ரஷ்ய ராணுவத்தில் பணியாற்றிய 12 இந்தியர்கள் உயிரிழந்ததாகவும் 16 பேரை காணவில்லை எனவும் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது. 

இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், “ரஷ்ய ராணுவத்தில் 126 இந்தியர்கள் பணிபுரிந்தனர். அதில் 96 பேர் பணியில் இருந்து விடுபட்டு இந்தியாவிற்கு திரும்பினர். மீதமிருந்த பேரில் ரஷ்ய ராணுவத்தில் ஆயுதப்படையில் பணியாற்றி வந்த 18 பேரில் 16 இந்தியர்களை காணவில்லை என ரஷ்ய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும் 12 பேர் கொல்லப்பட்டுள்ளனர். 

இது தொடர்பாக ரஷ்ய அதிகாரிகளிடம் தொடர்ந்து பேசி வருகிறோம். மீதமிருக்கும் நபர்களை முன் கூட்டியே அனுப்பி வைக்குமாறும் கேட்டுள்ளோம்” எனத் தெரிவித்தார்.