தமிழ்நாடு



  • அரசுமுறை பயணமாக ஸ்பெயின் சென்ற முதலமைச்சர் ஸ்டாலின் இன்று காலை 8 மணியளவில் சென்னை வந்தடையவுள்ளார்.

  • இன்று டெல்லி செல்கின்றார் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை; அதிமுக முன்னாள் எம்.எல்.ஏக்கள் பாஜகவில் இணைய வாய்ப்பு 

  • அரசுப் பேருந்துகளை பராமரிப்பதில் அரசு கவனம் செலுத்தவேண்டும் என பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கோரிக்கை

  • பாஜக தேசியத் தலைவர் ஜே.பி. நட்டா கலந்து கொள்ளும் நிகழ்ச்சியில் நடைபயணத்திற்கு போலீசார் அனுமதி மறுப்பு

  • நகர்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய மக்களுக்கான சங்கம் அமைக்கப்பட வேண்டும் - அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வேண்டுகோள்

  • பொருளாதார பேரழிவுக்கு வித்திட்ட பிரதமர் மோடிக்கு தேர்தலில் மக்கள் பாடம் புகட்டுவார்கள் - தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி




இந்தியா



  • அஜித் பவாரின் கட்சியே உண்மையான தேசியவாத காங்கிரஸ் கட்சி என தேர்தல் ஆணையம் அங்கீகாரம் அளித்துள்ளது. 

  • தேர்தல் ஆணையத்தின் முடிவை எதிர்த்து உச்சநீதிமன்றத்தை நாட சரத் பவார் முடிவு

  • நாடு முழுவதும் இதுவரை 22 எய்ம்ஸ் மருத்துவமனைகள் அமைக்க ஒப்புதல் - மத்திய அமைச்சர் மன்சுக் மாண்டியா

  • ஒரே பாரதம் சிறந்த பாரதத்திற்கு கோவா சிறந்த எடுத்துக்காட்டு; பிரதமர் மோடி பேச்சு

  • புதிய தேர்தல் ஆணையாளரை தேர்ந்தெடுக்க பிரதமர் மோடி தலைமையில் இன்று கூட்டம். இந்திய தேர்தல் ஆணையாளராக பதவி வகிக்கும் அனூப் சந்திரா பாண்டேவின் பதவி காலம் வருகிற 14-ந்தேதியுடன் முடிவடைகிறது.

  • மம்தா பானர்ஜி 'I.N.D.I.A' கூட்டணியில் முக்கிய அங்கமாக உள்ளார் - ராகுல் காந்தி பேச்சு

  • மத்திய பிரதேசத்தில் பட்டாசு ஆலை விபத்து; 11 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். உயிரிழந்தவர்களுக்கு குடும்பத்தினருக்கு தலா ரூ.4 லட்சம் இழப்பீடு வழங்க மாநில அரசு ஆணை

  • நாடு முழுவதும் பொது சிவில் சட்டத்தை நடைமுறைப் படுத்த மத்திய பாஜக அரசு முயற்சி செய்து வரும் நிலையில், முதல் கட்டமாக உத்திரகாண்ட் அரசு பொது சிவில் சட்டத்தை நடைமுறைக்கு கொண்டுவந்துள்ளது. 


உலகம்



  • சிகாகோவில் கொடூரமாக தாக்கப்பட்ட இந்திய மாணவர் -  ஐதராபாத்தை சேர்ந்த அலி மற்றும் அவரது குடும்பத்தினருக்கு அனைத்து உதவிகளையும் செய்வதாக இந்திய தூதரகம் உறுதி

  • தேர்தல் முறைகேடு வழக்கு: விசாரணையில் இருந்து டிரம்ப் விலக்கு கோர முடியாது - அமெரிக்க கோர்ட்டு திட்டவட்டம்

  • ரஷ்யாவுக்கு போருக்கு தயாராக இருக்கிறோம் - போலந்து அதிரடி அறிவிப்பு

  • கனடாவில் கோவில் உண்டியலில் இருந்து பணம் திருட்டு - இந்திய வம்சாவளியைச் சேர்ந்த நபர் கைது


விளையாட்டு



  • 19 வயதுக்குட்பட்டோருக்கான ஒருநாள் உலகக் கோப்பை கிரிக்கெட்டின் அரையிறுதிப் போட்டியில் தென்னாப்பிரிக்கா அணியை 2 விக்கெட் வித்தியாசத்தில் வென்று இந்திய அணி இறுதிப் போட்டிக்கு முன்னேற்றம்

  • டி.என்.பி.எல் 2024க்கான ஏலம் இன்று நடைபெறுகின்றது. 

  • ப்ரோ கபடி லீக்; உ.பி. யோத்தாஸ் அணியை வீழ்த்தி தமிழ் தலைவாஸ் அணி வெற்றி; ப்ளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெறும் வாய்ப்பை தக்கவைத்துள்ளது. 

  • டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் முடிந்ததும் ஜிம்பாப்வேவுக்கு 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடச் செல்கின்றது இந்தியா