தமிழ்நாடு:



  • தொடரும் கனமழை: கடலூர், மயிலாடுதுறை, காரைக்கால், புதுச்சேரி மாவட்டங்களில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

  • சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய 4 மாவட்டங்களுக்கு இன்று ஆரஞ்ச் அலர்ட்: அதிகனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக எச்சரிக்கை

  • தமிழ்நாடு முழுவதும் 48 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிடமாற்றம்; காஞ்சிபுரம், விழுப்புரம் உட்பட 8 மாவட்ட எஸ்பிக்களும் அதிரடி மாற்றம்

  • ரூ.1000 ரொக்க பணத்துடன் பொங்கல் பரிசு தொகுப்பு டோக்கன் விநியோகம் தொடங்கியது; தமிழகம் முழுவதும் ரேஷன் கடை ஊழியர்கள் வீடு, வீடாக வழங்கினர்.

  • நான்கரை ஆண்டுகால ஆட்சியில் மிகவும் துன்பப்பட்டேன்; கொஞ்சம், கொஞ்சமாக தவழ்ந்து முதலமைச்சர் ஆனேன் - எஸ்டிபிஐ மாநாட்டில் எடப்பாடி பழனிசாமி பேச்சு

  • இந்தியாவின் பொருளாதார சக்தியாக தமிழ்நாட்டை நிலைநிறுத்துவோம் - முதல்வர் ஸ்டாலின் உறுதி

  • சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் நடைபெற்றுவரும் உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில்  The Startup TN Pavillion பன்னாட்டு பார்வையாளர்களை ஈர்த்துள்ளது. 

  • தமிழகத்தில் அநேக இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை  பெய்யக்கூடும் - வானிலை ஆய்வு மையம்

  • நீலகிரியில் சிறுத்தை தாக்கி உயிரிழந்த 2 பேரின் குடும்பத்திற்கு தலா ரூ.10 லட்சம் நிதி வழங்க முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.


இந்தியா: 



  • பிரதமர் மோடி குறித்து அவதூறு கருத்து தெரிவித்த மாலத்தீவு அமைச்சர்கள் 3 பேர் நீக்கம் - அந்நாட்டு அரசு உத்தரவு

  • இந்தாண்டு ரோபோட் அனுப்பப்படும்; 2025ல் விண்வெளியில் இந்தியர்கள் பறப்பார்கள் - இஸ்ரோ தலைவர் பேட்டி

  • கர்நாடகாவில் பட்டியலின இளைஞரையும், இஸ்லாமிய பெண்ணையும் 13 பேர் கொண்ட கும்பல் கொடூரமாக தாக்கிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

  • லட்சத்தீவு விவகாரம் தொடர்பாக பிரதமர் மோடிக்கு ஆதரவாக சினிமா பிரபலங்கள் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

  • மத்திய பிரதேசத்தில் சட்டவிரோதமாக நடத்தப்பட்ட காப்பகத்தில் இருந்து 26 குழந்தைகள் காணாமல் போனது அம்மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

  • ஞானவாபி மசூதி தொடர்பாக இந்திய தொல்லியல் துறையின் ஆய்வறிக்கையின் நகலை தங்களுக்கு அளிக்க வேண்டி, இந்து தரப்பினர் மாவட்ட நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளது.


உலகம்: 



  • வங்கதேசத்தின் பிரதமராக மீண்டும் தேர்வு செய்யப்பட உள்ளார் ஷேக் ஹசீனா.

  • சவுதி அரேபியா சென்ற ஸ்மிருதி ரானி; ஹஜ் யாத்திரைக்கான ஒப்பந்தம் கையெழுத்து.

  • ஒரே நாளில் 90 பீரங்கி குண்டுகள் வீச்சு; வடகொரியா மீது தென் கொரியா குற்றச்சாட்டு.

  • திபெத்தில் நிலநடுக்கம்; ரிக்டர் அளவில் 4.0 ஆக பதிவு.

  • பாகிஸ்தானில் துப்பாக்கிச்சூடு; 4 பேர் உயிரிழப்பு, 3 பேர் படுகாயம்.

  • ஜப்பான் நிலநடுக்கத்தால் 128 ஆக உயர்ந்த உயிரிழப்பு 124 மணிநேரத்திற்குபின் 90 வயது மூதாட்டி மீட்பு


விளையாட்டு: 



  • ப்ரோ கபடி லீக் : தமிழ் தலைவாஸ் அணியை வீழ்த்தி புனேரி பல்டன்ஸ் அணி வெற்றி.

  • மகளிர் டி20 போட்டி: 2வது டி20 போட்டியில் இந்தியாவை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது ஆஸ்திரேலியா அணி.

  • ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான டி20 அணி அறிவிப்பு: நீண்ட நாட்களுக்கு பிறகு இந்திய அணியில் ரோஹித், கோலிக்கு இடம்

  • ப்ரோ கபடி லீக்: பெங்கால் வாரியர்ஸ் அணியை வீழ்த்தியது ஹரியானா ஸ்டீலர்ஸ் அணி