டைம் இதழ் 'TIME 100 Next India’ என்ற பெயரில் வெளியிட்டுள்ள 100 செல்வாக்கு மிக்க இந்தியர்களின் பட்டியல் வெளியாகி கவனம் ஈர்த்துள்ளது. 

Continues below advertisement

'TIME 100 Next India’

அமெரிக்க நிறுவனமான டைம் இதழ் முதன்முறையாக இந்தியாவின் முக்கியமான 100 நபர்களின் பட்டியலை வெளியிட்டுள்ளதால், இந்தியர்களிடையே இப்பட்டியல் குறித்த எதிர்ப்பார்ப்பு அதிகரித்துள்ளது. ஊடகம், வர்த்தகம், பொழுதுபோக்கு, அறிவியல் மற்றும் விளையாட்டு உள்ளிட்ட பல்வேறு துறைகளில் வளர்ந்து வரும் 100 இந்தியர்கள் மற்றும் வெளிநாடு வாழ் இந்தியர்களை அங்கீகரிக்கும் விதமாக இப்புது முயற்சி விளங்குகிறது.

பட்டியலில் யார்? யார்?

டைம் இதழின் இப்பட்டியலில் ஆலியா பட், ஆர்யன் கான், அனிருத் ரவிச்சந்தர், சூர்யவன்ஷி, குகேஷ் உள்ளிட்டோர் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. குறிப்பாக திரைத்துறையை பொறுத்த அளவில் தென்னிந்தியாவிலிருந்து இசையமைப்பாளர் அனிரூத், நடிகைகள் சமந்தா, நயன்தாரா,சாய் பல்லவி,  பார்வதி திருவோத்து உள்ளிட்டோர் இடம்பிடித்துள்ளனர். இப்பட்டியலில் இடம்பெற்றுள்ள பாலிவுட் முன்னணி நடிகர் ஷாருக்கானின் மகனான ஆர்யன்கான், 2025-ஆம் ஆண்டில் நெட்ஃபிலிக்ஸ் தொடரான 'தி பாஸ்டர்ட்ஸ் ஆஃப் பாலிவுட்' மூலம் இயக்குநராக தனது திரைப்பயணத்தை தொடங்கினார். விளையாட்டுத்துறையை பொறுத்தவரையில் இந்தியப் பெண்கள் கிரிக்கெட் அணி முன்னாள் கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர், இளம் கிரிக்கெட் வீரர் வைபவ் சூர்யவன்ஷி, குத்துச்சண்டை வீராங்கனை லவ்லினா போர்கோஹைன்,  தடகள வீராங்கனை வித்யா ராம்ராஜ் ஆகியோர் தேர்வாகியுள்ளனர்.

Continues below advertisement

இப்பட்டியல் வெளியீட்டு விழா நிகழ்வு டிசம்பர் 12-ஆம் தேதியன்று அன்று மும்பையில் ரிலையன்ஸ் பவுண்டேஷன் உடன் இணைந்து டைம் நிறுவனம் நடத்த உள்ளது குறிப்பிடத்தக்கது.