மகாராஷ்ட்ரா மாநிலத்தில் முதியவர் ஒருவரிடம் சைபர் மோசடியாக ரூ.9 கோடி திருடப்பட்ட சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. 

Continues below advertisement

போலீஸ் அதிகாரிகள் என்று கூறி இந்த சைபர் மோசடியை மர்ம நபர்கள் நிகழ்ச்சியுள்ளனர். மும்பையின் தாகுர்த்வார் பகுதியைச் சேர்ந்த 85 வயது முதியவர் பணத்தை இழந்து தவித்து வருகிறார். இந்த சம்பவத்தில் என்ன நடந்தது என பார்க்கலாம்.  மகாராஷ்ட்ரா மாநிலம் மும்பையில் உள்ள தாகுர்த்வாரில் பாதிக்கப்பட்ட முதியவர் தனது மூத்த மகளுடன் வசித்து வருகிறார். இவரின் இளைய மகள் அமெரிக்காவில் உள்ளார். இப்படியான நிலையில் கடந்த நவம்பர் 28ம் தேதி அந்த முதியவரின் மொபைல் போனுக்கு ஒரு அழைப்பு வந்தது. மறுமுனையில் பேசிய நபர், தான் நாசிக்கில் உள்ள பஞ்சவதி காவல் நிலையத்தைச் சேர்ந்த இன்ஸ்பெக்டர் தீபக் சர்மா என்று தன்னை அறிமுகம் செய்துள்ளார். 

மேலும் உங்களின் ஆதார் அட்டையைப் பயன்படுத்தி ஒரு வங்கிக் கணக்கு திறக்கப்பட்டுள்ளது.  இந்தக் கணக்கு பெரிய அளவிலான பணமோசடிக்குப் பயன்படுத்தப்படுவதாகவும் முதியவரிடம் அந்த நபர் கூறியுள்ளார். மேலும் அதிலிருந்து பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா போன்ற தடைசெய்யப்பட்ட அமைப்புக்கு பணம் பரிமாற்றம் நடைபெற்றதும் கண்டறியப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Continues below advertisement

இந்த வழக்கை சிபிஐ குற்றப்பிரிவு மற்றும் சிறப்பு புலனாய்வுக் குழு விசாரித்து வருவதாகவும், விரைவில் உங்களுக்கு எதிராக வழக்குப் பதிவு செய்யப்படும் என்றும் எதிரில் இருந்த நபர் மிரட்டியுள்ளார். இதன் பின்னர் அவருக்கு வாட்ஸ்அப்பில் ஒரு வீடியோ அழைப்பு வந்தது. போலீஸ் சீருடை அணிந்திருந்த நபர் பேசியுள்ளார். முதியவரிடம், இந்த வழக்கில் விசாரணைக்கு ஒத்துழைத்தால், உண்மையான குற்றவாளிகள் கைது செய்யப்படுவார்கள் என்றும், மின்னணு விசாரணை நடைபெற்று வருவதால், அவர் காவல் நிலையத்திற்கு வரத் தேவையில்லை என்றும் கூறியுள்ளார். 

இப்போது நீங்கள் டிஜிட்டர் அரெஸ்ட் செய்யப்பட்டுள்ளீர்கள். விஷயத்தை யாரிடமும் சொல்லக்கூடாது என முதியவரை பயம் காட்டியுள்ளனர். அதனை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தி முதியவரின் வங்கி விவரங்கள், பண இருப்புகள், பரஸ்பர நிதிகள், பங்குச்சந்தை முதலீடுகள், நிலையான வைப்புத்தொகை தொடர்பான தகவல்களை பகிர்ந்துக் கொண்டார். 

தொடர்ந்து அவரை நம்ப வைக்க உச்சநீதிமன்றம், ரிசர்வ் வங்கியின் பெயரில் போலி ஆவணங்களை அனுப்பியுள்ளனர். உங்களுடைய பணத்தை முழுமையாக நீதிமன்றத்தில் டெபாசிட் செய்ய வேண்டும் எனவும், விசாரணை முடிந்ததும் வட்டியுடன் திருப்பித் தரப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட முதியவரிடம் டிசம்பர் 1 முதல் டிசம்பர் 17 ஆம் தேதி RTGS மூலம் மொத்தம் ரூ.9 கோடியை பல்வேறு வங்கி கணக்குகளுக்கு மாற்றியுள்ளனர். வங்கி ஊழியரின் ஒருவரால் இந்த பிரச்னைக்கு வெளிச்சத்துக்கு வந்துள்ளது.