போன்பே மூலம் உதவி கேட்கும் பிச்சைக்காரர்:
இந்தியாவில் எந்த மூலைக்குச் சென்றாலும், கையில் பணமே வேண்டாம். வங்கிக் கணக்கில் பணமும், அதோடு இணைக்கப்பட்டுள்ள ஒரு செல்போனும் மட்டுமே, கையில் இருந்தால் போதும் என்ற சூழலை யுபிஐ சேவை ஏற்படுத்தியுள்ளது. மாநகரங்களில் உள்ள பெரும் கடைகளில் மட்டுமின்றி, உள்ளூரில் உள்ள பொட்டிக் கடை வரையும் ஒரு க்யூஆர்கோடை ஸ்கேன் செய்து பணத்தை செலுத்திவிடலாம். இதனால், இந்திய பணப்பரிவர்த்தனை தற்போது அதிவேகமாக டிஜிட்டல் மயமாகிறது.
சொல்லப்போனால் இன்னும் பிச்சைக்காரர்கள் மட்டும் தான் ஆன்லைன் பணப் பரிவர்த்தனைகளை பயன்படுத்தாமல் இருப்பதாக பேச்சு வழக்கில் சொல்லதுண்டு. ஆனால், தற்போது பிச்சைகாரர்களும் ஜிபே, போன்பே மூலமாக பிச்சை எடுத்து வருகின்றனர். இது சம்பந்தமான வீடியோகளும் இணையத்தில் தீயாய் பரவுகின்றன.
இந்த சம்பவம் வேறு எங்கேயும் இல்லை. நம் இந்தியாவில் தான். அசாம் மாநிலம் கவுகாத்தியில் சிக்னலில் நிற்கும் கார்களில் பிச்சை எடுக்கும் பார்வையற்ற நபர் ஒருவர், போன்பே மூலமாக உதவி கேட்டும் காட்சிகள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
வைரல் வீடியோ:
தஷ்ரத் என்ற நபர், தனது கழுத்தில் போன் பே ஸ்கேனரை தொங்கவிட்டப்படி, சிக்னலில் காத்திருக்கும் வாகன ஓட்டிகளிடம் பிச்சை கேட்கிறார். இந்த சம்பந்தமான வீடியோவில், கவுகாந்தி சிக்னலில் பார்வையற்ற நபர், கழுத்தில் போன்போ ஸ்கேனரை தொங்கவிட்டப்படி, பிச்சை கேட்கிறார்.
அப்போது, சிக்னலில் நின்றுக் கொண்டிருந்த வாகன ஓட்டியும் போன்பே மூலமாக 10 ரூபாயை அவருக்கு அளிக்கிறார். இந்த வீடியோ தீயாக இணையத்தில் பரவி வருகிறது. இந்த வீடியோவை காங்கிரஸ் கட்சியின் கவுரவ் சோமானி தனது எக்ஸ் தளத்தில் பகிர்ந்துள்ளார்.
இதுகுறித்து அவர் பதிவிட்டிருப்பதாவது, ”டிஜிட்டல் பரிவர்த்தனைகளுக்கு எல்லைகள் கிடையாது. பிச்சைக்காரர் ஒருவர் டிஜிட்டர் பரிவர்த்தனை மூலமாக உதவி கேட்கிறார். சமூக பொருளாதாரம் என்ற தடைகளை தாண்டி செல்லும் ஆற்றல் தொழில்நுட்பத்திற்கு உள்ளது என்பதற்கான சான்று இது” என்றார்.
சமூக வலைதளங்களில் தீயாய் பரவும் இந்த வீடியோ 1,300 பேர் பார்த்துள்ளனர். இதற்கு நெட்டிசன்கள், பார்வையற்ற நபருக்கு உதவி செய்யலாம் என்று கூறுகின்றனர். சிலர், இவர்கள் எல்லாம் பிச்சைக்காரர்கள் இல்லை. இதை ஒரு வேலையாக செய்கின்றனர். இந்த மாதிரியான நபர்களால், சாப்பிட வழியாமல் பிச்சை எடுக்கும் பிச்சைக்காரர்கள் சிரமப்பட்டு வருகின்றனர் என்றும் கூறி வருகின்றனர்.