Aditya L1 Launch LIVE: ஆதித்யா எல் 1 விண்கலம் - பிரதமர் நரேந்திர மோடி பெருமிதம்..

Aditya L1 Mission Launch LIVE Updates: சந்திரயான் சாதனை படைத்ததை தொடர்ந்து அடுத்த சாதனையை படைக்க தயார் நிலையில் உள்ளது இஸ்ரோ. சூரியனை ஆராய ஆதித்யா எல்1 என்ற விண்கலத்தை இஸ்ரோ தயார் செய்துள்ளது. 

ஆர்த்தி Last Updated: 02 Sep 2023 01:39 PM
ஆதித்யா எல் 1 விண்கலம் - பிரதமர் நரேந்திர மோடி பெருமிதம்..

சூரியனை ஆய்வு செய்வதற்கான முதல் மிஷன் ஆதித்யா எல் 1, இதனை செயல்படுத்தியதறகாக இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு தனது வாழ்த்துக்களை பிரதமர் மோடி தெரிவித்துக்கொண்டார். மேலும் ஆதித்யா எல் 1 விண்கலம் வெற்றிகரமாக ரக்கெட்டில் இருந்து பிரிந்து, தற்போது பூமியின் சுற்றுப்பாதையில் நிலை நுழைந்துள்ளதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது. 





சாதனை படைத்த இஸ்ரோ.. ராக்கெட்டிலிருந்து பிரிந்தது ஆதித்யா எல் 1 விண்கலம்..

சூரியனை ஆய்வு செய்யும் ஆதித்யா எல் 1 விண்கலம் ஆந்திரா மாநிலம் ஸ்ரீஹரிக்கோட்டாவில் இருந்து வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது. அதனை தொடர்ந்து ராக்கெட்டில் இருந்து வெற்றிகரமாக விண்கலம் பிரிந்ததாக இஸ்ரோ தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

பூமியில் இருந்து 250 கிமீ தொலைவில் ஆதித்யா எல் 1.. இடைவிடாமல் கண்காணிக்கும் இஸ்ரோ விஞ்ஞானிகள்..

சூரியனை ஆய்வு செய்யும் ஆதித்யா எல் 1 விண்கலம் ஆந்திரா மாநிலம் ஸ்ரீஹரிக்கோட்டாவில் இருந்து வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது. தற்போது விண்கலத்தின் செயல்பாடுகள அனைத்தும் இயல்பாக இருப்பதாகவும் 3 ஆம் கட்டம் வெற்றிகரமாக பிரிந்ததாகவும் கூறப்பட்டுள்ளது. 

வெற்றிகரமாக விண்ணில் சீறிப்பாய்ந்த ஆதித்யா எல் 1 விண்கலம்.. விண்கலத்தின் செய்லபாடுகள் எப்படி உள்ளது?

சூரியனை ஆய்வு செய்யும் ஆதித்யா எல் 1 விண்கலம் ஆந்திரா மாநிலம் ஸ்ரீஹரிக்கோட்டாவில் இருந்து வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது. விண்கலம் மூன்றாம் நிலையை அடைந்துள்ள நிலையில், செய்லபாடுகள் திருப்திகரமாக உள்ளது என இஸ்ரோ விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். 

சாதனை படைத்த இஸ்ரோ.. விண்ணில் சீறிப்பாய்ந்த ஆதித்யா எல் 1 விண்கலம்..

சூரியனை ஆய்வு செய்யும் ஆதித்யா எல் 1 விண்கலம் ஆந்திரா மாநிலம் ஸ்ரீஹரிக்கோட்டாவில் இருந்து சரியாக காலை 11.50 மணிக்கு வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது. 

இன்னும் 2 நிமிடங்கள் தான்.. இறுதிகட்ட பணிகள் நிறைவு.. விண்ணில் ஏவப்படும் ஆதித்யா எல் 1 விண்கலம்..

சூரியனை ஆய்வு செய்யும் ஆதித்யா எல் 1 விண்கலம் ஆந்திரா மாநிலம் ஸ்ரீஹரிக்கோட்டாவில் இருந்து சரியாக காலை 11.50 மணிக்கு விண்ணில் ஏவப்படுகிறது. இதற்கான இறுதிகட்ட பணிகள் அனைத்தும்  நிறைவடைந்துள்ளதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது. 

இன்னும் சில நிமிடங்கள் தான்.. தயார் நிலையில் ஆதித்யா எல் 1 விண்கலம்..

சூரியனை ஆய்வு செய்வதற்காக இந்தியாவின் முதல் விண்வெளி அடிப்படையிலான சூரிய ஆய்வகமான ஆதித்யா-எல் 1 ஐ இஸ்ரோ இன்று காலை 11:50 க்கு விண்ணில் செலுத்த உள்ளது. ஆதித்யா-எல்1 பிஎஸ்எல்வி-எக்ஸ்எல் ராக்கெட்டில் ஏவப்படுகிறது. பிஎஸ்எல்வி-சி57 என்றும் அழைக்கப்படும் இந்த பணி, பிஎஸ்எல்வியின் 59வது விமானத்தையும், பிஎஸ்எல்வி-எக்ஸ்எல் ராக்கெட்டின் 25வது விமானத்தையும் குறிக்கிறது. ஆதித்யா-எல்1 பூமியை இணைக்கும் சுற்றுப்பாதையில் நிலைநிறுத்தப்படும்.

காலநிலை மாற்ற ஆய்வுகளுக்கு பயனளிக்கும் ஆதித்யா எல் 1 தரவுகள் - இஸ்ரோவின் முன்னாள் தலைவர் மாதவன் நாயர்

இஸ்ரோவின் முன்னாள் தலைவர் ஜி மாதவன் நாயர் கூறுகையில், ஆதித்யா-எல்1 சேகரிக்கும் தரவுகள் வளிமண்டலத்தில் நிகழும் பல்வேறு நிகழ்வுகளை விளக்க உதவும் என்றும், காலநிலை மாற்ற ஆய்வுகளுக்கு பயனுள்ளதாக இருக்கும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.





இன்னும் ஒரு மணி நேரம் தான்.. சீறிப்பாயும் ஆதித்யா எல் 1 விண்கலத்தை காண திரண்ட மாணவர்கள்..

இன்னும் ஒரு மணி நேரத்தில் ஆதித்யா எல் 1 விண்கலம் ஸ்ரீஹரிக்கோட்டாவிலிருந்து விண்ணில் செலுத்தப்பட இருக்கும் நிலையில், இதனை நேரில் காண ஏராளமான பள்ளி மாணவர்கள் வந்துள்ளனர். 





Aditya L1 Launch LIVE: இன்னும் சற்று நேரத்தில் விண்ணில் பாயும் ஆதித்யா எல்.1!

இன்னும் சற்று நேரத்தில் விண்ணில் பாய உள்ள ஆதித்யா எல்.1 விண்கலம் குறித்து நாடு முழுவதும் உள்ள ஆராய்ச்சிகளர், விஞ்ஞானிகள் கருத்து தெரிவித்து வருகின்றனர். டெல்லியில் உள்ள ஜவஹர்லால் நேரு கோளரங்கின் ப்ரோகிராமிங் மேலாளர் ப்ரெனா சந்திரா கூறுகையில், “உலக நாடுகள் சூரியன் பற்றி ஆராய்ச்சி நடத்தியுள்ளது. இன்று இந்தியா சார்பில் அனுப்பப்படும் ஆதித்யா எல்.1 மூலம் சூரியனை பற்றி பல்வேறு விவரங்கள் தெரிய வரும். இதன் மூலம் விண்வெளியில் உள்ள முக்கியமான விசயங்கள் தெரிய வரும்.” என்று தெரிவித்துள்ளார்.


 





Aditya L1 Launch LIVE: ஆதித்யா எல்.1 விண்கலம் - சதீஷ் தவான் விண்வெளி மையத்தில் பள்ளி மாணவர்கள் பார்வை

ஆதித்யா எல்1 விண்கலம் விண்ணில் பாய்வதற்கான  கவுண்டவுன் நேற்று தொடங்கியது. இந்நிலையில் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து இன்று காலை 11.50 மணிக்கு ஆதித்யா எல்1 விண்கலம் விண்ணில் ஏவப்படுகிறது. சூரியனை ஆய்வு செய்யும் முதல் இந்திய விண்கலம் இதுதான். PSLV C-57 என்ற ராக்கெட் மூலம் இந்த விண்கலம் விண்ணிற்கு அனுப்பப்படுகிறது. இந்நிலையில் சதீஷ் தவான் விண்வெளி மையத்தில் பள்ளி மாணவர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றன.


 





ஆதித்யா எல் 1 வெற்றிகரமாக விண்ணில் செலுத்த சிறப்பு பூஜைகள்..

உத்திர பிரதேசம்: ஆதித்யா எல் 1 விண்கலம் இன்னும் சற்று நேரத்தில் விண்ணில் செலுத்தப்பட இருக்கும் நிலையில், வெற்றுகரமாக விண்ணில் செலுத்தப்பட வேண்டும் என்பதற்காக வாரணாசியில் ஹோமம் வளர்த்து சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. 





உலக நாடுகளின் சாதனையை முறையடிக்குமா இந்தியா? விண்ணில் பாயும் ஆதித்யா எல் 1 விண்கலம்..

ஏற்கனவே அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் மட்டுமே சூரியனை ஆராய பிரத்யேக செயற்கைக்கோள்களை அனுப்பியுள்ளன. அதில், கடந்த 2017ம் ஆண்டு விண்ணில் செலுத்தப்பட்ட அமெரிக்காவின் பார்க்கர் சோலார் ப்ரோப் செயற்கைக்கோள் அதிகபட்சமாக, புவியிலிருந்து 8.5 மில்லியன் கிலோ மீட்டர் தூரம் சென்று சூரியனை ஆய்வு செய்து உள்ளது. இந்த வரிசையில் தற்போது இந்தியா இணைய உள்ளது. ஆனால், மற்ற நாடுகளை காட்டிலும் மிகக் குறைந்த செலவிலேயே ஆதித்யா எல்1 திட்டம் செயல்படுத்தப்படுவது குறிப்பிடத்தக்கது. 


இன்னும் சில மணி நேரம் தான்.. விண்ணில் சீறிப்பாயும் ஆதித்யா எல் 1..

இன்று காலை சரியாக 11.50 மணிக்கு ஆந்திரா மாநிலம் ஸ்ரீஹரிக்கோட்டாவிலிருந்து பிஎஸ்எல்வி ராக்கெட் மூலம் ஆதித்யா எல் 1 விண்கலம் விண்ணில் செலுத்தப்படுகிறது. இதற்கான இறுதிக்கட்ட பணிகள் அனைத்தும் நிறைவடைந்து தயார் நிலையில் இருப்பதாக இஸ்ரோ தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.  

ஹாலோ ஆர்பிட் என்றால் என்ன? இதற்கு ஏன் இந்த பெயர் சூட்டப்பட்டது?

ஹாலோ ஆர்பிட் என்பது முதல் மூன்று லெக்ராஞ்சிய புள்ளிகளுக்கு அருகே அமைந்துள்ள ஒரு முப்பரிமாண சுற்றுவட்டப்பாதையாகும். வழக்கமாக மனிதர்கள் செலுத்தும் செயற்கைக்கோள்கள் ஏற்கனவே ஒரு கோள் அல்லது துணைக்கோள் பயணிக்கும் நிர்ணயிக்கப்பட்ட சுற்றுவட்டப்பாதையில் தான் பயணிக்கும். ஆனால், இந்த ஹாலோ ஆர்பிட்டில் எந்த ஒரு இயற்கையான கோளோ அல்லது துணைக்கோளோ இருப்பது இல்லை. ஆனால், லெக்ராஞ்சிய புள்ளிகளுக்கு உள்ள விநோதமான தனித்தன்மை காரணமாக, அங்கு எழும் மைய நோக்கு விசையை பயன்படுத்தி செயற்கைகோள்கள் நீள்வட்டப்பாதையில் பயணித்து வருகின்றன.

லெக்ராஞ்சியப் புள்ளி என்றால் என்ன? அதனை தேர்வு செய்ய என்ன காரணம்?

இரண்டு பெரும் வான்பொருட்களின் சுற்றுப்பாதைகளின் இடையே, அவற்றின் ஈர்ப்பு விசை தாக்கத்தால் ஓர் சிறிய வான்பொருள் நிலையான இடத்தை தக்கவைத்துக் கொள்ளக்கூடிய புள்ளி தான் லெக்ராஞ்சியப் புள்ளி என அழைக்கப்படுகிறது. அந்த பகுதியில்இரு பெரும் வான்பொருட்களின் ஈர்ப்புவிசைகளின் கூட்டுவிசையால்சிறுபொருள் அவற்றைச் சுற்ற தேவையான மையநோக்கு விசையைத் தருகின்றது. இரண்டு பெரிய வான்பொருட்களின் சுற்றுப்பாதை தளத்தில் இத்தகைய புள்ளிகள் ஐந்து உள்ளன. அவற்றில்  எல்1,எல்2 மற்றும் எல் 3 ஆகியவை ஒரே நேர்க்கோட்டில் அமைந்துள்ளன என்பதை பிரான்சை சேர்ந்த ஆராய்ச்சியாளர் லெக்ராஞ்சி என்பவர் கண்டறிந்தார். சூரியன் மட்டுமின்றி வியாழன் போன்ற மற்ற கிரகங்களுக்கும் இதுபோன்ற லெக்ராஞ்சிய புள்ளிகள் உள்ளன.


இந்த புள்ளியை தேர்ந்தெடுப்பதன் மூலம் ஆதித்யா எல்1 விண்கலம் பூமியின் ஈர்ப்பு விசைக்கும் செல்லாமல் சூரியனின் ஈர்ப்பு விசைக்குள்ளும் செல்லாமல் நிலையான இடத்தில் இருண்டு ஆய்வு மேற்கொள்ளும்

ஆதித்யா எல்1 சுமந்து செல்லும் 7 முக்கிய கருவிகள்.. இவற்றின் பணி என்ன?

சூரியனை பற்றி ஆய்வு செய்ய விஇஎல்சி (Visible Emission Line Coronagraph) என்ற தொலைநோக்கி, எஸ்யுஐடி ( Solar Ultraviolet Imaging Telescope) என்ற தொலைநோக்கி, ஏ ஸ்பெக்ஸ் (Aditya Solar wind Particle Experiment) என்ற சூரிய காற்றின் தன்மைகளை ஆய்வு செய்யும் கருவி, சூரிய சக்தியை ஆராயும் பிஏபிஏ ( Plasma Analyser Package for Aditya ), சூரியனின் எக்ஸ்ரே கதிர்கள் மற்றும் வெப்பத்தை கண்காணிக்கும் சோலெக்ஸ் ( Solar Low Energy X-ray Spectrometer) உள்ளிட்ட முக்கிய கருவிகள் ஆதித்யா எல்1 –ல் உள்ளன. 

சூரியனுக்கு செல்லும் ஆதித்யா எல்1.. இதன் நோக்கம் என்ன?

பூமிக்கு மிக அருகில் உள்ள நட்சத்திரம் தான் சூரியன். சூரியனிலிருந்து ஒரு குறிப்பிட்ட  தூரத்தில் செயற்கைகோளை நிலைநிறுத்தி, அதன் மூலம் சூரியனின் செயல்பாடுகள் தொடர்பாக ஆராய்வது தான் ஆதித்யா எல்1 திட்டத்தின் நோக்கம். செப்டம்பர் 2ம் தேதி தொடங்கி 4 மாதங்கள் பயணித்து இலக்கை அடைய உள்ளது.

ஆதித்யா எல் 1 விண்ணில் பாய்வதை காண 10 ஆயிரம் பேர் முன்பதிவு..

ஆதித்யா எல்1 விண்ணில் செலுத்தப்படும் நிகழ்வை காண சுமார் 10,000 பேர் முன்பதிவு செய்துள்ளனர். ஆகஸ்ட் 29 ஆம் தேதி முன்பதிவு தொடங்கிய 7 நிமிடங்களில், மொத்த முன்பதிவும் முடிந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

சூரியனின் மேற்பரப்பை மட்டுமே ஆய்வு செய்யும் ஆதித்யா எல் 1.. இஸ்ரோ சொன்னது என்ன?

சூரியன் வாயுவால் நிறைந்த ஒரு நட்சத்திரமாகும், ஆதித்யா-எல்1 சூரியனின் வெளிப்புற வளிமண்டலத்தை மட்டுமே ஆய்வு செய்யும். ஆதித்யா-எல்1 சூரியனுக்கு அருகில் அல்லது சூரியனில் தரையிறங்காது என இஸ்ரோ தெளிவு படுத்தியுள்ளது.





பூமியில் இருந்து சுமார் 1.5 மில்லியன் கிமீ தொலைவில் நிலை நிறுத்தப்படும் ஆதித்யா எல்1..

இன்று விண்ணில் செலுத்தப்படும் ஆதித்யா-எல்1 பூமியில் இருந்து சுமார் 1.5 மில்லியன் கிமீ தொலைவில் இருக்கும், இது பூமிக்கும் சூரியனனுக்கும் இடையே இருக்கு தூரத்தில் 1% மட்டுமே ஆகும் என இஸ்ரோ தெரிவித்துள்ளது. 





சூரியனுக்கு பறக்கும் ஆதித்யா எல் 1.. 24 மணி நேர கவுண்டவுன்..

விண்வெளியில் இருந்தவாறு சூரியனை ஆய்வு செய்யவுள்ள ஆதித்யா எல்1, இன்று காலை 11.50 மணிக்கு ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து விண்ணில் ஏவப்படும் என்று இஸ்ரோ தெரிவித்துள்ளது. இதற்கான 24 மணி நேர கவுண்டவுன் நேற்று காலை 11.50 மணிக்கு தொடங்கியது. 

சூரியனை ஆய்வு செய்யும் ஆதித்யா எல்1.. எப்போது விண்ணில் ஏவப்படும்?

விண்வெளியில் இருந்தவாறு சூரியனை ஆய்வு செய்யவுள்ள ஆதித்யா எல்1, பி.எஸ்.எல்.வி ராக்கெட் மூலம் இன்று (செப்டம்பர் 2 ஆம் தேதி) காலை 11.50 மணிக்கு ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து விண்ணில் ஏவப்படும் என்று இஸ்ரோ தெரிவித்துள்ளது.

Background

சந்திரயான் சாதனை படைத்ததை தொடர்ந்து அடுத்த சாதனையை படைக்க தயார் நிலையில் உள்ளது இஸ்ரோ. சூரியனை ஆராய ஆதித்யா எல்1 என்ற விண்கலத்தை இஸ்ரோ தயார் செய்துள்ளது. 


இந்த ஆதித்யா எல்1 விண்கலம் விண்ணில் பாய்வதற்கான  கவுண்டவுன் நேற்று தொடங்கியது. இந்நிலையில் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து இன்று காலை 11.50 மணிக்கு ஆதித்யா எல்1 விண்கலம் விண்ணில் ஏவப்படுகிறது. சூரியனை ஆய்வு செய்யும் முதல் இந்திய விண்கலம் இதுதான். PSLV C-57 என்ற ராக்கெட் மூலம் இந்த விண்கலம் விண்ணிற்கு அனுப்பப்படுகிறது. 


1,485 கிலோ எடை கொண்ட ஆதித்யா எல்1 விண்கலம் 125 நாட்கள் பயணம் மேற்கொண்டு எல்1 பகுதியை அடையும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. பூமியிலிருந்து 15 லட்சம் கி.மீ தொலைவில் லாக்ராஞ்சியன் பாயிண்ட் ஒன் எனும் பகுதியில் நிலைநிறுத்தப்படும். ஆதித்யா எல்1 விண்கலம் சூரியனின் வெப்பசூழல், கதிர்வீச்சு உள்ளிட்டவை குறித்து ஆய்வு மேற்கொள்ளும். 

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2024.ABP Network Private Limited. All rights reserved.