கிருஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு கொண்டாட்டத்தின் காரணமாக டெல்லியில் மட்டும் 1.10 கோடி மது பாட்டில்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளது. 


தலைநகரான டெல்லியில் 2022ஆம் ஆண்டின் இறுதி வாரத்தில் அதாவது, டிசம்பர் மாதத்தின் 24ஆம் தேதியில் இருந்து 31ஆம் தேதி வரையிலான காலகட்டத்தில் சுமார் 1.10 கோடி மது பாட்டில்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. அதிலும் குறிப்பாக இவற்றில் அதிகப்படியானவை விஸ்கி பாட்டிகள் என அதிகாரப்பூர்வ தகவல்கள் கூறுகின்றன. விற்பனை செய்யப்பட்ட 1.10 கோடி பாட்டில்களின் மதிப்பு மட்டும் ரூ. 218 கோடி ரூபாயாகும். 


இதில் புத்தாண்டு கொண்டாட்டத்திற்காக மட்டும், 20.30 லட்சம் மது பாட்டில்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளது. இதன் மதிப்பு மட்டும், ரூ 45.28 கோடி. டிசம்பர் 24 முதல் 31 வரை டெல்லியில் 1.10 கோடி மதுபாட்டில்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளது. ரூ 218 கோடி மதிப்புள்ள மதுபானங்கள் விற்பனை செய்யப்பட்டன . 2022 டிசம்பரில் டெல்லியில் நாள் ஒன்றுக்கு சராசரியாக 13.8 லட்சம் மதுபாட்டில்கள் விற்பனையாகியுள்ளதாக அதிகாரப்பூர்வ புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன, இது கடந்த மூன்று ஆண்டுகளில், இந்த ஆண்டு மட்டும் தான் ஆண்டு இறுதியில் மது அதிகம் விற்பனை செய்யப்பட்டுள்ளது என அதிகாரப்பூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன. 


2022 டிசம்பரில், டெல்லி அரசுக்கு மதுபான விற்பனை,  கலால் வரி மற்றும் மதிப்பு கூட்டு வரி மூலம் ₹ 560 கோடி வருவாய் ஈட்டியுள்ளது என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. டில்லியில் டிசம்பர் மாதத்தில் 2019-ல் 12.55 லட்சம் மதுபாட்டில்கள் விற்பனையானது, 2020-ல் 12.95 லட்சமாகவும், 2021-ல் 12.52 லட்சமாகவும், 2022-ல் 13.77 லட்சமாகவும் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. 


தற்போது, ​​நான்கு தில்லி அரசு நிறுவனங்களால் நடத்தப்படும் சுமார் 550 மதுபான விற்பனை நிலையங்கள் மூலம் டெல்லியில் மது விற்பனை செய்யப்படுகிறது. நகரம் முழுவதும் உள்ள 900 க்கும் மேற்பட்ட ஹோட்டல்கள், பப்கள் மற்றும் உணவகங்களில் உள்ள பார்களிலும் மது விற்பனை செய்யப்படுவது குறிப்பிடத்தக்கது.


பண்டிகைக் காலம், தீபாவளியன்று மதுபான விற்பனை உள்ளிட்டவற்றால், கலால் வருவாயில் துறைக்கு நல்ல வருமானம் கிடைத்தது. அக்டோபர் 2022 தீபாவளியின் போது , ​​டெல்லியில் ரூ. 100 கோடிக்கு மேல் மதிப்புள்ள 48 லட்சம் பாட்டில்கள் விற்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.