ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த சாய் தேஜாவின் குடும்பத்திற்கு ரூ.50 லட்சம் வழங்கப்படும் என ஆந்திர முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி அறிவித்துள்ளார். இவர்களின் குடும்பத்தினருக்கு ஆந்திர மாநிலத்தின் சார்பிலும் இரங்கல் தெரிவிக்கப்பட்டது.
தற்போது, ராணுவ வீரர் சாய் தேஜாவின் உடல் பெங்களூர் விமானப்படைத் தளத்திற்கு கொண்டுவரப்பட்டுள்ளது. அவரது உடலுக்கு ராணுவ வீரர்கள் மரியாதையை செலுத்தி வருகின்றனர்.
முன்னதாக, நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே காட்டேரி பகுதியில், அடர் பனிமூட்டம் காரணமாக ராணுவ ஹெலிகாப்டர் விழுந்து விபத்துக்கு உள்ளானது. யுள்ளது. ஹெலிகாப்டரில் 14 பேர் பயணித்த நிலையில், காட்டேரி என்ற இடத்தில் திடீரென கடந்த புதன்கிழமை விபத்து ஏற்பட்டது. இதில் படுகாயமடைந்த நிலையில் பல்வேறு நபர்கள் மீட்கப்பட்டு வெலிங்டன் ராணுவ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். எனினும் சிகிச்சைப் பலனின்றி, 13 பேர் உயிரிழந்தனர்.
அதில், முப்படைகளின் தளபதி பிபின் ராவத், அவரது மனைவி மதுலிகா ராவத், ராணுவ வீரர்கள் லிட்டெர், ஹர்ஜிந்தர் சிங், குருசேவாக் சிங், ஜிதேந்தர் குமார், விவேக் குமார், சாய் தேஜா, சாத்பால், சவுஹான், குல்தீப், பிரதீப், தாஸ் ஆகிய 13 பேர் உயிரிழந்தனர். கேப்டன் வருண் சிங் மட்டும் மருத்துவமனையில் 80% தீக்காயங்களுடன் அனுமதிக்கப்பட்டு பெங்களூரு மருத்துவமனையில் சிகிச்சைப்பெற்று வருகிறார்.
இந்தநிலையில், பிபின் ராவத்தோடு ஆந்திர மாநிலம் ரெகாடா கிராமத்தைச் சேர்ந்த 27 வயதான சாய் தேஜா என்ற ராணுவ வீரரும் ஹெலிகாப்டரில் பயணித்தார். அவரும் இந்த விபத்தின் மூலம் உயிரிழந்துள்ளார். இந்த செய்தியை அறிந்த அவரது குடும்பத்தினரும் சொந்த கிராமத்தினரும் மிகுந்த துரத்தில் ஆழ்ந்துள்ளனர்.
மேலும் இன்றைய முக்கியச் செய்திகள்...
ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்