Army Chief Gen Naravane Takes Charge As Head Of Chiefs Of Staff Committee : முப்படைத் தளபதிகள் குழுவின் தலைவராக தற்போதைய ராணுவ தளபதி நரவானே நியமிக்கப்பட்டுள்ளார்.


முன்னதாக, நாட்டின் முப்படைத் தளபதி பிபின் ராவத் உயிரிழந்த நிலையில்,  முப்படைத் தளபதிகள் குழுத் தலைவர் பதவி காலியாக இருந்தது. இதன், தற்காலிக தலைவராக  நரவானே நியமிக்கப்பட்டுள்ளார்.     


 



ராணுவ தளபதி நரவானே


 


முப்படைத் தளபதிகள் குழுவின் தலைவர் (Chairman of chief of staff committee) என்றால் என்ன?  நாட்டின் முப்படை அமைப்புகளை நிர்வகிக்கும் பொறுப்பு இவருக்கு உண்டு. முப்படை முகமைகள் / அமைப்புகள் / கணினி மற்றும் விண்வெளி தொடர்பான தலைமை ஆகியன பாதுகாப்பு படைகளின் தலைமைத் தளபதி கட்டுப்பாட்டில் இயங்கும். இந்தியப் பாதுகாப்புப் படைகளின் தலைவர்களாக உள்ளவர்களில் ஒருவர் தலைவராக இருந்து வந்தார்.


இந்நிலையில், கடந்த 2019ம் ஆண்டு நாட்டின் முப்படைத் தலைமை தளபதி என்ற நான்கு நட்சத்திர ஜென்ரல் பதவியிடத்தை மத்திய அரசு உருவாக்கியது. இவரே,  முப்படைத் தளபதிகள் குழுவுக்கு நிரந்தரத் தலைவராக இருப்பார் என்றும் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து, மறைந்த ஜெனரல் பிபின் ராவத்  முப்படைத் தளபதிகள் குழுவின் நிரந்தரத் தலைவராக செயல்பட்டு வந்தார். 




முப்படைத் தளபதிகள் குழுவுக்கு நிரந்தரத் தலைவர் என்ற முறையில், முப்படை தலைமைத் தளபதி கீழ்க்கண்ட செயல்பாடுகளுக்குப் பொறுப்பேற்பார்:



  1. பாதுகாப்புப் படைகளின் தலைமைத் தளபதி பாதுகாப்பு அமைச்சர் தலைமையிலான பாதுகாப்பு கொள்முதல் குழு, தேசிய பாதுகாப்பு ஆலோசகர் தலைமையிலான பாதுகாப்பு திட்டமிடல் குழு ஆகியவற்றின் உறுப்பினராகவும் இருப்பார்.

  2. அணுஆயுதப் படை ஆணையத்தின் ராணுவ ஆலோசகராக செயல்படுவார்.

  3. முப்படைகளின் செயல்பாடுகள், போக்குவரத்து, பயிற்சி, ஆதரவுச் சேவைகள், தொலைத்தொடர்பு, பழுதுபார்ப்புப் பணிகள், பராமரிப்புப் பணிகள் ஆகியவற்றில் கூட்டுத் தன்மையை கொண்டு வருவது.

  4. அடிப்படை வசதிகளை அதிகபட்சம் பயன்படுத்துவதை உறுதி செய்தல்.

  5. ஐந்தாண்டு கால பாதுகாப்பு மூலதனக் கொள்முதல் திட்டத்தை செயல்படுத்துதல்.  இரண்டாண்டு கால கொள்முதல் திட்டங்கள் செயல்பாட்டைக் கண்காணித்தல்.

  6. பட்ஜெட் அடிப்படையில் மூலதனக் கொள்முதல் திட்டங்களுக்கு முப்படைகளிடையே முன்னுரிமையை நிர்ணயித்தல்.
    போர் திறன்களை வலுப்படுத்தும் நோக்கத்துடன் முப்படைகளின் செயல்பாட்டில் சீர்திருத்தங்களைக் கொண்டு வருதல். 


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்



ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடிபில் வீடியோக்களை காண