ABP Southern Rising Summit 2024: ஐதராபாத்தில் நடைபெற உள்ள தெற்கின் குரலாக ஒலிக்கும் ஏபிபி சதர்ன் ரைசிங் உச்சிமாநாட்டில், பங்கேற்க உள்ள திரை பிரபலங்களின் விவரங்கள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளன.


ஏபிபி நெட்வர்க் சதர்ன் ரைசிங் உச்சிமாநாடு 2024:


தெற்கின் குரலை ஓங்கி ஒலிக்கும் வகையில் ஏபிபி நெட்வர்க்கின் சதர்ன் ரைசிங் உச்சி மாநாடு, முதன்முறையாக கடந்த ஆண்டு சென்னையில் நடைபெற்றது. அதன் தொடர்ச்சியாக, ஏபிபி நெட்வர்க்கின் நடப்பாண்டிற்கான சதர்ன் ரைசிங் உச்சி மாநாடு வரும் 25ம் தேதி ஐதராபாத்தில் நடைபெற உள்ளது.


சதர்ன் ரைசிங் மாநாட்டில் சினிமா நட்சத்திரங்கள்:


சதர்ன் ரைசிங் உச்சிமாநாட்டின் இரண்டாவது எடிஷன், "ஏஜ் கமிங்: அடையாளம், உத்வேகம், தாக்கம்" என்ற கருப்பொருளில் , தென் மாநிலங்களின் அரசியல், கலாச்சார, பொருளாதார மற்றும் சமூக முன்னேற்றங்களைக் கொண்டாட உள்ளது. கோலாகலமாக நடைபெற உள்ள இந்த மாநாட்டை தெலங்கானா முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி தொடங்கி வைக்க உள்ளார். அதோடு, பல்வேறு நடிகர் மற்றும் நடிகைகளும் நிகழ்ச்சியில் பங்கேற்று, தென்னிந்தியா பற்றிய தங்களது எண்ணங்களையும், உணர்வுகளையும் கருத்துகளாக பகிர உள்ளனர்.


நட்சத்திர விருந்தினர்களின் பட்டியல்:


பிரகாஷ் ராஜ்: தென்னிந்தியாவில் அறிமுகமே தேவைப்படாத நடிகர்களில் பிரகாஸ் ராஜும் ஒருவர். தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடம் என, தென்னிந்தியாவின் அனைத்து மொழி திரைப்படங்களிலும் நடித்து கவனம் ஈர்த்துள்ளார்.


கவுதமி: தமிழ் சினிமாவில் கொடிகட்டி பறந்த நாயகிகளில் ஒருவர் கவுதமி. நடிகையாக மட்டுமின்றி ஆடை வடிவமைப்பாளராகவும் கோலோச்சிய இவர், தற்போது அரசியலிலும் தடம் பதித்துள்ளார்.


ராஷி கண்ணா: இளம் நெஞ்சங்களை கொள்ளை கொள்ளும் அழகு பதுமை நடிகை ராஷி கண்ணா. தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகில் பிசியான நடிகையாக தற்போது வலம் வருகிறார். 


சிதம்பரம் எஸ்.பொடுவல்: மஞ்சுமல் பாய்ஸ் என்ற ஒற்றை படத்தின் மூலம், சினிமா திரையுலகின் தன் பக்கம் ஈர்த்தவர் இயக்குனர் சிதம்பரம். இவர் சதர்ன் ரைசிங் மாநாட்டில் பங்கேற்று, தென்னிந்தியா பற்றிய தனது கருத்துகளை பகிர உள்ளார்.


சாய் துர்கா தேஜ்: தெலுங்கு திரையுலகில் வெற்றிகரமான நடிகராக வலம் வரும் சாய் துர்கா தேஜ், மெகாஸ்டார் சிரஞ்சீவியின் குடும்பத்தைச் சேர்ந்தவர் ஆவார்.


இவர்கள் மட்டுமின்றி பத்மஸ்ரீ விருது வென்றவரும், நாடக மற்றும் திரைப்பட நடிகருமான மொகமது அலி பைக் உச்சி மாநாட்டில் பங்கேற்கிறார். மேலும், 3 முறை தேசிய விருது வென்ற கிளாசிகல் டான்சரான யாமினி ரெட்டி மற்றும் பாடகர் ஷில்பா ராவ் ஆகியோரும், ஏபிபி நெட்வர்க்கின் சதர்ன் ரைசிங் உச்சி மாநாட்டில் பங்கேற்க உள்ளனர்.