விமான நிலையத்துக்கு விமானம் வர தாமதமானதை தொடர்ந்து, நடிகை ராதிகா ஆப்தே உள்பட பல பயணிகள், ஏரோபிரிட்ஜின் உள்ளே 
வைத்து பூட்டப்பட்டனர். இதனால், பல மணி நேரம் தண்ணீர் இன்றியும் கழிவறைக்க செல்ல முடியாமலும் அவர்கள் தவித்த சம்பவம் பெரும் பரபரப்பை கிளப்பயுள்ளது. 


விமானத்தை சுற்றும் சர்ச்சைகள்:


சமீப காலமாக, விமானத்தில் தொடர்ந்து சர்ச்சை சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன. ஏர் இந்தியா விமானத்தில் வயதான பெண் பயணி மீது சக பயணி ஒருவர், சிறுநீர் கழித்த சம்பவம் பெரும் பிரச்னையாக மாறி, விமான நிறுவனத்திற்கு அபராதம் விதிக்கும் அளவுக்கு சென்றது. இந்த சம்பவத்தின் காரணமாக ஏற்பட்ட பரபரப்பு அடங்குவதற்கு முன்பாக விமான பணிப்பெண்ணிடம் பயணி ஒருவர் அத்துமீறிய சம்பவம் பெரும் பிரச்னையாக வெடித்தது.


இந்த நிலையில், கபாலி படத்தில் ரஜினிக்கு ஹீரோயினாக நடித்த ராதிகா ஆப்தே, வெளியூர் செல்வதற்காக விமான நிலையம் சென்றுள்ளார். ஆனால், அங்கு அவரின் விமான வர தாமதமாகியுள்ளது. இதனால், நடிகை ராதிகா ஆப்தே உள்பட பல பயணிகள், ஏரோபிரிட்ஜின் உள்ளே வைத்து பூட்டப்பட்டனர். 


இதன் விளைவாக, பல மணி நேரம் தண்ணீர் இன்றியும் கழிவறைக்கு செல்ல முடியாமலும் அவர்கள் தவித்துள்ளனர். ஆனால், இந்த சம்பவம் எங்கு நடந்தது என்பது பற்றி ராதிகா ஆப்தே குறிப்பிடவில்லை. தன்னுடைய அனுபவங்களை வீடியோவுடன் இன்ஸ்டாகிராமில் வெளியிட்ட 
அவர், "நான் இதை பதிவிட வேண்டியிருக்கிறது. 


கழிவறை செல்ல முடியாமல் தவித்த ராதிகா ஆப்தே:


இன்று காலை 8:30 மணிக்கு எனது விமானம் வர வேண்டியிருந்தது. இப்போது 10:50 ஆகிவிட்டது. இன்னும் விமானம் வரவில்லை. ஆனால், விமானம் வந்துவிட்டதாகக் கூறி அனைத்து பயணிகளையும் ஏரோபிரிட்ஜில் ஏற்றி அதை லாக் செய்தது விமான பணிக்குழுவினர். சிறிய குழந்தைகளுடன் பயணிகள், முதியவர்கள் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக அடைக்கப்பட்டுள்ளனர். 


கதவுகளை பாதுகாப்பு அதிகாரி திறக்கவில்லை. என்ன நடக்கிறது என்பதே விமான குழுவினருக்கு தெரியவில்லை. ஷிப்ட் முடிந்து புதிய விமான குழுவினர் வந்திருக்க வேண்டும். ஆனால், விமானக் குழுவினர் வரவில்லை. ஷிப்ட்க்கு வர வேண்டிய விமான குழுவினருக்காகக் காத்திருக்கிறார்கள். ஆனால், அவர்கள் எப்போது வருவார்கள் என்று அவர்களுக்குத் தெரியவில்லை. 


 






இதனால் உள்ளே எவ்வளவு நேரம் பூட்டப்பட்டிருப்பார்கள் என்பது அவர்கள் யாருக்கும் தெரியவில்லை. வெளியில் இருந்த முட்டாள் தனமான விமானப்பணி பெண்ணிடம் பேச நான் முயற்சி செய்தேன். ஆனால், அவர் எந்தப் பிரச்சினையும் இல்லை, தாமதமும் இல்லை என்று சொல்லிக்கொண்டே இருந்தார். இப்போது நான் உள்ளே பூட்டப்பட்டிருக்கிறேன் தண்ணீர் இல்லை. கழிவறைக்கு செல்ல முடியவில்லை. வேடிக்கையான சவாரிக்கு நன்றி" என பதிவிட்டுள்ளார்.