பேருந்தில் பயணித்த போது நிலச்சரிவில் சிக்கி 15 பேர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. 

நிலச்சரிவில்  சிக்கிய பேருந்து:

இமாச்சலப் பிரதேசத்தின் பிலாஸ்பூர் மாவட்டத்தில் இன்று (அக்டோபர் 7) ஏற்பட்ட பெரும் நிலச்சரிவில் ஒரு தனியார் பேருந்து சிக்கியது. இதில் பேருந்தில் பயணித்த  15 பேர் உயிரிழந்தனர். பல பயணிகள் சிக்கியிருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது. பிலாஸ்பூரில் பல்லு பாலம் என்ற இடம் இருக்கிறது. மலைச் சரிவான பகுதி இது.

இங்கு தனியார் பேருந்து ஒன்று வந்துள்ளது. அப்போது, நிலச்சரிவு ஏற்ப்பட்டது. இதில் அந்த பேருந்து எதிர்பாரவிதமாக சிக்கியது. இதில் பேருந்து முழுவதும் இடிபாடுகளில் மாட்டியது. சம்பவம் அறிந்து விரைந்து வந்த மீட்பு படையினர் பேருந்தில் இருந்த மற்ற பயணிகளை மீட்கும் பணியை தீவிரபடுத்தியுள்ளனர்.

அதிகாரிகள் விளக்கம்:

இந்த சம்பவம் தொடர்பாக பிலாஸ்பூர் துணை ஆணையர் ராகுல் குமார் பேசுகையில், “இந்த விபத்தில் 15 பேர் உயிரிழந்துள்ளனர்.

3 பேர் தற்போது வரை உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர். பேருந்தில் 30க்கும் மேற்பட்டோர் இருந்தனர், இருப்பினும் சரியான எண்ணிக்கை தற்போது தெரியவில்லை” என்று கூறியுள்ளார். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் சேகத்தை ஏற்படுத்தியுள்ளது.