நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தல் அதிக இடங்களில் வெற்றி பெற்று ஆட்சி அமைக்கிறது பினராயி தலைமையிலான கம்யூனிஸ்ட் கட்சி. இந்நிலையில் அமைச்சரவையில் பினராயி உள்ளிட்ட 3 பேரை தவிர அனைவருமே புதுமுகங்கள். குறிப்பாக ஷைலஜா டீச்சருக்கு கூட வாய்ப்பு வழங்கப்படவில்லை. இதனால் சமூக வலைத்தளங்களில் கடும் எதிர்ப்பை சம்பாதித்து வருகிறார் பினராயி.


இது ஒருபுறம் இருக்க, பினராயி விஜயன் அமைச்சரவையில் சில குறிப்பிட கவனம் பெறும் முகங்களும் உண்டு. அவர்களில் மூன்று பெண்கள் மீது அனைவரது பார்வையும் திரும்பியுள்ளது.


 


பேராசிரியர் பிந்து:


அரசியலுக்கு இவர் புதிதல்ல. ஏற்கெனவே திருச்சூர் மேயராக இருந்தவர். மாக்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளார் செல்வராகவனின் மனைவியும் கூட.


அரசியலுக்கு வரும் வரை பிந்து கல்லூரி ஒன்றில் ஆங்கில பாட பேராசிரியராக பணியாற்றி வந்தார்.




 


ராணி:


இதுதான் முதல் சட்டமன்ற தேர்தல் ஆனாலும் வெற்றி பெற்று அசத்தினார் ராணி. உள்ளாட்சி தேர்தலில் பல முறை வெற்றி பெற்று மக்களுக்கு சேவையாற்றிய அவரின் திறமையை கண்டு இம்முறை ராணிக்கு வாய்ப்பளித்தார் பினராயி. நம்பிக்கையை வீணாக்காமல் வெற்றி பெற்று முதல்முறை சட்டசபைக்குள் நுழைகிறார். ஆனால் அமைச்சரவை பதவி கொடுத்து ராணிக்கு மேலும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளார் பினராயி.


ராணிக்கு தேர்தலில் சீட் வழங்கும்போதே அவருக்கு எதிராக சில தலைவர்களே செயல்பட்ட நிலையில், கம்யூனிஸ்ட் கட்சி அவரது வெற்றியை அங்கீகரிக்கும் வகையில் அமைச்சரவையை வழங்கியுள்ளது.




வீணா ஜார்ஜ்


பன்முக தன்மை கொண்டவர் வீணா. அடுத்த சுகாதாரத்துறை அமைச்சர் இவர்தான் என்ற எதிர்பார்ப்பு பலருக்கும் இருக்கிறது. பத்திரிகையாளராக இருந்து இன்றைக்கு அரசியல்வாதியாக மாறியிருக்கிறார். வெறுமெனே வந்தார் வென்றார் என்றில்லாமல் காங்கிரஸ் கட்சியின் பலமான வேட்பாளரான சிவதாசனை அரண்முல்லா தொகுதியில் தோற்கடித்து வந்திருக்கிறார்.


வீணாவுக்கு கடந்த 2019 நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடவும் வாய்ப்பு கொடுக்கப்பட்டது. ஆனால் அவர் தோல்வியை தழுவினார். இருப்பினும் மீண்டும் அவர் மீது நம்பிக்கை வைத்து சீட் கொடுத்தது கட்சி.




முன்னதாக, தனது அமைச்சரவையில் எந்த ஒரு முன்னாள் அமைசருக்கும்ம் வாய்ப்பு வழங்க கூடாதென பினராயி கூறியிருந்தார். இதனால் தற்போது அமைக்கப்பட்டுள்ள அமைச்சரவையில் யாருக்கும் வாய்ப்பு வழங்கப்படவில்லை. சமூக வலைத்தளங்களில் இந்த விஷயம் பெரிதாக பேசப்பட்டாலும் கட்சியும் அதன் கொள்கைகளுமே முக்கியமே தவிர தனிமனிதர்களின் சாதனைகள் முக்கியமல்ல என கம்யூனிஸ்ட் கூறியுள்ளது. இது குறித்து பேசிய முன்னாள் அமைச்சர் ஷைலஜாவும் கூட ”கேரள சுகாதாரத்துறை என்னை மட்டும் நம்பி அல்ல, அது ஒரு மிகப்பெரிய அமைப்பு, எனக்கு கொடுக்கப்பட்ட வாய்ப்பை முறையாக பயன்படுத்தினேன்” என்றார்.