உடலில், வைட்டமின் டி, செல்லுலார் செயல்பாட்டைக் கட்டுப்படுத்தவும், நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்தவும், நோய் எதிர்ப்பை ஊக்குவிக்கவும் ஒரு ஹார்மோனைப் போலவே செயல்படுகிறது.


கூடுதலாக, வைட்டமின் டி சுவாசத்தை ஊடுருவும் மற்றும் இன்ஃப்ளூயன்ஸா வைரஸ்களுக்கு எதிராக பாதுகாப்பை வழங்குகிறது என்று ஆய்வுகள் கூறுகின்றன. சில ஆய்வுகளின்படி, வைட்டமின் டி புரோஸ்டேட் புற்றுநோய், ரத்தப் புற்றுநோய் மற்றும் இதய நோய்களைத் தடுக்க உதவுகிறது. இருப்பினும், அதற்கான ஆதாரம் இல்லை.


வைட்டமின் டி குறைபாட்டைப் போக்க 5 ஊட்டச்சத்து பானங்கள்:


பசும் பால்:


வைட்டமின் டி யின் சிறந்த ஆதாரமாக இருப்பதோடு, எலும்புகளை வலுப்படுத்தும் கால்சியத்தையும் அதிகளவில் கொண்டுள்ளது. தினமும் பால் பருகினால் சருமம் மற்றும் முடியை நன்றாக பராமரிக்கலாம். வெறும் பால் அருந்தப் பிடிக்கவில்லை என்றால் அதை கொண்டு ஸ்மூத்தி ஏதேனும் தயாரித்து அருந்தலாம். இல்லாவிட்டால் பாலில் சாக்கலேட் சிரப் சேர்த்து அருந்தலாம்.


சோயா பால்:


சோயா பாலில் மோனோசாச்சுரேட்டட் மற்றும் பாலிஅன்சாச்சுரேட்டட் கொழுப்பு அமிலங்கள் நிறைந்துள்ளன. சோயா பாலை தவறாமல் அருந்துவதால் இதய அமைப்பு ஆரோக்கியமாக இருக்கும். பிளாஸ்மா லிப்பிட் அளவை மேம்படுத்தவும் உதவுகிறது என்றும் நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். இது எதிர்காலத்தில் இதய நோய் அபாயத்தையும் குறைக்க உதவுகிறது. சோயா பீன்ஸில் அதிக அளவில் புரோட்டீன், மிதமான அளவில் கொழுப்பு, நார்ச்சத்து, பி வைட்டமின்கள், ஃபோலிக் அமிலம், பொட்டாஷியம்,  கால்சியம் மற்றும் இரும்புச் சத்துகள் நிறைந்துள்ளன.சோயாவில் கரையும் நார்ச்சத்து உள்ளதால் இரத்தத்திலுள்ள சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்துகிறது.


மோர்:


மோரில் வைட்டமின்களான வைட்டமின் பி காம்ப்ளர்ஸ், வைட்டமின் டி, புரோட்டீன் மற்றும் பொட்டாசியம் அதிகம் உள்ளது. அதில் வைட்டமின் பி, அதாவது ரிபோப்ளேவின் தான் உணவை எனர்ஜியாக மாற்றவும், செரிமானத்தை அதிகரிக்கவும், ஹார்மோனை சீராக சுரக்கவும் உதவி புரிகிறது. தினமும் ஒரு டம்ளர் மோர் குடித்து வந்தால், வைட்டமின் குறைபாடு ஏற்படுவதைத் தடுக்கலாம்


ஆரஞ்சு ஜூஸ்:


ஆரஞ்சு பழங்கள்; இதில் அதிக வைட்டமி சி இருக்கிறது. அதுபோல வைட்டமின் டி-யும் இருக்கிறது. கால்சியம், பாஸ்பரஸ், இரும்புசத்து, மெக்னீஷியம், விட்டமின் ஏ,பி, இ இருக்கிறது. உடல் சூடு, வெட்டைச்சூடு, மூல வியாதி போன்றவற்றிற்கும், சிறு நீர் எரிச்சல், சிறுநீர்க் கோளாறுகளுக்கும் இரவில் அரை டம்ளர் ஆரஞ்சு சாறு குடித்தால் அற்புத பலன் கிடைக்கும். உடல் எடை, மூட்டு வலி, உடம்பில் அதிக உப்புச் சத்து, கொலஸ்ட்ரால், இரத்த அழுத்தம் சரியாக இதுவே சிறந்த கனியாக செயல்படுகிறது.


கேரட் ஜூஸ்:


கேரட்டில் அதிகளவில் ஆன்டி ஆக்சிடண்ட்டுகள் உள்ளது. மேலும் வைட்டமின் ஏ, வைட்டமின் சி, வைட்டமின் பி3, வைட்டமின் கே, வைட்டமின் டி மற்றும் மினரல்களும் நிறைந்துள்ளது. இதனை தினந்தோறும் உணவில் சேர்த்துக் கொண்டு வந்தால் பல ஆரோக்கிய நன்மைகளை நம்மால் பெற முடியும்.


இவை எல்லாம் எளிதில் செய்யக் கூடியது. செலவும் குறைவு. எதற்கெடுத்தாலும் மாத்திரை மருந்துகளை நாடுவதைக் காட்டிலும் இதுபோன்ற ஆரம்பகட்ட வைட்டமின் குறைபாடுகளை உணவாலேயே சரி செய்யலாம். அதுவும் கோடையில் இதுபோல் ஜூஸ் போட்டு சப்ளிமென்ட் எடுக்கக் கசக்குமா என்ன?