தமிழ்நாடு:



  • ஸ்பெயின் முன்னணி நிறுவனங்களின் நிர்வாகிகளுடன் முதலமைச்சர் சந்திப்பு; தமிழ்நாட்டில் முதலீடு செய்வதாக உறுதி

  • சிறுபான்மை மக்களுக்கு சிஏஏ சட்டத்தால் பாதிப்பு; அதிமுக அனுமதிக்காது - எடப்பாடி பழனிசாமி திடீர் அறிவிப்பு

  • மத்திய பட்ஜெட்டில் ராணுவ தளவாட மையம் அமைப்பதற்கான அறிவிப்பு வெளியிட்டு அதற்கான நிதி ஒதுக்கீடு செய்யப்பட வேண்டும் என சேலம் மாவட்ட மக்கள் கோரிக்கை.

  • தமிழக அரசின் சார்பில் சென்னையில் வரும் 7ம் தேதி முதல் 9ம் தேதி வரை டிஜிட்டல் மார்க்கெட்டிங் வகுப்புகள் நடைபெற உள்ளது.

  • தமிழ்நாட்டில் அடுத்த 3 நாட்களுக்கு லேசான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

  • பொய்யை மட்டுமே மூலதனமாக வைத்து திமுக அரசு ஆட்சி நடத்தி வருகிறது. 4 வது வாரிசும் தமிழகத்துக்கு வந்துவிட்டது - அண்ணாமலை

  • சி.ஏ.ஏ. சட்டத்தை தமிழ்நாட்டில் அனுமதிக்க மாட்டோம் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

  • நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு எதிராக பேசிய தமிழகத்தைச் சேர்ந்த, ஐ.ஆர். எஸ் அதிகாரி பாலமுருகனை பணியிடைநீக்கம் செய்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

  • சனாதன தர்மம் குறித்த விவகாரத்தில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேரில் ஆஜராக வேண்டும் என பாட்னா உயர்நீதிமன்றம் சம்மன் அனுப்பியுள்ளது.

  • சென்னையில் நேற்று வரை 1925 ரூபாய் 50 காசுகள் என விற்பனையாகி வந்த  கேஸ் சிலிண்டர், இன்று முதல் 1937 ரூபாய் என விற்பனை செய்யப்படுகிறது.


இந்தியா: 



  • நிதியாண்டிற்கான மத்திய அரசின் இடைக்கால பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்கிறார்.

  • ராஜினாமா செய்த சில நிமிடங்களில் அமலாக்கத்துறை அதிரடி; ஜார்க்கண்ட் முதலமைச்சர் ஹேமந்த் சோரன் கைது - புதிய முதலமைச்சராக சம்பாய் சோரன் தேர்வு

  • பொருளாதார சீர்திருத்தங்களால் நாடு சரியான திசையில் பயணிக்கிறது - புதிய நாடாளுமன்றத்தில் குடியரசு தலைவர் திரௌபதி முர்மு உரை

  • புதிய வகை கொரோனாவுக்கு எதிரான தடுப்பூசி செயல்பட வாய்ப்பு குறைவு - பொது சுகாதாரத்துறை ஆய்வில் தகவல்

  • மேற்கு வங்கத்தில் யாத்திரையின்போது ராகுலின் கார் மீது கல் வீசி தாக்குதல்; கண்ணாடி உடைந்து நொறுங்கியது

  • இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்வதன் மூலம், நாட்டில் தொடர்ந்து ஆறுமுறை பட்ஜெட் தாக்கல் செய்த இரண்டாவது நிதியமைச்சர் என்ற பெருமையையும் நிர்மலா சீதாராமன் பெற உள்ளார். 


உலகம்: 



  • பாகிஸ்தானில் பொது தேர்தல் வேட்பாளர் சுட்டு கொலை; உதவியாளர்கள் 4 பேர் காயம்.

  • மெக்ஸிகோவில் பேருந்து - லாரி மோதி விபத்து - 19 பேர் உயிரிழப்பு.

  • ஸ்பெயின் நாட்டின் முன்னணி நிறுவனங்களின் நிர்வாகிகள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சந்திப்பு.

  • மலேசியாவின் புதிய மன்னராக சுல்தான் இப்ராகிம் பதவியேற்பு.

  • பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கான் மற்றும் அவரது மனைவிக்கு தலா 14 ஆண்டுகள் சிறை

  • பிரான்ஸ் நாடாளுமன்றத்தில் பெண்களின் கருக்கலைப்பு உரிமை மசோதா நிறைவேற்றம்


விளையாட்டு: 



  • கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டு போட்டியில் தமிழ்நாடு அணி சாதனை; முதல் முறையாக 2வது இடம் பிடித்து அசத்தல்

  • ப்ரோ கபடி லீக்: தமிழ் தலைவாஸ் அணியை வீழ்த்தி ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் அணி வெற்றி

  • ஐசிசி டெஸ்ட் தரவரிசை - பந்து வீச்சாளர்கள் பட்டியலில் அஸ்வின் தொடர்ந்து முதலிடம்

  • ஆசிய கிரிக்கெட் கவுன்சிலின் தலைவராக ஜெய் ஷா தொடர்ந்து நீட்டிக்கப்பட்டுள்ளார்.

  •