ராஜஸ்தான் மாநிலம் துங்கர்பூர் மருத்துவக் கல்லூரியில் நேற்று இரவு தீ விபத்து ஏற்பட்டது. இதில், 12 குழந்தைகள் சிக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. துங்கர்பூர் மருத்துவக் கல்லூரியின் பிறந்த குழந்தைகளின் தீவிர சிகிச்சைப் பிரிவில் (NICU) இந்தச் சம்பவம் நடந்துள்ளது.


குழந்தைகளின் தீவிர சிகிச்சைப் பிரிவில் தீ விபத்து:


தீ விபத்து குறித்து தீயணைப்பு வீரர்களுக்கு தகவல் அளிக்கப்பட்டது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற தீயணைப்பு வீரர்கள், குழந்தைகளை மீட்க அதிரடி நடவடிக்கையில் இறங்கினர். இறுதியில், 12 குழந்தைகளும் பத்திரமாக மீட்கப்பட்டனர்.


இதுகுறித்து கல்லூரியின் மருத்துவக் கண்காணிப்பாளர் டாக்டர் மகேந்திர தாமோர் கூறுகையில், "மூன்று தீயணைப்பு வாகனங்கள் மூலம் தீ அணைக்கப்பட்டு, 12 குழந்தைகள் மீட்கப்பட்டனர். துங்கர்பூர் மருத்துவக் கல்லூரியின் பிறந்த குழந்தைகளின் தீவிர சிகிச்சைப் பிரிவில் தீ விபத்து ஏற்பட்டது. சுமார் 12 குழந்தைகள் மீட்கப்பட்டனர். 3 தீயணைப்பு வாகனங்கள் மூலம் தீ அணைக்கப்பட்டது" என்றார்.


சம்பவம் குறித்து தீ பாதுகாப்பு அதிகாரி பாபுலால் சவுத்ரி கூறுகையில், "புதிதாகப் பிறந்த குழந்தைகள் வார்டில் தீ விபத்து ஏற்பட்டது. ஆனால், தீயணைப்புக் குழு குழந்தைகளை வெளியேற்றிவிட்டது.


நடந்தது என்ன?


புதிதாகப் பிறந்த குழந்தைகள் வார்டில் ஏற்பட்ட தீ விபத்து குறித்து மருத்துவமனையில் இருந்து எங்களுக்குத் தகவல் கிடைத்தது. நான் எனது குழுவுடன் மூன்று வாகனங்களுடன் சென்றேன். புகை இருந்தது. நாங்கள் தீயை அணைத்து குழந்தைகளை பாதுகாப்பாக மீட்டோம்" என்றார்.


நாளுக்கு நாள் விபத்து சம்பவங்கள் அதிகரித்த வண்ணம் இருக்கிறது. சமீபத்தில் கூட, மத்திய பிரதேச மாநிலம் ஷாதூல் நகரில் சிங்பூர் ரயில் நிலையம் அருகே இரண்டு சரக்கு ரயில்கள் நேருக்கு நேரு மோதி விபத்து ஏற்பட்டது. இரண்டு ரயில்கள் மோதி வேகத்தில் ஒரு  ரயிலின் என்ஜின் மற்றொரு ரயிலின் மீது ஏறியது. இந்த கோர விபத்தில் ஒரு ரயிலின் எஞ்ஜின் தீப்பிடித்து ஏரிந்தது. 


இந்த விபத்தில் இரண்டு ரயில்களின் ஓட்டுநர்கள் உட்பட 5  பேர் காயமடைந்துள்ளதாக தகவல் வெளியானது. இதனை அறிந்த போலீசாரும், தீயணைப்புத்துறையினரும் விரைந்தனர். மேலும், விபத்து ஏற்பட்ட பகுதியில் வேறு யாரேனும் சிக்கியுள்ளனரா என தீயணைப்புத்துறையினர் தேடினர்.  இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.


இதுகுறித்து அதிகாரி ஒருவர் கூறுகையில், "பிலாஸ்பூரில் இருந்து மத்திய பிரதேச மாநிலம் கட்னி பகுதிக்கு நிலக்கரி ஏற்றி வந்த சரக்கு ரயில் மத்திய பிரதேசத்தின் ஷாஹ்டேல் மாவட்டம் சிங்கூர் ரயில் நிலையத்தில் நின்று கொண்டிருந்த ரயில் மீது மோதி விபத்துக்குள்ளானது.


இதில் ரயில் தீ பிடித்து ஏரிந்தது. இதில் ரயில் ஓட்டுநர் ஒருவர் உயிரிழந்துள்ளார். ரயில்வே ஊழியர்கள் 5 பேர் காயமடைந்துள்ளனர் என்று தெரிவித்தனர்.