Ayodhya Ram Mandir: அயோத்தி ராமர் கோயில் திறப்பு விழாவிற்கு விடுமுறை தராததால், ஒருவர் தனது வேலையை ராஜினாமா செய்தது அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. 


பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் உள்ள அயோத்தியில் ராமர் கோயில் கட்டப்பட்டு ஜனவரி 22ஆம் தேதி திறக்கப்பட்டுள்ளது. ரூ.1,800 கோடி செலவில் மிக பிரமாண்டமாக கட்டப்பட்டுள்ள இந்த கோயில் நிலநடுக்கம் மற்றும் வெள்ளம் போன்ற இயற்கை பேரிடர்களை தாங்கும் வகையில் பிரத்யேகமாக உருவாக்கப்பட்டுள்ளது.


அயோத்தி ராமர் கோயில்:


அயோத்தி ராமர் கோயிலை பிரதமர் மோடி ஜனவரி 22-ஆம் தேதி பிரதமர் மோடி பிரதிஷ்டை செய்து திறந்து வைத்தார்.  கருங்கல்லில் செதுக்கப்பட்ட குழந்தை ராமர் சிலையை பிரதிஷ்டை செய்யப்பட்டது. கருவறையில் வைக்கப்பட்ட சிலைக்கு பிரதமர் மோடி பிரதிஷ்டை செய்து திறந்து வைத்தார்.  


உத்தர பிரதேச ஆளுநர் ஆனந்திபென் படேல், உத்தர பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத், ராமர் கோயிலின் தலைமை அர்ச்சகர் ஆச்சார்யா சத்யேந்திர தாஸ், ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத் உள்ளிட்டோர் முன்னிலையில் கருவறையில் உள்ள ராமர் சிலைக்கு பிராண பிரதிஷ்டை செய்யப்பட்டது.


மலர்களாலும் விலை மதிப்பற்ற உபகரணங்களாலும் அலங்கரிக்கப்பட்ட ராமர் சிலைக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு பிரதிஷ்டை செய்யப்பட்டதை உலகம் முழுவதும் உள்ள ரசிகர்கள் நேரலையில் கண்டு களித்தனர்.  


வேலையை ராஜினாமா செய்த நபர்:


இதற்கிடையில், ராமர் கோயில் விழாவை பொதுமக்களும் மகிழ்ச்சியாக கொண்டாடும் நோக்கில் பல மாநிலங்கள் பொது விடுமுறையை அறிவித்தது.  மேலும், இந்தியா முழுவதும் உள்ள அனைத்து மத்திய அரசு அலுவலகங்கள்,  நிறுவனங்கள் மற்றும் மத்திய தொழில் நிறுவனங்களுக்கு ஜனவரி 22ம் தேதியன்று அரை நாள் விடுமுறையும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதோடு, சில தனியார் நிறுவனங்களும் சலுகைகளையும் அறிவித்தது. 






இந்த நிலையில், ராமர் கோயில் திறப்பு விழாவின்போது விடுமுறை தராததால் நபர் ஒருவர் தனது வேலையை ராஜினாமா செய்திருக்கிறார். இது பற்றி கங்கர் திவார் என்பவர் தனது எக்ஸ் தளத்திலும் பதிவிட்டிருக்கிறார். அதில்,  "ராமர் கோயில் திறப்பு விழாவின்போது, மேலாளர் தனக்கு விடுப்பு தரவில்லை.






எனது மேலாளர் ஒரு இஸ்லாமியர். எனக்கு விடுப்பு தரவில்லை என்பதால் எனது வேலையை ராஜினாமா செய்துவிட்டேன்" என்று பதிவிட்டுள்ளார்.  இந்த பதிவு இணையத்தில் வைரலாகி வருவதோடு, நெட்டிசன்கள் பலரும் இவருக்கு ஆதரவு கருத்து தெரிவித்து வருகின்றனர்.