் பெற்றுள்ளது.
அறிவியல் கலந்த ராமர் கோயில்:
அயோத்தி ராமர் கோயில் வழிபாட்டுத் தலமாக மட்டுமல்ல, பண்டைய நம்பிக்கை மற்றும் நவீன அறிவியலின் கலவையாக உருவாகியுள்ளது. டாடா கன்சல்டிங் இன்ஜினியர்ஸ் லிமிடெட், எல்&டி, மத்திய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம், தேசிய புவி இயற்பியல் ஆராய்ச்சி நிறுவனம், கவுகாத்தி மற்றும் மெட்ராஸ் ஐ.ஐ.டி ஆகியவை இணைந்து துல்லியமான திட்டமிடல் மற்றும் புதுமையான கட்டுமான நுட்பங்களின் மூலம் கோயிலை கட்டி எழுப்பியுள்ளன. பாரம்பரிய நாகரா பாணி கட்டிடக்கலையை அடிப்படையாக கொண்ட இந்த கோயிலின் வடிவமைப்பானது, முதலில் 1988ம் ஆண்டு பிரபல வடிவமைப்பாளர்களான சோம்புரா குடும்பத்தினரால் உருவாக்கப்பட்டது. இருப்பினும், 2020ம் ஆண்டு வாஸ்து மற்றும் சிலை சாஸ்திரங்கள் அடிப்படையில் வடிவமைப்பில் சில மாற்றங்கள் செய்யப்பட்டன.
கோயில் கட்டமைப்பு:
ராமர் கோயிலானது மொத்தமாக, கருவறை மற்றும் ஐந்து மண்டபங்கள் உட்பட ஆறு பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. அதாவது கன் மண்டபம், ரங் மண்டபம், நிருத்ய மண்டபம், கீர்த்தனை மண்டபம், பிரார்த்தனை மண்டபம் ஆகியவை அடங்கும். ராமர் கோவில் வளாகம், 380 அடி நீளம் (கிழக்கு-மேற்கு திசை), 250 அடி அகலம் மற்றும் 161 அடி உயரம் கொண்டதாக இருக்கிறது. கோயிலின் ஒவ்வொரு தளமும் 20 அடி உயரமும், மொத்தம் 380 தூண்கள் மற்றும் 44 வாயில்கள் கொண்டுள்ளது. கோயில் கட்டுமானத்தில் எங்கும் இரும்பு பயன்படுத்தப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -