Aadhaar-PAN Linking : ஜூன் 30ஆம் தேதிக்குள் ஆதான் மற்றும் பான் அட்டையை இணைக்க வேண்டும் என்று வருமான வரித்துறை தெரிவித்துள்ளது.
ஜூன் 30-ஆம் தேதி கடைசி
வருமான வரி செலுத்துவதற்கான நிரந்தர கணக்கு எண்ணுடன் (பான்) ஆதாரை இணைக்க வேண்டும் என மத்திய அரசு ஏற்கனவே அறிவித்திருந்தது. அதன்படி வருமான வரி செலுத்துவோர் தங்கள் பான் எண்ணுடன் ஆதாரை இணைத்து வருகின்றனர். இதற்கான அவகாசத்தையும் வருமான வரித்துறை நிர்ணயித்துள்ளது. அதன்படி ஜூன் 30-ஆம் தேதிக்குள் பான் கார்டுடன் ஆதாரை இணைக்க வேண்டும் என வருமான வரித்துறை அறிவித்துள்ளது.
இதற்கு நாட்கள் நெருங்குவதால் தற்போது வருமான வரித்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. இதுகுறித்து பதிவிட்டுள்ள ட்விட்டரில், ”வருமான வரிச் சட்டம், 1961 இன் படி, பான் வைத்திருப்பவர்கள் அனைவரும் 30.06.2023 அன்று அல்லது அதற்கு முன் தங்கள் பான் எண்ணை ஆதாருடன் இணைக்க வேண்டும்” என்று குறிப்பிட்டுள்ளது.
இணைப்பதற்கு என்ன செய்ய வேண்டும்?
- ஆதார் பான இணைப்புக்கு முதலில் www.incometaxindiaefiling.gov.in என்ற இணையதளத்துக்குச் செல்ல வேண்டும்
- அந்த இணையதளத்தில் Link Aadhaar என்ற பட்டனை கிளிக் செய்ய வேண்டும்.
- இணையதளப் பக்கத்தில் பான் எண், ஆதார் எண், பெயர் (ஆதாரில் உள்ளபடி) பதிவு செய்ய வேண்டும்.
- ஆதாரில் பிறந்த தேதி முழுமையாக இல்லாமல் பிறந்த ஆண்டு மட்டும்தான் இருக்கிறது என்றால், அதற்குரிய விவரத்தில் டிக் செய்ய வேண்டும்.
- விவரங்களை சோதித்து ஆதாரை இணைப்பதற்கு ஒப்புதல் வழங்கும் பாக்ஸில் டிக் செய்ய வேண்டும்
- இணையத்தில் வரும் குறியீட்டு எழுத்துக்களை டைப் செய்து கிளிக் செய்தால் இணைக்கப்பட்ட விவரம் தெரியவரும்.
பான்-ஆதார் இணைக்கப்பட்டதா என பரிசோதிப்பது எப்படி?
- https://www.pan.utiitsl.com/panaadhaarlink/forms/pan.html/panaadhaar என்ற இணையதளத்துக்கு செல்ல வேண்டும்
- அதில் பான் எண், பிறந்ததேதி, குறியீட்டு எழுத்துக்களை டைப் செய்ய வேண்டும்
- இறுதியாக சப்மிட் பட்டனை கிளிக் செய்தால், இணைப்புகுறித்த செய்தி வரும்.
இணைக்காவிட்டால்...
- வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய முடியாது.
- நிலுவையில் உள்ள வருமான வரிக் கண்க்கு திரும்பப் பெற முடியாது.
- பான் எண் செயலிழந்து விட்டால் அதிக விகிதத்தில் வரி செலுத்தப்பட வேண்டி இருக்கும்.
- இதனை தவிற, வங்கிகள் போன்ற பிற பணப் பரிவரித்தனைகளை செய்வதில் சிரமங்கள் ஏற்படலாம் என்பது குறிப்பிடத்தக்கது.