மேலும் அறிய

மருமகள் கொடூர டார்ச்சர்... 95 வயதில் தற்கொலை செய்து கொண்ட மாமனார் - இதெல்லாம் அநியாயம்!

மத்திய பிரதேசத்தில் மருமகளின் கொடுமை தாங்க முடியாததால் 95 வயது முதியவர் துப்பாக்கியால் சுட்டுத் தற்கொலை செய்து கொண்டார்.

மத்திய பிரதேசத்தில் அமைந்துள்ளது குவாலியர் மாவட்டம். இந்த மாவட்டத்தில் வசித்து வந்தவர் ராமதர் குப்தா. இவர் பால் வியாபாரம் செய்து வந்தார். இவருக்கு  95 வயதாகிறது. வயது மூப்பு காரணமாக இவரது வியாபாரத்தை இவரது மகன் சுரேஷ்சந்திரா குப்தா கவனித்து வருகிறார். ராமதர் குப்தா வயது மூப்பு காரணமாக தனது மகன் வீட்டிலே வசித்து வந்துள்ளார்.

95 வயது முதியவர் தற்கொலை:

கடந்த வெள்ளிக்கிழமை இரவு இவரது குடும்பத்தினர் அனைவரும் அவரவர் வேலையை செய்து கொண்டிருந்தனர். அப்போது, திடீரென வீட்டின் அறையில் இருந்து துப்பாக்கி சத்தம் கேட்டுள்ளது. இதனால், அனைவரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். சத்தம் கேட்ட அறையின் உள்ளே சென்று பார்த்தபோது ராமதர் குப்தா தன்னைத் தானே துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். 

காரணம் என்ன?

இதையடுத்து, உடனடியாக போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டு சம்பவ இடத்திற்கு போலீசார் வந்தனர். அவர்கள் ராமதர் குப்தா தற்கொலை செய்து கொண்ட அறையை சோதனை செய்தனர். அப்போது, அவர்களுக்கு கடிதம் ஒன்று கிடைத்தது. அந்த கடிதத்தில் அவர் தனது தற்கொலைக்கு காரணம் தனது மூத்த மருமகள் சுனிதா என்று எழுதி வைத்துள்ளார். 

மேலும், அந்த கடிதத்தில் அவர்தனது மூத்த மருமகள் சுனிதா தன்னை நீண்ட காலமாக துன்புறுத்தி வந்ததாகவும், சாப்பாட்டில் அளவுக்கு அதிகமான காரம் மற்றும் உப்பைச் சேர்த்தே கொடுத்து வந்ததாகவும் தனது கைப்பட தற்கொலை கடிதம் எழுதி வைத்து உயிரை மாய்த்துக் கொண்டுள்ளார்.

95 வயதான முதியவர் தன்னுடைய மருமகள் கொடுமை தாங்க முடியாமல் துப்பாக்கியால் சுட்டுத் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் அந்த பகுதியில் ஏற்படுத்தியுள்ளது. பொருளாதார சிக்கல், பாசமின்மை காரணமாக முதியவர்களை பாரமாக பார்க்கும் மனப்பான்மை இந்திய குடும்பங்களில் அதிகரித்து வருகிறது. 

அதிகரிக்கும் குடும்ப வன்முறை:

இதனால், இந்தியாவில் முதியோர் இல்லங்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. பல வசதிபடைத்த குடும்பத்தாரும் தங்களது வீட்டில் உள்ள முதியவர்களை இதுபோன்ற முதியோர் இல்லங்களில் சேர்த்துவிடும் அவல நிலையும் அரங்கேறி வருகிறது. 

வீட்டில் உள்ள முதியவர்களை முறையாக பராமரிக்க குடும்பங்களில் நடுத்தர வயதில் உள்ளவர்களுக்கும், குழந்தைகளுக்கும் உரிய ஆலோசனைகளும், அறிவுரைகளும் வழங்க வேண்டும் என்று மனநல ஆலோசகர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.

சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம்: தற்கொலை எந்த ஒரு பிரச்சினைக்கும் தீர்வு அல்ல. இதுபோன்ற சூழலில் மன அழுத்தம் ஏற்பட்டாலோ, தற்கொலை எண்ணம் உண்டானாலோ, அதில் இருந்து மீண்டு மாற்றம் ஏற்பட கீழ்காணும் சேவை எண்களுக்கு தொடர்பு கொண்டு பேசவும். மாநில உதவிமையம் : 104 சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் - 044 -24640050 மன அழுத்தத்தை சாதாரணமாக எண்ணாமல் மன அழுத்தம் ஏற்பட்டால் உடனடியாக இந்த எண்ணில் தொடர்பு கொள்ளவும்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

லைவ் டிவி

ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor

தலைப்பு செய்திகள்

Gas Cylinder: அடுத்த ஆப்பு..! கேஸ் சிலிண்டர் புக் செய்ய புதிய கட்டுப்பாடுகள், விதிகள் என்ன? மத்திய அரசு அறிவிப்பு
Gas Cylinder: அடுத்த ஆப்பு..! கேஸ் சிலிண்டர் புக் செய்ய புதிய கட்டுப்பாடுகள், விதிகள் என்ன? மத்திய அரசு அறிவிப்பு
LPG Gas Bengaluru: கேஸ் தட்டுப்பாடு: முடங்கும் உணவகங்கள்! கர்நாடகாவைத் தொடர்ந்து தமிழகத்திற்கும் ஆபத்தா?
LPG Gas Bengaluru: கேஸ் தட்டுப்பாடு: முடங்கும் உணவகங்கள்! கர்நாடகாவைத் தொடர்ந்து தமிழகத்திற்கும் ஆபத்தா?
Bike Taxi Ban: ஓலா, உபர், ராபிடோ பைக் டாக்சி சேவைக்கு தடை! அரசின் அதிரடி முடிவு! காரணம் என்ன?
Bike Taxi Ban: ஓலா, உபர், ராபிடோ பைக் டாக்சி சேவைக்கு தடை! அரசின் அதிரடி முடிவு! காரணம் என்ன?
Indigo: இண்டிகோ விமானம் நடுவானில் யு-டர்ன்! பயணிகள் அதிர்ச்சி நடந்தது என்ன?
Indigo: இண்டிகோ விமானம் நடுவானில் யு-டர்ன்! பயணிகள் அதிர்ச்சி நடந்தது என்ன?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

கிருத்திகா போட்ட ட்வீட்
Sekar Babu angry | வேலை செய்யாத LIFT! முகம் மாறிய சேகர் பாபு! திட்டிய கோவி செழியன்
Parthiban Trisha | பொளந்தெடுத்த த்ரிஷா! ஆடியோ வெளியிட்ட பார்த்திபன்! ”பெண்ணே ஆகப்பெரும் சக்தி”
Trisha vs Parthiban | ”உங்க தரம் தெரிஞ்சிருச்சு! இதெல்லாம் JOKE-ஆ” பார்த்திபனை பொளந்த த்ரிஷா
ஜனநாயகன் ரிலீஸ் தேதி ரசிகர்களுக்கு GOOD NEWS குறுக்க இந்த தேர்தல் வந்தா...

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Trump Furious Warning: “மரணம், நெருப்பு, ஆக்ரோஷம்.! 20 மடங்கு கடுமையா தாக்குவோம்“; ஈரானுக்கு ட்ரம்ப் பயங்கர எச்சரிக்கை
“மரணம், நெருப்பு, ஆக்ரோஷம்.! 20 மடங்கு கடுமையா தாக்குவோம்“; ஈரானுக்கு ட்ரம்ப் பயங்கர எச்சரிக்கை
Senthil Balaji: விஜயை விடுங்க..! சைலண்டா செந்தில் பாலாஜிக்கு ஸ்கெட்ச் போடும் சிபிஐ - டீம் போட்டு ஆலோசனை
Senthil Balaji: விஜயை விடுங்க..! சைலண்டா செந்தில் பாலாஜிக்கு ஸ்கெட்ச் போடும் சிபிஐ - டீம் போட்டு ஆலோசனை
TVK Vijay: விஜய்க்கு லீவு கொடுத்த சிபிஐ..! சாஃப்ட் டீலிங்கிற்கு ஒகே சொன்ன தவெக? டெல்லிக்கு முக்கிய கோரிக்கை
TVK Vijay: விஜய்க்கு லீவு கொடுத்த சிபிஐ..! சாஃப்ட் டீலிங்கிற்கு ஒகே சொன்ன தவெக? டெல்லிக்கு முக்கிய கோரிக்கை
Gas Cylinder: அடுத்த ஆப்பு..! கேஸ் சிலிண்டர் புக் செய்ய புதிய கட்டுப்பாடுகள், விதிகள் என்ன? மத்திய அரசு அறிவிப்பு
Gas Cylinder: அடுத்த ஆப்பு..! கேஸ் சிலிண்டர் புக் செய்ய புதிய கட்டுப்பாடுகள், விதிகள் என்ன? மத்திய அரசு அறிவிப்பு
TVK Candidate List: 2 தொகுதிகளில் விஜய் போட்டியா? தவெக தலைவர்கள் களமிறங்கும் இடங்கள் இதானா?
TVK Candidate List: 2 தொகுதிகளில் விஜய் போட்டியா? தவெக தலைவர்கள் களமிறங்கும் இடங்கள் இதானா?
LPG Gas Bengaluru: கேஸ் தட்டுப்பாடு: முடங்கும் உணவகங்கள்! கர்நாடகாவைத் தொடர்ந்து தமிழகத்திற்கும் ஆபத்தா?
LPG Gas Bengaluru: கேஸ் தட்டுப்பாடு: முடங்கும் உணவகங்கள்! கர்நாடகாவைத் தொடர்ந்து தமிழகத்திற்கும் ஆபத்தா?
Bike Taxi Ban: ஓலா, உபர், ராபிடோ பைக் டாக்சி சேவைக்கு தடை! அரசின் அதிரடி முடிவு! காரணம் என்ன?
Bike Taxi Ban: ஓலா, உபர், ராபிடோ பைக் டாக்சி சேவைக்கு தடை! அரசின் அதிரடி முடிவு! காரணம் என்ன?
BJP on TVK Vijay: கூட்டணிக்கு வரும் தவெக? ஓபிஎஸ் முடிவு சாபமா? குழாயடி சண்டை, கூட்டணி மாற்றம்: பாஜக பரபர!
BJP on TVK Vijay: கூட்டணிக்கு வரும் தவெக? ஓபிஎஸ் முடிவு சாபமா? குழாயடி சண்டை, கூட்டணி மாற்றம்: பாஜக பரபர!
Embed widget