தமிழ்நாடு:



  • கெஜ்ரிவாலுக்கு ஜாமின் தரப்பட்டது நீதியை எடுத்து காட்டியுள்ளது - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.

  • நீலகிரிக்கு சுற்றுலா வரும் பயணிகளுக்கு இ-பாஸ் தொடர்பாக அச்சம் வேண்டாம் - தலைமைச் செயலர்.

  • 10ம் வகுப்பில் தேர்ச்சி பெற்ற மாணவர்கள் மே 12 முதல் தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் பெறலாம்.

  • நீலகிரி உள்பட 8 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு - சென்னை வானிலை மையம்.

  • தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் 10ம் வகுப்பு பொதுத்தேர்வில் 91.55 சதவீதம் பேர் தேர்ச்சி.

  • தமிழ்நாட்டில் சில இடங்களில் 106 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் பதிவாகும் - வானிலை ஆய்வு மையம்.

  • 10ம் வகுப்பு மறுதேர்வு ஜூலை 2ம் தேதி நடைபெறும்; தேர்வு அட்டவணை இன்று வெளியீடு.

  • சென்னை மெட்ரோ ரயில் 2ம் கட்ட பணிகலுக்கு மத்திய அரசு இன்று வரை நிதி ஒதுக்கவில்லை என தகவல்.

  • பீகாரில் வினாத்தாள் கசிந்த இடங்களில் நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என திமுக எம்.பி.வில்சன் கருத்து.

  • சென்னையில் உள்ள அரும்பு சிறார் நூலரங்கில் குழந்தைகளுக்கான புத்தகத் திருவிழா தொடக்கம்.

  • செல்லப்பிராணி வளர்ப்போர் ஆண்டுதோறும் ஆன்லைனில் உரிமம் பெற வேண்டும் - சென்னை மாநகராட்சி. 


இந்தியா: 



  • உச்சநீதிமன்றம் வழங்கிய ஜாமினை அடுத்து சிறையில் இருந்து விடுதலையானார் கெஜ்ரிவால்.

  • சர்வாதிகாரத்தில் இருந்து நாட்டை காக்க வேண்டும் அரவிந்த் கெஜ்ரிவால் பேச்சு.

  • உத்தரப்பிரதேசத்தில் இந்தியா கூட்டணிக்கு ஆதரவான அலை வீசுகிறது - ராகுல் காந்தி.

  • உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு ஜனநாயகத்துக்கு கிடைத்த வெற்றி - ஆம் ஆத்மி அமைச்சர் அதிஷி.

  • உச்சநீதிமன்ற தீர்ப்பு அமலாக்கத்துறை, மத்திய அரசின் முகங்களில் விழுந்த அறை - பிருந்தா காரத்.

  • வாக்குப்பதிவு விவரத்தை முழுமையாக வெளியிட கோரி தேர்தல் ஆணையரிடம் இந்தியா கூட்டணி மனு.

  • கேரளாவில் அரளி பூக்களை கோயில்களில் பயன்படுத்த தடை - திருவிதாங்கூட் தேவசம்போர்டு.

  • சத்தீஸ்கர்: பிஜப்பூர் மாவட்டத்தில் பாதுகாப்புப் படையினரால் 12 நக்சலைட்டுகள் சுட்டுக்கொலை.

  • கர்நாடக பாஜக நிர்வாகி தேவராஜே கவுரா மீது பாலியன் துன்புறுத்தல் வாக்குப்பதிவு.

  • ஊழியர்கள் பணிக்கு திரும்ப வேண்டும் என்று ஏர் இந்தியா விமான நிறுவனம் கோரிக்கை.  


உலகம்: 



  • உக்ரைனுக்கு மேலும் 400 மில்லியன் டாலருக்கு ராணுவ உதவி - அமெரிக்கா அறிவிப்பு.

  • ஆப்கானிஸ்தானில் தொடரும் கனமழை: வெள்ளத்தில் இதுவரை 50 பேர் உயிரிழப்பு.

  • தைவானில் மீண்டும் நிலநடுக்கம்: ரிக்டர் அளவுகோலில் 5.6 ஆக பதிவு.

  • செனகல் நாட்டில் ஓடுபாதையில் இருந்து தவறி விழுந்த விமானம் - 11 பேர் படுகாயம்.

  • இலங்கையில் அதிபர் தேர்தல் நடைபெறும் தேதி அறிவிப்பு. 

  • பிரேசில் கனமழை: இதுவரை 1 லட்சத்திற்கு மேலான வீடுகள் சேதம் என தகவல்

  • காலக்கெடுவுக்கு முன்பே இந்திய வீரர்கள் வெளியேறிவிட்டனர் என மாலத்தீவு அதிபர் தகவல்


விளையாட்டு: 



  • சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான நேற்றைய ஐபிஎல் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணி 35 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.

  • இன்றைய ஐபிஎல் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும், மும்பை இந்தியன்ஸ் அணியும் மோத இருக்கின்றன.

  • ஆசிய ஸ்குவாஷ் தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. 

  • பி.எஸ்.ஜி அணியில் இருந்து விலகுவதாக கைலியன் எம்பாப்பே அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.