தமிழ்நாடு:
- வேண்டாம் மோடி முழக்கமே நாடு முழுவதும் எதிரொலிக்கிறது - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிக்கை
- நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட விருப்ப மனு அளித்தவர்களிடம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேர்காணல்
- அதிமுக தலைமை அலுவலகத்தில் எடப்பாடி பழனிசாமி நாடாளுமன்ற தேர்தல் குறித்து ஆலோசனை
- தாய்லாந்தில் இருந்து சிங்கப்பூர் வழியாக சென்னைக்கு விமானத்தில் கடத்தி வரப்பட்ட ரூ.1 கோடி போதைப்பொருள் பறிமுதல்
- 10 ஆண்டு கால பாஜக ஆட்சி இந்தியாவை புகழ்படுத்தி உள்ளது - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.
- நாடாளுமன்ற தேர்தல் கூட்டணி: பாஜக உடனான முதற்கட்ட பேச்சு சுமூகமாக இருந்தது; இன்று மீண்டும் பேச்சு - ஓபிஎஸ்.
- தருமபுரியில் இன்று பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்குகிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.
- சீர்காழியில் சாலை விபத்தில் இறந்த காவலர் குடும்பத்திற்கு ரூ. 25 லட்சம் நிவாரணம் - தமிழ்நாடு அரசு.
- சென்னையில் பாஜக தேர்தல் ஒருங்கிணைப்புக் குழு ஆலோசனை கூட்டம் இன்று நடைபெற உள்ளது.
- நேர்மையான முறையில் தேர்தல் நடப்பதற்கு உச்ச நீதிமன்றம் தலையிட வேண்டும் - திருமாவளவன்.
- தேர்தல் களத்தில் திமுகவை களங்கப்படுத்த பாஜக முயற்சிக்கிறது - அமைச்சர் ரகுபதி
இந்தியா:
- புதிய தேர்தல் ஆணையர்களை நியமிப்பது குறித்து மார்ச் 15ல் மத்திய அரசு ஆலோசனை.
- திருப்பதில் கடத்தப்பட்ட குழந்தையை 6 மணி நேரத்தில் மீட்டு பெற்றோரிடம் ஒப்படைத்தது காவல்துறை.
- திரிணாமுல் காங்கிரஸ் சார்பில் கிருஷ்ணா நகர் தொகுதியில் மஹூவா மொய்த்ரா போட்டி.
- ஹரியானா எம்.பி. பிரிஜேந்திர சிங் பாஜகவில் இருந்து விலகி காங்கிரஸில் இணைந்தார்.
- ஹைதராபாத்தில் காங்கிரஸின் இந்திய ஒற்றுமை நீதிக்கான மாரத்தானில் முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் அசாரூதீன் பங்கேற்பு.
- மைசூரு - சென்னை இடையே மேலும் ஒரு வந்தே பாரத் ரயில் இயக்கப்படும் - ரயில்வே அமைச்சகம்.
- வாட் வரியை குறைக்கக் கோரி ராஜஸ்தானில் பெட்ரோல் பங்க் உரிமையாளர்கள் 2 நாள் ஸ்டிரைக்
உலகம்:
- இந்தோனேசியாவில் கனமழையால் வெள்ளம், நிலச்சரிவு - 19 பேர் இதுவரை உயிரிழப்பு.
- இஸ்ரேலுக்கு தீங்கு செய்கிறார் பிரதமர் நெதன்யாகு - அமெரிக்க அதிபர் பைடன் குற்றச்சாட்டு.
- பாகிஸ்தானில் இருசக்கர வாகனத்தில் இருந்த வெடிகுண்டுகள் வெடித்து 2 பேர் உயிரிழப்பு.
- கடல்சார்ந்து ரோந்து மணிக்கு துருக்கி டிரோன்களை கொள்முதல் செய்தது மாலத்தீவு அரசு.
- பாகிஸ்தானின் 14வது அதிபராக ஆசிஃப் அலி ஜர்தாரி பதவியேற்றுக் கொண்டார்.
- நைஜீரியாவில் சுமார் 300 பள்ளி மாணவர்கள் கடத்தல் - ராணுவத்தினர் தீவிர தேடுதல் வேட்டை.
- உலகிலேயே அதிகம் பதிவிறக்கப்பட்ட செயலி என்ற பெருமையை பெற்றது இன்ஸ்டாகிராம்.
- தென்கொரியாவில் கடலில் படகு கவிழ்ந்த விபத்தில் 4 பேர் உயிரிழப்பு; 5 பேரை காணவில்லை.
விளையாட்டு:
- ஒலிம்பிக் மல்யுத்த தகுதி சுற்றில் பங்கேற்கும் வாய்ப்பை இழந்த பூனியா, ரவிகுமார்.
- பிரெஞ்சு ஓபன் பேட்மிண்டன்: சாய்ராஜ் - சிராக் ஷெட்டி ஜோடி ‘சாம்பியன்’.
- நாங்கள் ஒரு மிகச்சிறந்த அணியிடம் தோல்வியை சந்தித்துள்ளோம் - இங்கிலாந்து கேப்டன் பென் ஸ்டோக்ஸ்.
- இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் கேப்டனாக ரோஹித் சர்மா பெரிதாக எதுவும் செய்து வெற்றியை பெற்றுக் கொடுக்கவில்லை என்று ஸ்வான் கூறியுள்ளார்.
- மகளிர் பிரீமியர் லீக்: பெங்களூரு அணிக்கு எதிரான போட்டியில் 1 ரன் வித்தியாசத்தில் த்ரில் வெற்றிபெற்றது டெல்லி அணி.