2008-ம் ஆண்டு ஜூலை மாதம் அகமதாபாத்தில் அடுத்தடுத்து 21 இடங்களில் குண்டு வெடிப்பு ஏற்பட்டது. இதில் 56 பேர் கொல்லப்பட்டனர். இது தொடர்பான வழக்கில் சம்பந்தப்பட்ட 38 பேருக்கு தூக்கு தண்டனை வழங்கி சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும் 11 பேருக்கு சாகும்வரை ஆயுள் தண்டனை வழங்கி அகமதாபாத் சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 






அகமதாபாத் குண்டு வெடிப்பில் நடந்தது என்ன?


2008 ஜூலை 26-ம் தேதி அன்று, அகமதாபாத் நகரத்தில் தொடர் குண்டு வெடிப்பு நடந்தது. இந்த தாக்குதலில் 56 பேர் கொல்லப்பட்டனர், 200-க்கும் அதிகமானோர் காயமடைந்தனர். இந்த தாக்குதலுக்கு இஸ்லாமிய தீவிரவாத அமைப்பான ஹர்கத்-உல்-ஜிஹாந்த்-அல்-இஸ்லாமி பொறுப்பெற்று கொண்டது. 70 நிமிடங்களில் நீடித்த தாக்குதலில், அகமதாபாத் நகரின் 21 இடங்களில் குண்டு வெடிப்பு நடைபெற்றது. அகமதாபாத் சிவில் மருத்துவமனையும் குண்டுவெடிப்பில் குறிவைக்கப்பட்டிருந்தது.


2002-ம் ஆண்டு குஜராத் மாநிலம் கோத்ரா கலவரத்தில் சிறுபான்மை சமூகத்தைச் சேர்ந்த பலர் கொல்லப்பட்ட சம்வத்திற்கு பழிவாங்கும் நோக்கில் இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது. அதனை அடுத்து நடைபெற்ற விசாரணையில், 85 பேரை குஜராத் காவல் துறையினர் கைது செய்தனர். அதில், 78 பேருக்கு எதிராக விசாரணை தொடங்கியது. 13 வருடம் தொடர்ந்த விசாரணையில், கடந்த வாரம் இந்த வழக்கின் தீர்ப்பு கூறப்பட்டது. இதில், குற்றம் சாட்டப்பட்ட 49 பேர் குற்றவாளிகள் என அகமதாபாத் சிறப்பு நீதிமன்றம் அறிவித்தது, மேலும் 28 பேர் விடுவிக்கப்பட்டனர். இந்நிலையில், 49 பேரில் 38 பேருக்கு தூக்கு தண்டனை வழங்கியும், 11 பேருக்கு சாகும்வரை ஆயுள் தண்டனை வழங்கியும் சிறப்பு நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.




Also Read: TNPSC Press Meet LIVE: டிஎன்பிஎஸ்சி செய்தியாளர் சந்திப்பு: குரூப்-2, குரூப்-2ஏ தேர்வு தேதி... 6 ஆயிரம் பணியிடங்கள் பற்றிய அறிவிப்பு!


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண