ஆந்திராவின் விசாகப்பட்டினம் கிங் ஜார்ஜ் மருத்துவமனை வாசலில் கொரோனா தொற்றால் உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த தனது 16 மாதக் குழந்தையைக் காப்பாற்றச் சொல்லிப் பெண் ஒருவர் கதறும் வீடியோ காண்பவர்கள் மனதை நொறுக்குவதாக உள்ளது. அதற்கடுத்த 90 நிமிடங்களிலேயே அந்தக் குழந்தை இறந்துபோனது. முதல் பரிசோதனையில் குழந்தைக்கு நெகட்டிவ் வந்துள்ளது இருந்தும் கொரோனா அறிகுறிகள் தொடர்ந்து இருந்ததை அடுத்து இரண்டாவது பரிசோதனையைச் செய்துள்ளனர். இரண்டாவது பரிசோதனையில்தான் தொற்று உறுதியாகியுள்ளது. பரிசோதனை முடிவு வருவதற்குள் குழந்தையின் உடல்நிலை மோசமடைந்துள்ளது, குழந்தைக்கு அதன் தந்தை ஆக்சிஜன் கொடுத்தபடியே தனியார் மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றுள்ளார் அங்கே சிகிச்சைக்கு மறுத்துள்ளனர். அதற்கடுத்து கிங் ஜார்ஜ் அரசு மருத்துவமனைக்கு விரைந்துள்ளனர். 






  

ஏற்கெனவே கொரோனா பாதிக்கப்பட்டிருந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் குழந்தைக்குச் சிகிச்சை அளிக்க எவரும் முன்வரவில்லை, இதையடுத்து, ‘எனது குழந்தைக்கு இங்கே அனுமதி வேண்டாம் குறைந்தபட்சம் சிகிச்சையாவது கொடுங்கள்’ எனக் கதறுகிறார். அதன்பிறகும் குழந்தை மருத்துவமனை வாசலில் கவனிப்பாரற்றுக் காத்துக்கிடந்தது. அதற்கடுத்த சில நிமிடங்களிலேயே அந்தக் குழந்தை இறந்தது.