மேலும் அறிய

Andhra Pradesh: மகளுக்கு கேக் வாங்க முடியாத சோகம்.. அரசு ஊழியர் எடுத்த விபரீத முடிவு!

ஆந்திரப்பிரதேசத்தில் குழந்தையின் பிறந்தநாள் கேக் வாங்க தன்னிடம் பணம் இல்லாத அளவுக்கு கடும் நிதி நெருக்கடியில் சுப்பிரமணியம் சிக்கிக் கொண்டார். அதனால் அம்மாவுக்கு போன் செய்து பேசியிருந்தார். 

ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் மகளுக்கு பிறந்தநாள் கேக் வாங்க பணம் இல்லாததால் அரசு ஊழியர் தற்கொலை செய்துக் கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். 

ஆந்திரப்பிரதேச மாநிலம் ராமசமுத்திரத்தைச் சேர்ந்தவர் சுப்பிரமணியம். 36 வயதான இவர் அம்மாநிலத்தின் தலைமைச் செயலகத்தில் உதவியாளராகப் பணியாற்றி வந்தார். கடந்த ஆண்டு ஜூலை மாதம் பி. கொத்தகோட்டா நகர் பஞ்சாயத்தில் அலுவலகத்துக்கு அவர் பணிமாற்றம் செய்யப்பட்டார். இதனிடையே சுப்பிரமணியத்திற்கு சௌமியா என்ற மனைவியும், ஐஸ்வர்யா மற்றும் ஹிந்தவி என்ற இரு மகளும் உள்ளனர். இவர்களின் குடும்பம் ராமசமுத்திரம் பைபாஸ் சாலையில் வசித்து வந்தது. 

இதனிடையே பிப்ரவரி 8ம் தேதி ஞாயிற்றுக்கிழமை என்பதால் சுப்பிரமணியம்  கர்நாடகாவின் நாகிரெட்டி கிராமத்தில் உள்ள தனது மாமியார் வீட்டிற்கு குடும்பத்தினருடன் சென்றிருந்தார். நேற்று (பிப்ரவரி 9) அவரது மூத்த மகள் ஐஸ்வர்யாவின் நான்காவது பிறந்தநாள் என்பதால் அதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது. இதற்கிடையில் காலை 7 மணிக்கு நாகிரெட்டி கிராமத்திலிருந்து பி. கோதகோட்டு  அலுவலகம் புறப்பட்ட சுப்பிரமணியம் மாலையில் தான் வீட்டுக்கு வரும்போது கேக் வாங்கி வாங்கி வருவதாக தெரிவித்திருந்தார். இதனால் அவரது மகள் ஐஸ்வர்யா ஆசையோடு காத்திருந்தார். 

ஆனால் காலை 7.50 மணிக்கு ராமசமுத்திரத்தில் உள்ள தனது அம்மா நீலம்மாவிடம் தொலைபேசி வாயிலாக சுப்பிரமணியம் பேசியுள்ளார். அப்போது ஒருமாதிரி கனத்த குரலில் பேசியுள்ளார். என்னவென்று அம்மா கேட்டதற்கு ஏதேதோ சொல்லி சமாளித்துள்ளார். அதேசமயம் குழந்தையின் பிறந்தநாள் கேக் வாங்க தன்னிடம் பணம் இல்லாத அளவுக்கு கடும் நிதி நெருக்கடியில் சுப்பிரமணியம் சிக்கிக் கொண்டார். அதனால் அம்மாவுக்கு போன் செய்து பேசியிருந்தார். 

மகன் பேச்சில் தடுமாற்றம் தெரிந்ததை உணர்ந்த நீலம்மா உடனடியாக மருமகள் சௌமியாவை தொடர்புக் கொண்டு விஷயத்தைக் கூறியுள்ளார். காலை 8 மணிக்கு தொடர்ச்சியாக சுப்பிரமணியத்திற்கு போன் செய்தும் அவர் எதையும் எடுக்கவில்லை. இந்த நிலையில் சௌமியா செல்போனுக்கு ஒரு குறுஞ்செய்தி டைப் செய்துள்ளார்.

அதில், உனக்கும், குழந்தைகளுக்கும் நரகத்தை கொடுத்துவிட்டு நான் கிளம்புகிறேன்... மன்னிக்கவும் என சுப்பிரமணியம் தெரிவித்திருக்கிறார். ஆனால் அதனை அனுப்பாமல் டிராஃப்டில் வைத்திருந்துள்ளார். இந்த நிலையில் தனது வீட்டில் சுப்பிரமணியம் தூக்கிட்டு தற்கொலை செய்துக் கொண்டார். ஊரிலிருந்து வீட்டுக்கு வந்த அவர், நீண்ட நேரமாகியும் வெளியே வராததால் அக்கம் பக்கத்தினர் சந்தேகமடைந்து கதவை உடைத்து பார்த்தபோது தான் சுப்பிரமணியம் தற்கொலை செய்துக் கொண்ட சம்பவம் தெரிய வந்தது. இதுதொடர்பாக தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து உடலைக் கைப்பற்றி விசாரணை நடத்தினர். 

(தற்கொலை என்பது எந்தவொரு பிரச்னைக்கும் தீர்வு கிடையாது. மன அழுத்தம் ஏற்பட்டாலோ அல்லது தற்கொலை செய்துக் கொள்ளும் எண்ணம் உண்டானாலோ ஆலோசனைக்கு தொடர்பு கொள்ள வேண்டிய எண்கள்: சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் - 044 -24640050 , மாநில தற்கொலை தடுப்பு உதவி மையம் - 104, சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகத்தின் ஹெல்ப்லைன் – 1800 599 0019)

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

லைவ் டிவி

ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor

தலைப்பு செய்திகள்

LPG Cylinder Booking: கேஸ் சிலிண்டர் புக்கிங்கில் திடீர் மாற்றம்.. கடுப்பாகும் மக்கள்.. இதுக்கு தீர்வே இல்லையா?
LPG Cylinder Booking: கேஸ் சிலிண்டர் புக்கிங்கில் திடீர் மாற்றம்.. கடுப்பாகும் மக்கள்.. இதுக்கு தீர்வே இல்லையா?
PM Modi Iran: ஈரானுக்கே போன் போட்ட பிரதமர் மோடி - பிரச்னை முடியுமா? கேட்டுகள் திறக்கப்படுமா? பேசியது என்ன?
PM Modi Iran: ஈரானுக்கே போன் போட்ட பிரதமர் மோடி - பிரச்னை முடியுமா? கேட்டுகள் திறக்கப்படுமா? பேசியது என்ன?
Bengaluru Power Cut: ஈரான்-இஸ்ரேல் போர் பதற்றம்.. பெங்களூரில் மின் தடை அபாயம்? அதிர்ச்சியில் மக்கள்
Bengaluru Power Cut: ஈரான்-இஸ்ரேல் போர் பதற்றம்.. பெங்களூரில் மின் தடை அபாயம்? அதிர்ச்சியில் மக்கள்
ரயில் பயணிகளுக்கு ஸ்வீட் செய்தி! ஒரே PNR-ல் பயணமா.. இனி இதை மட்டும் போதும்! ரயில்வே கொண்டுவந்த புதிய விதி
ரயில் பயணிகளுக்கு ஸ்வீட் செய்தி! ஒரே PNR-ல் பயணமா.. இனி இதை மட்டும் போதும்! ரயில்வே கொண்டுவந்த புதிய விதி
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Anbil Mahesh | விஜயை பார்க்க போய் விபத்து ”செலவை நான் பார்த்துக்கிறேன்” நேரில் சென்ற அன்பில்
Subramanian Swamy on Modi | ”ட்ரம்ப்-க்கு பயப்படும் மோடி! நான் உண்மைய சொன்னா..” சுப்ரமணியன் சுவாமி பகீர்
Sasikala meets Ramadoss | 1 மணி நேரம் ஆலோசனை! ராமதாஸை சந்தித்த சசிகலா! விஜய் TEAM உருவாகிறதா?
Iran Shuts Strait of Hormuz | உயரப்போகும் FUEL PRICE இந்தியாவுக்குப் பேரிடி ஈரான் அதிரடி மூவ்!
“CBI கூப்பிட்டா நான் போவேன்” செந்தில் பாலாஜி பதிலடி பாஜக போடும் ஸ்கெட்ச்? | Senthil Balaji Vs Vijay

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
DMK: பதவியை பறித்த திமுக..! ராஜீவ் காந்தி தூக்கி அடிக்கப்பட காரணம் என்ன? நடந்தது? ஷாக்கில் உ.பிக்கள்..
DMK: பதவியை பறித்த திமுக..! ராஜீவ் காந்தி தூக்கி அடிக்கப்பட காரணம் என்ன? நடந்தது? ஷாக்கில் உ.பிக்கள்..
PM Modi Iran: ஈரானுக்கே போன் போட்ட பிரதமர் மோடி - பிரச்னை முடியுமா? கேட்டுகள் திறக்கப்படுமா? பேசியது என்ன?
PM Modi Iran: ஈரானுக்கே போன் போட்ட பிரதமர் மோடி - பிரச்னை முடியுமா? கேட்டுகள் திறக்கப்படுமா? பேசியது என்ன?
Velachery Parangimalai Train: மார்ச் 14ல் தொடங்கும் வேளச்சேரி - பரங்கிமலை ரயில் சேவை..! எத்தனை ரயில்கள், எந்தெந்த ரூட்?
Velachery Parangimalai Train: மார்ச் 14ல் தொடங்கும் வேளச்சேரி - பரங்கிமலை ரயில் சேவை..! எத்தனை ரயில்கள், எந்தெந்த ரூட்?
கள்ளக் காதலுக்காக கணவனைக் கொன்ற மனைவி !! இறுதி சடங்கில் நடத்திய நாடகம் !! சிக்கியது எப்படி ?
கள்ளக் காதலுக்காக கணவனைக் கொன்ற மனைவி !! இறுதி சடங்கில் நடத்திய நாடகம் !! சிக்கியது எப்படி ?
Vadivelu: திமுக ஆட்சி இல்லாத தமிழ்நாடு அழிந்து விடும்.. என் தாய் மீது ஆணை.. நடிகர் வடிவேலு பேச்சு!
Vadivelu: திமுக ஆட்சி இல்லாத தமிழ்நாடு அழிந்து விடும்.. என் தாய் மீது ஆணை.. நடிகர் வடிவேலு பேச்சு!
காவ்யா மாறன் பார்த்த வேலை..! SRH நிர்வாகத்தை வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள் - ”வெட்கமாக இல்லையா”
காவ்யா மாறன் பார்த்த வேலை..! SRH நிர்வாகத்தை வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள் - ”வெட்கமாக இல்லையா”
Hybrid Cars: மிரட்டலான ஹைப்ரிட் கார் தான் வேணுமா? பட்ஜெட்டிலும், மைலேஜிலும் அசத்தும் மாடல்கள்- டக்கர் சாய்ஸ்
Hybrid Cars: மிரட்டலான ஹைப்ரிட் கார் தான் வேணுமா? பட்ஜெட்டிலும், மைலேஜிலும் அசத்தும் மாடல்கள்- டக்கர் சாய்ஸ்
Mojtaba on Hormuz Strait: அமெரிக்காவுக்கு Out of Control தான்; “அது மூடிதான் இருக்கும்“: ஈரான் தலைவர் மொஜ்தபா கமேனி நெத்தியடி.!
அமெரிக்காவுக்கு Out of Control தான்; “அது மூடிதான் இருக்கும்“: ஈரான் தலைவர் மொஜ்தபா கமேனி நெத்தியடி.!
Embed widget