Article 370 verdict LIVE Updates: 2024 செப்டம்பர் மாதத்துக்குள், ஜம்மு காஷ்மீரில் தேர்தல் நடத்த வேண்டும் - உச்சநீதிமன்றம்

Article 370 verdict LIVE Updates: ஜம்மு காஷ்மீருக்கு வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்தை மத்திய அரசு நீக்கியதற்கு எதிரான வழக்கின் தீர்ப்பு குறித்த அப்டேட்களை உடனுக்குடன் இங்கு தெரிந்துகொள்ளுங்கள்.

ABP NADU Last Updated: 11 Dec 2023 01:26 PM
இந்த தீர்ப்பால் ஏமாற்றம் அடைந்திருக்கிறோம் - அசாதுதீன் ஒவைசி

லடாக்கை யூனியன் பிரதேசமாக்கியது செல்லும் - உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி சந்திரசூட்

2024-இல் ஜம்மு காஷ்மீரில் தேர்தல் வேண்டும். லடாக்கை யூனியன் பிரதேசமாக்கியது செல்லும் - உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி சந்திரசூட்

சட்டப்பிரிவு 370 நீக்கம்: மத்திய அரசு எடுத்த நடவடிக்கையை ரத்து செய்ய இயலாது. சட்டப்படி செல்லும் - உச்சநீதிமன்றம்

சட்டப்பிரிவு 370 நீக்கம்: மத்திய அரசு எடுத்த நடவடிக்கையை ரத்து செய்ய இயலாது. சட்டப்படி செல்லும் - உச்சநீதிமன்றம் உத்தரவு

2024 செப்டம்பர் மாதத்துக்குள், ஜம்மு காஷ்மீரில் தேர்தல் நடத்த வேண்டும் - உச்சநீதிமன்றம்

2024 செப்டம்பர் மாதத்துக்குள், ஜம்மு காஷ்மீரில் தேர்தல் நடத்த வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

ஒன்றிய அரசின் ஒவ்வொரு நடவடிக்கையையும் கேள்விக்குள்ளாக்க முடியாது - உச்சநீதிமன்றம்

ஒன்றிய அரசின் ஒவ்வொரு நடவடிக்கையையும் கேள்விக்குள்ளாக்க முடியாது. தேர்தல் நடத்தி ஜம்மு காஷ்மீருக்கு மாநில அந்தஸ்தை வழங்கவேண்டும் - உச்சநீதிமன்றம்

சட்டப்பிரிவு 370 : ஏற்பாடு தற்காலிகமானது - தலைமை நீதிபதி சந்திரசூட்

சட்டப்பிரிவு 370 நீக்கம் - 3 விதமான தீர்ப்புகள்

சட்டப்பிரிவு 370 நீக்கம் - 3 விதமான தீர்ப்புகள் 


சட்டப்பிரிவு 370 நீக்கம் தொடர்பான வழக்கில், 3 விதமான தீர்ப்புகள் வழங்கப்பட்டுள்ளன

தீர்ப்புக்காக காத்திருக்கும் தலைமை வழக்கறிஞர் வெங்கடரமணி..!

மத்திய அரசின் தலைமை வழக்கறிஞர் வெங்கடரமணி, சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, மூத்த வழக்கறிஞர் ராகேஷ் திரிவேதி ஆகியோர் நீதிமன்றத்துக்கு வந்துள்ளனர். 

இன்னொரு அயோத்தி வழக்கின் தீர்ப்பாக அமையலாம்: எம்.பி. ரவிக்குமார் கருத்து

ஜம்மு காஷ்மீர் வழக்கின் தீர்ப்பு இன்னொரு அயோத்தி வழக்கின் தீர்ப்பாக அமையலாம் என நாடாளுமன்ற உறுப்பினர் ரவிக்குமார் கருத்து தெரிவித்துள்ளார்.





மக்களுக்கு ஆதரவாக தீர்ப்பு இருக்கும் என நம்புகிறோம் - நேஷனல் கான்பரன்ஸ் எம்.பி ஹஸ்னைன் மசூதி

உச்சக்கட்ட பாதுகாப்பு வளையத்திற்குள் கொண்டு வரப்பட்ட ஜம்மு காஷ்மீர்

சட்டப்பிரிவு 370 ரத்து தொடர்பான வழக்கில் இன்று தீர்ப்பு வெளியாகியுள்ள நிலையில், ஜம்மு காஷ்மீர் முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

சட்டப்பிரிவு 370 ரத்து செல்லுமா? செல்லாதா? 10:30 மணிக்கு தீர்ப்பு

சட்டப்பிரிவு 370ஐ நீக்கி மத்திய அரசு எடுத்த நடவடிக்கைக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில் இன்று காலை 10:30 மணிக்கு தீர்ப்பு வெளியாகிறது.

அரசியல் சாசனப்படி தீர்ப்பு அமையும் என எதிர்பார்க்கிறோம் - ஜம்மு காஷ்மீர் அவாமி தலைவர் முசாபர் அஹ்மெத்

Background

ஜம்மு காஷ்மீருக்கு வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்தை மத்திய அரசு நீக்கியதற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் 23 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இந்திய தலைமை நீதிபதி டி. ஒய். சந்திரசூட், நீதிபதிகள் சஞ்சய் கிஷன் கவுல், சஞ்சீவ் கண்ணா, பி.ஆர். கவாய் மற்றும் சூர்யா காந்த் ஆகியோர் கொண்ட அமர்வு இந்த வழக்கை விசாரித்து வந்தது.


ஜம்மு காஷ்மீர் வழக்கு:


இதன் மீதான விசாரணை, கடந்த ஆகஸ்ட் 2ஆம் தேதி தொடங்கி 16 நாள்கள் நடைபெற்றது. ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கிய அரசியலமைப்பு சட்டப்பிரிவு 370 நீக்கப்பட்டது தொடர்பாக மத்திய அரசுக்கும் மனுதாரர் தரப்புக்கும் இடையே பரபர வாதம் நடைபெற்றது. இரு தரப்பு வாதம் நிறைவுபெற்றதை தொடர்ந்து, வழக்கின் தீர்ப்பு கடந்த செப்டம்பர் மாதம் 6ஆம் தேதி, தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது.


இந்த நிலையில், பெரும் எதிர்பார்ப்பை கிளப்பியுள்ள வழக்கின் தீர்ப்பு இன்று (டிசம்பர் 11) வெளியாக உள்ளது. அரசியலமைப்பு வகுத்த சட்ட விதிகளின்படி, சட்டப்பிரிவு 370ஐ மத்திய அரசு நீக்கியதா? அல்லது சட்ட விரோதமாக நீக்கப்பட்டதா? என்பது குறித்து தீர்ப்பில் தெரிவிக்கப்பட உள்ளது.


ஜம்மு காஷ்மீர் விவகாரத்தில் மத்திய அரசு எடுத்த நடவடிக்கைக்கு எதிராக கபில் சிபல், கோபால் சுப்ரமணியம், துஷ்யந்த் தவே, ராஜீவ் தவான் உள்ளிட்ட 18 வழக்கறிஞர்கள் வாதிட்டனர். சட்ட விதிகளுக்கு உட்பட்டே சட்டப்பிரிவு 370 நீக்கப்பட்டதாக மத்திய அரசின் தலைமை வழக்கறிஞர் ஆர். வெங்கடரமணி, சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா உள்ளிட்டவர்கள் வாதம் மேற்கொண்டனர்.


மத்திய அரசின் வாதம்:


ஜம்மு காஷ்மீர் அரசியல் நிர்ணய சபை கலைக்கப்பட்டதன் விளைவாக அதன் சட்டப் பேரவை உருவாக்கப்பட்டது என மத்திய அரசு வாதிட்டது. ஜம்மு காஷ்மீரில் குடியரசு தலைவர் ஆட்சி அமலில் இருந்துபோது, ஜம்மு காஷ்மீர் சட்டப்பேரவை தற்காலிகமாக செயல்படாமல் இருந்தது. இதன் மூலம், நாடாளுமன்றத்தின் ஒப்புதலோடு அரசியலமைப்பு சட்டப்பிரிவு 370ஐ நீக்க மத்திய அரசுக்கு அதிகாரம் பெற்றுள்ளதாக வாதிடப்பட்டது.


அரசியலமைப்பின்படியே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாகவும் மத்திய, மாநில அரசுகளுக்கு இடையேயான கூட்டாட்சி தத்துவத்தை மீறவில்லை என்றும் வாதம் மேற்கொள்ளப்பட்டது.


மனுதாரர் தரப்பு வாதம்:


மாநிலத்தின் உரிமைகளையும் அரசியலமைப்பின்படி உருவாக்கப்பட்ட ஜம்மு காஷ்மீர் சட்டப்பேரவையின் உரிமைகளையும் மத்திய அரசு தன்னிச்சையாக மீறியுள்ளதாக மனுதாரர் தரப்பு வாதிட்டது. மாநிலத்தைப் பிரிக்கும் முன், சட்டப்பேரவையில் மக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் சட்டப்பேரவை உறுப்பினர்களின் ஒப்புதலைப் பெறுவது அடிப்படைத் தேவை என்றும் வாதிடப்பட்டது. இந்த முக்கியமான நடவடிக்கையை புறக்கணித்ததன் மூலம், மாநிலத்தின் சுயாட்சியை மத்திய அரசு ஆக்கிரமித்துள்ளது. மத்திய-மாநில உறவுகளின் அடிப்படைக் கொள்கைகளை மட்டுப்படுத்தியுள்ளது.

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2024.ABP Network Private Limited. All rights reserved.