மேலும் அறிய

Fire Accident: அரசு மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து - 8 நோயாளிகள் மரணம், தப்பித்து ஓடிய ஊழியர்கள்

Jaipur Fire Accident: ராஜஸ்தான் மாநிலம் ஜெய்பூர் அரசு மருத்துவமனையில் ஏற்பட்ட தீ விபத்தில் 8 நோயாளிகள் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Jaipur Fire Accident: ஜெய்பூர் அரசு மருத்துவமனையில் பணியாளர்களின் கவனக்க்றைவு காரணமாகவே, உயிர்பலி ஏற்பட்டதாக பாதிக்கப்பட்டோர் குற்றம்சாட்டியுள்ளனர்.

அரசு மருத்துவமனையில் தீ விபத்து - 8 பேர் பலி

ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் உள்ள அரசு சவாய் மான் சிங் (எஸ்எம்எஸ்) மருத்துவமனையின்,  அதிர்ச்சி (Trauma) மையத்தில் ஞாயிற்றுக்கிழமை இரவு எதிர்பாராத விதமாக தீ விபத்து ஏற்பட்டுள்ளது. அப்போது அங்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வந்த 8 பேர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சேமிப்புக் கிடங்கில் மின் இணைப்பில் ஏற்பட்ட பிரச்னை காரணமாக ஏற்பட்டதாக சந்தேகிக்கப்படும் தீ விபத்தின் போது, நீரோ ஐசியு பிரிவில் 11 பேர் சிகிச்சை பெற்று வந்ததாகவும், அதில் 3 பேர் மீட்கப்பட்டுள்ளதாகவும் மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. முதலில் 2 பெண்கள் மற்றும் 4 ஆண்கள் என 6 பேர் உயிரிழந்த நிலையில், சிகிச்சை பலனின்றி மேலும் 2 பேர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தீ விபத்திற்கான காரணம்

தீ பற்ற தொடங்கியதுமே அதிவேகமாக பரவ தொடங்கி அந்த தளம் முழுவதும் கரும்புகை சூழ தொடங்கியுள்ளது. இதனால் குழப்பம் ஏற்பட்டு, நோயாளிகள் மற்றும் அவர்களது குடும்பத்தினரிடையே குழப்பமும் அச்சமும் தொற்றிகொண்டது. மருத்துவமனை ஊழியர்கள் மற்றும் நோயாளிகளின் உறவினர்கள் சேர்ந்து சிகிச்சை பெற்று வந்தவர்களை உடனடியாக மருத்துவமனை கட்டிடத்தில் இருந்தே வெளியேற்றியுள்ளனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு துறையினர் 2 மணி நேரம் கடுமையாக போராடி, தீயை கட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர்.

முதலமைச்சர் ஆய்வு:

இதனிடையே, சம்பவ இடத்திற்கு நேரில் வந்து முதலமைச்சர் பஜன்லால் சர்மா, நாடாளுமன்ற விவகார அமைச்சர் ஜோகராம் படேல், உள்துறை இணையமைச்சர் ஜவஹர் சிங் பெதம் ஆகியோர்  ஆய்வு செய்தனர். முன்னதாக படேலும், பெதாமும் வந்தபோது அவர்களை முற்றுகையிட்ட இரண்டு நோயாளிகளின் குடும்பத்தினர், “தீ விபத்து நடந்த நேரத்தில் ஊழியர்கள் சம்பவ இடத்தை விட்டு ஓடிவிட்டதாகவும், தங்கள் குடும்பத்தினர் பற்றிய தகவல்களை வழங்கத் தவறிவிட்டதாகவும் குற்றம் சாட்டி” வாக்குவாதத்தில் ஈடுபட்டு மனமுடைந்து அழுதனர்.

ஊழியர்கள் மீது குற்றசாட்டு

தீ விபத்து தொடர்பாக பேசிய மருத்துவமனையில் இருந்த ஒருவர், “ஆரம்பத்தில் லேசாக புகை பரவியபோதே கவனித்து, அதனை மருத்துவமனை ஊழியர்களிடம் தெரிவித்தோம். ஆனால், அதனை அவர்கள் பொருட்படுத்தவே இல்லை. தீ வேகமாக பரவ தொடங்கியதுமே, முதலில் அங்கிருந்து தப்பித்து ஓடியவர்களே அவர்கள் தான். தற்போது சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட எனது உறவினரை பற்றி எனக்கு எந்த தகவலும் கிடைக்கவில்லை. அவரின் நிலை என்ன என்பது எனக்கு தெரியவில்லை, யாரை கேட்டாலும் எந்த தகவலும் சொல்ல மறுக்கிறார்கள்” என குற்றம்சாட்டியுள்ளார். அதேநேரம், மருத்துவமனையில் வார்ட் பாய் ஒருவர் பேசுகையில், “சம்பவம் நடந்தபோது அறுவை சிகிச்சை அறைக்குள் இருந்தோம். தீ விபத்து தொடர்பான சத்தம் கேட்டதுமே, உடனடியாக விரைந்து சென்று 3 முதல் 4 பேரை அங்கிருந்து மீட்டோம். அதற்கு அதிவேகமாக பரவ தொடங்கியதால், அதற்கு மேல் எங்களால் எதுவும் செய்ய முடியவில்லை” என விளக்கமளித்துள்ளார்.

Enthusiastic Journalist Kulasekaran Munirathnam, who has worked in leading news organizations, has 8 years of experience in the media industry. He entered the media industry on his own volition after completing his studies in Mechanical Engineering. He researches and provides accurate and detailed updated news on automobiles, which play a vital role in people's daily commute, financial advice for future savings, and infrastructure for development. In addition, he brings information related to politics and international events to the public through news. He works as an Associate Producer on the ABP NADU Tamil website.
Read
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

Delhi Car Blast: டெல்லி செங்கோட்டை அருகே வெடித்துச் சிதறிய கார்; பதற்றத்தில் தலைநகர்
Delhi Car Blast: டெல்லி செங்கோட்டை அருகே வெடித்துச் சிதறிய கார்; பதற்றத்தில் தலைநகர்
SIR: சிறப்பு தீவிர திருத்தம்; வாக்காளர் பட்டியலில் உங்க பெயர் இருக்கா? A- Z சந்தேகங்கள், பதில்கள்.. ஒரு வழிகாட்டி!
SIR: சிறப்பு தீவிர திருத்தம்; வாக்காளர் பட்டியலில் உங்க பெயர் இருக்கா? A- Z சந்தேகங்கள், பதில்கள்.. ஒரு வழிகாட்டி!
Edappadi Palanisamy: காவலர் குடியிருப்பில் படுகொலையான இளைஞர் - கண்டனம் தெரிவித்து எடப்பாடி பழனிசாமி பதிவு
காவலர் குடியிருப்பில் படுகொலையான இளைஞர் - கண்டனம் தெரிவித்து எடப்பாடி பழனிசாமி பதிவு
Special Feature:
Special Feature: "திறமைக்கும் பாரம்பரியத்திற்கும் தலைவணங்கும் ஐஸ்வர்யா ரே சர்கார்"
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Christmas Cake Making | வந்தாச்சு கிறிஸ்துமஸ்!தனியார் சொகுசு ஹோட்டலில் தயாராகும் 200 கிலோ CAKE
90 KM சைக்கிளிங், 21 KM ரன்னிங்! அசர வைத்த அண்ணாமலை! பூரித்து பாராட்டிய மோடி
சறுக்கிய விஜய் கிராஃப்? தள்ளாடும் தளபதி கச்சேரி! VIEWS குறைந்தது ஏன்?
நுரையீரல் மாற்று அறுவை சிகிச்சையில் புதிய மைல்கல்!அசத்திய அப்போலோ
SCHOOL BUS-ஐ மறித்த 3 பேர் கண்ணாடியில் கல் வீசி தாக்குதல் அலறி கத்திய மாணவர்கள் பரபரக்கும் வீடியோ காட்சி | Mayiladuthurai School Van Attack

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Delhi Car Blast: டெல்லி செங்கோட்டை அருகே வெடித்துச் சிதறிய கார்; பதற்றத்தில் தலைநகர்
Delhi Car Blast: டெல்லி செங்கோட்டை அருகே வெடித்துச் சிதறிய கார்; பதற்றத்தில் தலைநகர்
SIR: சிறப்பு தீவிர திருத்தம்; வாக்காளர் பட்டியலில் உங்க பெயர் இருக்கா? A- Z சந்தேகங்கள், பதில்கள்.. ஒரு வழிகாட்டி!
SIR: சிறப்பு தீவிர திருத்தம்; வாக்காளர் பட்டியலில் உங்க பெயர் இருக்கா? A- Z சந்தேகங்கள், பதில்கள்.. ஒரு வழிகாட்டி!
Edappadi Palanisamy: காவலர் குடியிருப்பில் படுகொலையான இளைஞர் - கண்டனம் தெரிவித்து எடப்பாடி பழனிசாமி பதிவு
காவலர் குடியிருப்பில் படுகொலையான இளைஞர் - கண்டனம் தெரிவித்து எடப்பாடி பழனிசாமி பதிவு
Special Feature:
Special Feature: "திறமைக்கும் பாரம்பரியத்திற்கும் தலைவணங்கும் ஐஸ்வர்யா ரே சர்கார்"
Gold Rate Nov. 11th: மீண்டும் வேலையை காட்டும் தங்கம்; இன்று ஒரே நாளில் சவரனுக்கு ரூ.1,440 உயர்வு; தற்போது விலை என்ன.?
மீண்டும் வேலையை காட்டும் தங்கம்; இன்று ஒரே நாளில் சவரனுக்கு ரூ.1,440 உயர்வு; தற்போது விலை என்ன.?
Udhayanidhi Stalin : ‘'சென்னையில் Global Sports City’ – விளையாட்டில் திராவிட கொள்கை’ ஓபனாக பேசிய உதயநிதி..!
‘சென்னையில் Global Sports City’ அதிரடியாக அறிவித்த உதயநிதி ஸ்டாலின்..!
Rahul Gandhi: பொய்களால் கட்டமைக்கப்பட்ட ராகுல் காந்தியின் H-Files; அம்பலமான ‘வாக்கு திருட்டு‘ நாடகம்
பொய்களால் கட்டமைக்கப்பட்ட ராகுல் காந்தியின் H-Files; அம்பலமான ‘வாக்கு திருட்டு‘ நாடகம்
UGC Fee Refund: கல்லூரியில் கட்டிய முழுக் கட்டணத்தையும் திரும்பப் பெறலாம்; யுஜிசி புதிய அறிவிப்பு- முழு விவரம்
UGC Fee Refund: கல்லூரியில் கட்டிய முழுக் கட்டணத்தையும் திரும்பப் பெறலாம்; யுஜிசி புதிய அறிவிப்பு- முழு விவரம்
Embed widget