ஜம்மு காஷ்மீரில் வெள்ளிக்கிழமை அன்று அமர்நாத் யாத்திரையின்போது மேக வெடிப்பில் சிக்கி 2 உயிரிழந்தனர்.
தேசிய பேரிடர் மீட்புப் படை, மாநில பேரிடர் மீட்புப் படை மூலம் மீட்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன. மற்ற அமைப்புகளும் இந்த முயற்சியில் இணைந்துள்ளன.
குறிப்பிட்ட பகுதியில், குறுகிய காலத்தில் அதிக மழை பெய்தால் அதை மேக வெடிப்பு என்போம். மோசமான வானிலை காரணமாக, அமர்நாத் யாத்திரை இந்த வாரம் தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.
2 வருட கோவிட் இடைவெளிக்குப் பிறகு இந்த ஆண்டு ஜூன் 30 அன்று யாத்திரை தொடங்கியது. அன்றிலிருந்து இதுவரை 72,000-க்கும் மேற்பட்ட யாத்ரீகர்கள் அமர்நாத்தில் பிரார்த்தனை செய்துள்ளனர். ஆகஸ்ட் 11ஆம் தேதி, ரக்சா பந்தன் அன்று, யாத்திரை முடிவடைகிறது.
ஜம்மு காஷ்மீரில், பாதுகாப்பு காரணங்களை காட்டி, அமர்நாத் யாத்திரை நடைபெறும் பகுதி முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது.
சமீபத்தில், ஜம்மு காஷ்மீரில், குறிப்பிட்ட பிரிவினரை குறிவைத்து தாக்குதல் நடத்தப்பட்டது. இதையடுத்து, அச்சம் அடைந்த காஷ்மீர் பண்டிதகர்கள், காஷ்மீர் பள்ளத்தாக்கு பகுதியிலிருந்து வெளியேற தொடங்கினர்.
ஆனால், பள்ளத்தாக்கு பகுதியிலிருந்து வெளியேற வேண்டாம் என ஜம்மு காஷ்மீர் துணை நிலை ஆளுநர் மனோஜ் சின்ஹா கேட்டு கொண்டார். தேவையான அனைத்து பாதுகாப்பும் அளிக்கப்படும் என அவர் அறிவித்திருந்தார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்