தமிழ்நாடு:



  • தெற்கு வளர்வதோடு, வடக்கு வளர்வதற்கும் சேர்த்து வாரி வழங்குவதாக சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு 

  • மக்களவை தேர்தல் தொடர்பாக ஆலோசனை நடத்த இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் பிப்ரவரி 23 ஆம் தேதி சென்னை வருகை 

  • சென்னை மெட்ரோ ரயில்களில் பெண்களின் பாதுகாப்புக்கு பிங்க் ஸ்குவாட் அமைப்பு - பொதுமக்கள் வரவேற்பு 

  • சென்னை வேப்பேரியில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மாற்றுத்திறனாளிகள் போராட்டம் - கைது நடவடிக்கைக்கு அரசியல் தலைவர்கள் கண்டனம் 

  • தேர்தல் பத்திரம் திட்டம் ரத்து - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட தமிழக அரசியல் கட்சி தலைவர்கள் வரவேற்பு 

  • தமிழக விவசாயிகளை திமுக வஞ்சிக்கிறது - பாஜக தலைவர் அண்ணாமலை குற்றச்சாட்டு 

  • செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் வழங்க அமலாக்கத்துறை எதிர்ப்பு - வழக்கு பிப்ரவரி 19க்கு ஒத்திவைப்பு 

  • அமலாக்கத்துறை வழக்கில் விசாரணையை தொடங்க எதிர்ப்பு - செந்தில் பாலாஜி தாக்கல் செய்த மனு தள்ளுபடி 

  • பார்வையற்ற மாற்றுத்திறனாளிகளுக்கு அரசு வேலை வாய்ப்பில் 1 சதவிகிதம் இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் - சீமான் வலியுறுத்தல் 

  • 3 நாட்கள் பயணமாக தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி ஊட்டி பயணம் 

  • தமிழகத்தில் அடுத்த சில நாட்களுக்கு வறண்ட வானிலையே நிலவும் - சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் 

  • மாணவர்கள் கல்விக்கடன் பெற வசதியாக மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகங்களில் சிறப்பு முகாம் - ஏராளமானோர் பங்கேற்பு 


இந்தியா:



  • அபுதாபி பயணத்தை முடித்துக் கொண்டு கத்தார் சென்றார் பிரதமர் மோடி - விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு 

  • தேர்தல் பத்திரம் திட்டம் ரத்து - பெறப்பட்ட நிதிகளை திருப்பி அளிக்குமாறு உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு

  • நாடு முழுவதும் சிபிஎஸ்இ 10 மற்றும் 12 ஆம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வுகள் தொடங்கியது

  • ஸ்ரீஹரிகோட்டாவில் தயார் நிலையில் ஜி.எஸ்.எல்.வி. எஃப் 14 ராக்கெட் - 27 மணி நேர கவுண்டவுன் இன்று தொடக்கம்

  • காஷ்மீரில் இருந்து மக்களவை தேர்தலுக்கான பிரச்சாரத்தை தொடங்குகிறார் பிரதமர் மோடி 

  • சிறுநீரில் இருந்து மின்சாரம் தயாரித்து பாலக்காடு ஐஐடி விஞ்ஞானிகள் சாதனை 

  • கர்நாடகா சட்டப்பேரவையில் இன்று பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார் முதலமைச்சர் சித்தராமையா - புதிய அறிவிப்புகள் வெளியாக வாய்ப்பு 

  • அரியானாவில் செல்போன் இணையசேவை தடையை பிர்பவரி 17 ஆம் தேதி வரை நீட்டிப்பு 

  • திருப்பதி உயிரியல் பூங்காவில் சிங்கம் தாக்கி இளைஞர் உயிரிழப்பு - செல்ஃபி எடுக்க முயன்றபோது விபரீதம் 


உலகம்:



  • கத்தார் மன்னருடன் பிரதமர் மோடி சந்திப்பு - இருநாட்டு உறவுகளை வலுப்படுத்துவது தொடர்பாக பேச்சுவார்த்தை 

  • அமெரிக்காவில் 2 ஆண்டுகளில் இல்லாத பனிப்பொழிவால் 1000 விமானங்கள் ரத்து 

  • அமெரிக்காவில் வெற்றி பேரணியில் நடைபெற்ற துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் உயிரிழப்பு 

  • 60 வயதில் நீண்ட நாள் காதலியை திருமணம் செய்கிறார் ஆஸ்திரேலிய பிரதமர் ஆண்டனி அல்பானீசு - பதவியில் இருக்கும்போது திருமணம் செய்பவர் என்ற சாதனைப் படைத்தார்


விளையாட்டு:



  • இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட்: ரோகித், ஜடேஜா சதத்தால் முதல்நாளில் இந்தியா 5 விக்கெட் இழப்புக்கு 326 ரன்கள் குவிப்பு 

  • டெஸ்டில் அறிமுகமானார் சர்ப்ராஸ் கான் - ஜடேஜாவின் தவறான அழைப்பால் 62 ரன்களில் அவுட் 

  • சர்ப்ராஸ் கான் ரன் அவுட் - தவறுக்கு வருந்துவதாக ஜடேஜா இன்ஸ்டாகிராமில் பதிவு 

  • சர்வதேச கால்பந்து தரவரிசை பட்டியலில் இந்திய அணிக்கு சறுக்கல் - 15 இடங்கள் இறங்கி 117வது இடம் பிடித்துள்ளது.