மேலும் அறிய

Adani: பூரி ஜெகன்னாதர் கோயிலில் அதானி.. லட்சக்கணக்கான பக்தர்களுக்கு பிரசாத சேவை

உலகப் புகழ்பெற்ற ஒடிசா பூரி ஜெகன்னாதர் கோயிலில் சாமி தரிசனம் செய்வதற்கு தொழிலதிபர் அதானி சென்றுள்ளார்.

ஒடிசாவில் அமைந்துள்ளது பூரி ஜெகன்னாதர் கோயில். 1500 ஆண்டுகள் பழமையான இந்த கோயில் வட இந்தியாவின் அடையாளங்களில் ஒன்றாக கருதப்படுகிறது. பூரி ஜெகன்னாதர் கோயில் ரத யாத்திரையில் பங்கேற்க ஆண்டுதோறும் கோடிக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பது வழக்கம்.

பூரி ஜெகன்னாதர் கோயிலில் அதானி:

பூரி ஜெகன்னாதர் கோயில் ரத யாத்திரையில் அதானி குழுமம் சார்பில் பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட உள்ளது. கடந்த 26ம் தேதி முதல் வரும் ஜுலை 8ம் தேதி வரை பக்தர்களுக்கு இந்த பிரசாதம் வழங்கப்பட உள்ளது. இந்த நிலையில் பூரி ஜெகன்னாதர் கோயிலில் சாமி தரிசனம் செய்வதற்காக அதானி இன்று ஒடிசா சென்றுள்ளார். 

விமானம் மூலமாக அவர் ஒடிசாவில் உள்ள புவனேஸ்வர் விமான நிலையத்திற்கு வந்திறங்கினார். இவர் இன்னும் சற்று நேரத்தில் கோயிலுக்குச் சென்று சாமி தரிசனம் செய்ய உள்ளார். பூரி ஜெகன்னாதர் கோயிலில் ஏற்கனவே பக்தர்கள் லட்சக்கணக்கில் குவிந்து வரும் நிலையில், அதானி உள்ளிட்ட பிரபலங்கள் சாமி தரிசனம் செய்வதற்கும் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. 

பிரசாத சேவை:

ஒடிசாவின் தகிக்கும் வெப்பத்தில் சாமி தரிசனம் செய்ய வரும் பக்தர்களை மகிழ்விக்கும் விதமாக 40 லட்சம் மக்களுக்கு உணவுகள், குளிர்பானங்கள் வழங்க அதானி குழுமம் முடிவு செய்துள்ளது. பூரியில் உள்ள மகாசங்காவில் உள்ள கடற்படை வீரர்கள், கடற்கரையை சுத்தம் செய்பவர்கள் ஆகியோரையும் சிறப்பிக்க அதானி குழுமம் முடிவு செய்துள்ளது. பூரி செல்லும் அதானி அவர்களைச் சந்திக்க உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. 

உத்தரபிரதேசத்தில் உள்ள பிரக்யாராஜில் நடந்த மகாகும்பமேளாவில் பங்கேற்ற பக்தர்களுக்கும் அதானி குழுமம் சார்பில் பிரசாதம் வழங்கப்பட்டது. பூரி ஜெகன்னாதர் கோயில் திருவிழா நடக்கும் வரும் 8ம் தேதி வரை பக்தர்கள் கூட்டம் அலைமோதும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால், போலீசார், தீயணைப்புத் துறையினர் தீவிர முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்துள்ளனர். 

பலத்த பாதுகாப்பு:

இன்று அங்கு கூட்ட நெரிசலில் சிக்கி 500க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். அவர்களில் பலரும் மயக்கம் அடைந்தனர். அவர்கள் மீட்கப்பட்டு உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். பக்தர்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு ஏராளமான மருத்துவ முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளது. 

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

Magalir Urimai Thogai: இது தொடக்கமே.. மகளிர் உரிமைத் தொகை மேலும் உயரும்; முதலமைச்சர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு
இது தொடக்கமே.. மகளிர் உரிமைத் தொகை மேலும் உயரும்; முதலமைச்சர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு
ADMK BJP: அதிமுக கூட்டணி.. அமித்ஷாவிற்கு தலைவலி - இதுதான் சங்கதி!
ADMK BJP: அதிமுக கூட்டணி.. அமித்ஷாவிற்கு தலைவலி - இதுதான் சங்கதி!
PM Kisan 22nd Installment: பிரதம மந்திரி கிசான் நிதியின் 22-வது தவணை எப்போ வரும்.? அதுக்குள்ள விவசாயிகள் இத செஞ்சுடுங்க
பிரதம மந்திரி கிசான் நிதியின் 22-வது தவணை எப்போ வரும்.? அதுக்குள்ள விவசாயிகள் இத செஞ்சுடுங்க
Trump's C5 Plan.?: ஐரோப்பாவிற்கு G7; ஆசியாவிற்கு C5; ட்ரம்ப்பின் பலே பிளான்.? எந்தெந்த நாடுகள் தெரியுமா.?
ஐரோப்பாவிற்கு G7; ஆசியாவிற்கு C5; ட்ரம்ப்பின் பலே பிளான்.? எந்தெந்த நாடுகள் தெரியுமா.?
ABP Premium

வீடியோ

Magalir Urimai Thogai | ''மகளிருக்கு இன்னொரு CHANCE..!''கலைஞர் மகளிர் உரிமைத்தொகை
Rajinikanth 75th Birthday Celebration|’’ரஜினி என் குலசாமி!’’வீடு முழுக்க RAJINISMவியக்க வைத்த ரசிகர்
Tindivanam Bus Accident - டயர் வெடித்து விபத்து ஒருவர் பலி, 15 பேர் படுகாயம்; உதவிய விழுப்புரம் கலெக்டர்
Nainar Nagendran Meet EPS | டெல்லிக்கு அழைத்த அமித் ஷா; ஈபிஎஸ்-நயினார் திடீர் சந்திப்பு; அண்ணாமலை பலே ப்ளான்!
LAW & ORDER இனிமே இவர் கையில் தமிழகத்தின் புதிய பொறுப்பு DGPயார் இந்த அபய் குமார் சிங் IPS? | Abhay Kumar Singh | MK Stalin | TN New DGP

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Magalir Urimai Thogai: இது தொடக்கமே.. மகளிர் உரிமைத் தொகை மேலும் உயரும்; முதலமைச்சர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு
இது தொடக்கமே.. மகளிர் உரிமைத் தொகை மேலும் உயரும்; முதலமைச்சர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு
ADMK BJP: அதிமுக கூட்டணி.. அமித்ஷாவிற்கு தலைவலி - இதுதான் சங்கதி!
ADMK BJP: அதிமுக கூட்டணி.. அமித்ஷாவிற்கு தலைவலி - இதுதான் சங்கதி!
PM Kisan 22nd Installment: பிரதம மந்திரி கிசான் நிதியின் 22-வது தவணை எப்போ வரும்.? அதுக்குள்ள விவசாயிகள் இத செஞ்சுடுங்க
பிரதம மந்திரி கிசான் நிதியின் 22-வது தவணை எப்போ வரும்.? அதுக்குள்ள விவசாயிகள் இத செஞ்சுடுங்க
Trump's C5 Plan.?: ஐரோப்பாவிற்கு G7; ஆசியாவிற்கு C5; ட்ரம்ப்பின் பலே பிளான்.? எந்தெந்த நாடுகள் தெரியுமா.?
ஐரோப்பாவிற்கு G7; ஆசியாவிற்கு C5; ட்ரம்ப்பின் பலே பிளான்.? எந்தெந்த நாடுகள் தெரியுமா.?
Gold Rate Dec.13th: அய்யய்யோ.! தங்கம் விலை ரூ.99,000-த்தை நெருங்கியது; ஒரே நாளில் ரூ.2560 உயர்வு - இன்று விலை என்ன.?
அய்யய்யோ.! தங்கம் விலை ரூ.99,000-த்தை நெருங்கியது; ஒரே நாளில் ரூ.2560 உயர்வு - இன்று விலை என்ன.?
Magalir Urimai Thogai: மகளிர் உரிமை தொகை ரூ. 1000 கிடைக்கவில்லையா.! மீண்டும் ஒரு வாய்ப்பு- எப்போ தெரியுமா.?
மகளிர் உரிமை தொகை ரூ. 1000 கிடைக்கவில்லையா.! மீண்டும் ஒரு வாய்ப்பு- எப்போ தெரியுமா.?
Hyundai Verna: ரூ.13 லட்சம்தான் ஆரம்பம்.. ஹுண்டாய் Verna காரை வாங்கலாமா? வேண்டாமா?
Hyundai Verna: ரூ.13 லட்சம்தான் ஆரம்பம்.. ஹுண்டாய் Verna காரை வாங்கலாமா? வேண்டாமா?
TATA Sierra Speed Milage: 222 கி.மீ வேகம், 30 கி.மீ மைலேஜா.! என்னங்க சொல்றீங்க.?! சோதனையில் அசத்திய டாடா சியாரா
222 கி.மீ வேகம், 30 கி.மீ மைலேஜா.! என்னங்க சொல்றீங்க.?! சோதனையில் அசத்திய டாடா சியாரா
Embed widget