Independence Day 2022 LIVE: மும்பை புறப்பட்ட விமானத்தில் வெடிகுண்டு பீதி
Independence Day 2022 LIVE Updates in Tamil: இந்தியா, தனது 75-வது சுதந்திர தினத்தை ஆகஸ்ட் 15-ம் தேதி( இன்று) கொண்டாடி வருகிறது.
மங்களூரில் இருந்து மும்பை புறப்பட்ட இண்டிகோ விமானம் வெடிகுண்டு பீதி கிளம்பியதால் ரன்வேயிலே பாதியில் நிறுத்தப்பட்டது. 185 பயணிகளும் தற்போது பாதுகாப்பாக உள்ளனர்.
பஞ்சாப் மாநிலத்தில் உள்ள அட்டாரி - வாகா எல்லையில் தேசிய கொடி இறக்கும் நிகழ்வு நடைபெற்று வருகிறது.
நாட்டுப்பற்றில் திமுக எப்போதும் உறுதியாக இருந்து வந்திருக்கிறது என சுதந்திர தின விழாவில் முதலமைச்சர் முக ஸ்டாலின் பேசியுள்ளார்.
• பூலித்தேவர்
• மருதநாயகம்
• கட்டபொம்மன்
• சுந்தரலிங்கம்
• வடிவு
• வீரமங்கை வேலுநாச்சியார்
• குயிலி
• மருது பாண்டியர்கள்
• தீரன் சின்னமலை
• தளபதி பொல்லான்
• திப்பு சுல்தான்
• வ.உ.சி
• சுப்பிரமணிய சிவா
• பாரதியார்
• திரு.வி.க
• பெரியார்
• செண்பகராமன்
• வீரவாஞ்சிநாதன்
• அழகுமுத்துக்கோன்
• நாமக்கல் கவிஞர்
• சிங்காரவேலர்
• தோழர் ஜீவா
• காமராஜர்
• ஜே.சி.குமரப்பா
• இரட்டை மலை சீனிவாசன்
• காகிதமில்லத்
• பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர்
• ஜமத்கனி
• ராஜாஜி
• திருப்பூர் குமரன்
ஆகியோரின் பெயர்களை குறிப்பிட்டு விடுதலைக்கு எதிராக முதல் போராட்டத்தை எழுப்பியது தமிழ்நாடு என முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியுள்ளார்.
சுதந்திரப் போராட்ட வீரர்களுக்கான மாதாந்திர ஓய்வூதியம் ரூ. 18 ஆயிரத்திலிருந்து ரூ. 20 ஆயிரமாக உயர்த்தப்படும் என முதலமைச்சர் முக ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
சுதந்திர தினத்தையொட்டி கோட்டை கொத்தளத்தில் இந்திய தேசியக்கொடியை முதலமைச்சர் முக ஸ்டாலின் ஏற்றினார்.
சென்னையில் முதலமைச்சருக்கு காவல்துறை அணிவகுப்பு மரியாதை நடந்து வருகிறது.
நாட்டின் சுதந்திரத்திற்காக போராடி உயிர் நீத்த மகாத்மா காந்தி, அம்பேத்கர் உள்ளிட்ட தலைவர்களுக்கு நாம் அனைவரும் நன்றி கடன் பட்டிருக்கிறோம். நாட்டிலுள்ள பெண்களின் சக்தியை பார்த்து நாம் அனைவரும் பெருமிதம் கொள்ள வேண்டும். குறிப்பாக ராணி லக்ஷ்மிபாய், வேலு நாச்சியார் போன்றவர்களின் பங்களிப்பை நினைத்து நாம் பெருமிதம் கொள்ள வேண்டும் என்று பிரதமர் மோடி தெரிவித்தார்.
டெல்லியில் செங்கோட்டையில் பிரதமர் மோடி தேசியக்கொடியை ஏற்றி நாட்டு மக்களிடம் உரையாற்றி வருகிறார்.
76வது சுதந்திர தினவிழா... நாட்டு மக்களிடம் உரையாற்றும் பிரதமர் மோடி
சுதந்திர தினத்தையொட்டி பிரதமர் மோடி செங்கோட்டை தேசியக்கொடியை ஏற்றினார்.
கொடியேற்ற காத்திருக்கும் செங்கோட்டை :
டெல்லியின் செங்கோட்டையில் இன்று பிரதமர் மோடி தேசிய கோடியை ஏற்றுகிறார்.
சுதந்திர தினத்தை முன்னிட்டு தமிழ்நாட்டில் 1 லட்சம் காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
தமிழ்நாட்டில் சென்னை புனித ஜார்ஜ் கோட்டையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று கொடியேற்றுகிறார்.
Background
இந்தியா, தனது 75-வது சுதந்திர தினத்தை ஆகஸ்ட் 15-ம் தேதி( இன்று) கொண்டாடி வருகிறது. அதே போன்று பாகிஸ்தானும் 75-வது சுதந்திர தினத்தை நேற்று கொண்டாடுகிறது.
ஆங்கிலேயர்களிடமிருந்து சுதந்திரம்:
1947 ஆண்டு சுதந்திரத்திற்கு முன்பு, இந்தியா மற்றும் பாகிஸ்தான் உள்ளடக்கிய நிலப்பகுதிகளை ஆங்கிலேயர்கள் ஆட்சி செய்து வந்தனர். பின்னர் நாட்டு தலைவர்களின் போரட்டத்தால், ஆங்கிலேயர் நாட்டை விட்டு வெளியேற முடிவு செய்தனர். அப்போது இந்தியா மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகள் தனியாக பிரிந்து செல்ல முடிவு செய்தன.
இதையடுத்து இரு நாடுகளும் பிரிந்து சென்றன. மேலும் சுதந்திரமாக இருந்த பகுதிகள் இந்தியா அல்லது பாகிஸ்தான் நாடுகளுடன் சேர்ந்து கொள்ளலாம் என்றும், அல்லது தனியாக இருந்து கொள்ளலாம் என்றும் தெரிவித்தது.
தனியாக பிரிந்து செல்ல முடிவெடுத்த பாகிஸ்தான் ஆகஸ்ட் 14 ம் தேதி, சுதந்திரம் பெற்றதாக அறிவிக்கப்பட்டது. இதை தொடர்ந்து, ஆகஸ்ட் 15ஆம் தேதி ஆங்கிலேயரின் ஆட்சியிலிருந்து, இந்தியா சுதந்திரம் பெற்றதாக அறிவிக்கப்பட்டது.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -