தமிழ்நாடு:



  • திருநெல்வேலி, கன்னியாகுமரி, நீலகிரிக்கு 300 வீரர்கள் கொண்ட தலா 3 மீட்புக் குழுக்கள் விரைந்தன.

  • அனைத்து வீடுகளுக்கும் 100 யூனிட் இலவச மின்சாரம் ரத்து என்ற தகவல் வதந்தி - மின்வாரியம்.

  • தமிழ்நாட்டில் 20ம் தேதி ஓரிரு இடங்களில் மிக மிக கனமழைக்கு வாய்ப்பு.

  • இலவச பேருந்து பயணத்தை குறை கூறுவதா என மோடிக்கு பழனிவேல் தியாகராஜன் கண்டனம்.

  • குலசேகரப்பட்டினத்தில் விண்வெளி பூங்கா அமைக்க இன் ஸ்பேஸ் உடன் டிட்கோ ஒப்பந்தம்.

  • சேலம் பெரியார் பல்கலைக்கழக துணைவேந்தரை பதவி நீக்கம் செய்ய வேண்டும் - ராமதாஸ்.

  • ஆசிரியர் பொது மாறுதல் கலந்தாய்விற்கு விண்ணப்பிக்க மேலும் 7 நாள் அவகாசம் - தமிழ்நாடு அரசு.

  • ஏழைகளுக்கான திட்டங்களை கண்டு பிரதமர் மோடி வயிற்றெரிச்சல் - கோபாலகிருஷ்ணன் .

  • தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய விடுதி மாணவர் சேர்க்கை தேர்வு ஒத்திவைப்பு.

  • 10, 12ம் வகுப்பு தேர்வில் 100% தேர்ச்சி பெற்ற அரசு பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு பாராட்டு விழா.

  • வெள்ளப்பெருக்கால் மெயின் அருவி, ஐந்தருவி, பழைய குற்றால அருவிகளில் குளிக்க தடை.

  • புகழ்பெற்ற சுற்றுலாத் தலமான கொடைக்கானலில் கோடை விழா மலர் கண்காட்சி தொடங்கியது.

  • இன்று முதல் 3 நாட்கள் நீலகிரிக்கு சுற்றுலா பயணிகள் வர வேண்டாம் என ஆட்சியர் அறிவுறுத்தல். 


இந்தியா: 



  • நீட் வினாத்தாள் கசிக்க விவகாரம் தொடர்பான வழக்கில் மத்திய அரசு பதில் அளிக்க உத்தரவு.

  • ஹேமந்த் சோரனுக்கு இடைக்கால ஜாமின் வழங்குவது குறித்து 21ல் உச்சநீதிமன்றத்தில் விசாரணை.

  • விசாரணை நீதிமன்றத்தை அணுகி கெஜ்ரிவால் ஜாமின் பெற்றுக் கொள்ளலாம் - உச்சநீதிமன்றம்.

  • அமலாக்கத்துறை கைது செய்ததை சட்டவிரோதம் என அறிவிக்க கோரிய கெஜ்ரிவால் வழக்கில் தீர்ப்பு ஒத்திவைப்பு.

  • வாக்கு சதவீத முழு விவரத்தை வெளியிட கோரிய வழக்கில் அவகாசம் கோரியது தேர்தல் ஆணையம்.

  • உத்தரப்பிரதேசம்: ரேபரேலி தொகுதியில் போட்டியிடும் ராகுலுக்காக சோனியா காந்தி பிரச்சாரம்.

  • இஸ்லாமியர் என்ற சொல்லை பயன்படுத்த தூர்தர்ஷன் தடை விதித்துள்ளதால் சர்ச்சை.  

  • அதானி துறைமுக நிறுவனத்தில் முதலீடு செய்வதை நிறுத்த நார்வே வங்கி முடிவு.

  • இந்தியா கூட்டணி ஆட்சிக்கு வந்தால் ரேசனில் மாதம் 10 கிலோ உணவு தானியம் இலவசம் - ராகுல் காந்தி.

  • இந்தியா கூட்டணி ஆட்சிக்கு வந்தால் புல்டோசர் மூலம் ராமர் கோயிலை இடித்து விடுவார்கள் - பிரதமர் நரேந்திர மோடி


உலகம்: 



  • ராஃபா நகரின் இஸ்ரேல் படையெடுப்பது குறித்து சர்வதேச நீதிமன்றத்தில் விசாரணை தொடங்கியது.

  • தென்னாப்பிரிக்கா: கட்டடத்தின் இடிபாடுகளில் சிக்கியுள்ளவர்களை தேடும்பணி முடிவுக்கு வந்தது.

  • எம்.டி.எச், எவரெஸ்ட் மசாலாவுக்கு சிங்கப்பூர், ஹாங்காங்கை தொடர்ந்து நேபாளத்திலும் தடை.

  • அமெரிக்காவின் ஹூஸ்டன் நகரை தாக்கிய புயலில் இதுவரை 4 பேர் உயிரிழப்பு. 

  • பிரான்ஸில் யூத மத வழிபாட்டு தலத்தை தீ வைத்து எரிக்க முயன்ற நபர் சுட்டுக்கொலை.

  • மலேசியாவில் காவல் நிலையம் மீது பயங்கரவாத தாக்குதல் - 2 காவல்துறை அதிகாரிகள் உயிரிழப்பு. 


விளையாட்டு: 



  • பிளே ஆஃப் சுற்றில் அடியெடுத்து வைக்கப்போவது யார்..? சென்னை - பெங்களூரு அணிகள் இன்று பலப்பரீட்சை.

  • இந்திய குத்துச்சண்டை வீராங்கனை பர்வீனை உலக ஊக்க மருந்து தடுப்பு முகமை இடைநீக்கம் செய்துள்ளது.

  • 2027ம் ஆண்டுக்கான பெண்கள் உலகக் கோப்பை கால்பந்து போட்டி பிரேசிலில் நடக்கும் என அறிவிப்பு.

  • ஐபிஎல் 2024: மும்பை அணிக்கு எதிரான போட்டியில் லக்னோ அணி 18 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.