என்சிசி முகாம் நடத்தி மாணவி பாலியல் வன்கொடுமை: வழக்கில் திடுக்கிடும் தகவல்கள்.

என்சிசி முகாம் நடத்தி மாணவி பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் திடுக்கிடும் தகவல்கள். 13 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த போலிப் பயிற்சியாளர் குறித்து திடுக்கிடும் தகவல்கள் அம்பலமாக உள்ளது.

Continues below advertisement

கிருஷ்ணகிரி மாவட்டம், பர்கூர் அருகே உள்ள கந்திகுப்பம் கிராமத்தில் செயல்படும் தனியார் பள்ளியில் கடந்த ஐந்தாம் தேதி முதல் 9ஆம் தேதி வரை தேசிய மாணவர் படை என்சிசி முகாம் நடந்தது. அதில் அந்த பள்ளியை சேர்ந்த 17 மாணவிகள் கலந்து கொண்டனர். 

Continues below advertisement

போலியான ஆவணங்கள் கண்டறியப்பட்டது

முகாமில் பங்கேற்ற எட்டாம் வகுப்பு படித்து வரும் 13 வயது மாணவியை பயிற்சியாளரும் நாம் தமிழர் கட்சியின் முன்னாள் நிர்வாகியுமான சிவராமன் (35) என்பவர் பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். மேலும் 13 மாணவிகள் பாலியல் தொந்தரவுக்கு உள்ளாகி உள்ளனர்.

சிவராமன் உள்ளிட்ட 11 பேரை போக்சோ சட்டத்தில் கைது

 இது குறித்து பயிற்சியாளர் சிவராமன் உட்பட 11 பேரை போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர். கைதான சிவராமன் குறித்து போலீசார் நடத்திய விசாரணையில் பரபரப்பு தகவல்கள் அம்பலமாக உள்ளது.

 சிவராமன்  பள்ளியில் படித்த காலத்தில் என்சிசி மாணவர் ஆக இருந்துள்ளார் அப்போது கிடைத்த அனுபவத்தின் அடிப்படையில் தன்னை என்சிசி அலுவலராக தனியார் பள்ளி, கல்லூரிகளில் போலியாவணங்கள் தயாரித்து மோசடி செய்துள்ள சம்பவம் தற்போது வெளியாகி உள்ளது. குறிப்பாக புகாருக்கு உள்ளான தனியார் பள்ளி என்சிசி பயிற்சி அளிக்க மாணவி ஒருவருக்கு தலா 1500 பணம் வசூல் செய்துள்ளார். இந்த பணத்தை கொண்டு மாணவிகளுக்கு பதக்கங்கள் கேடயங்கள் தயார் செய்து அதில் என்சிசி ஸ்டிக்கர்களை போலியாக ஒட்டி வழங்கி உள்ளார்.

ஒருவர் மட்டும் தப்பி ஓட்டம்

 மேற்கண்ட தகவல்கள் போலீசாரின் விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்த வழக்கில் 11 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் சுதாகர் என்பவரை போலீசார் தேடி வருகின்றனர். 

போலீசாரின் பிடியிலிருந்து சிவராமன் தப்ப முயன்ற போது கீழே விழுந்து கால் முறிவு

அவரைப் பிடிக்க தனிப்படைகள் அமைக்கப்பட்டு இதற்கிடையே மாணவி பாலியல் துண்புறுத்தலுக்கு உள்ளான பள்ளிக்கு நேற்று இரண்டாவது நாளாக விடுமுறை விடப்பட்டது. சம்பந்தப்பட்ட பள்ளி முன்பு ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். கைதான சிவராமன் போலீஸ் பிடியிலிருந்து நேற்று முன்தினம் தப்ப முயன்ற போது கீழே விழுந்து கால் முறிந்தது அவர் கிருஷ்ணகிரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

 இவர் இதே போல கிருஷ்ணகிரி மாவட்டத்தில் சில கல்வி நிறுவனங்களில் போலியாக முகாம் நடத்தி உள்ளதாக போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளன. இது குறித்து போலீசார் மற்றும் கல்வித்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். 


தனியார் பள்ளிகளை மிரட்டி பயிற்சி முகாம் என்சிசி ஒருங்கிணைப்பாளர் பேட்டி 

கிருஷ்ணகிரி மாவட்ட தேசிய மாணவர் படையின் என்சிசி ஒருங்கிணைப்பாளர் கோபு கூறியதாவது:-

 என்சிசி மூலம் பள்ளி கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு பயிற்சி அளிக்க ராணுவத்தில் முறையாக 6 மாதம் பயிற்சி பெற வேண்டும். பள்ளிகளில் முகாம் நடத்துவதற்கு சேலத்தில் ராணுவ கட்டுப்பாட்டில் உள்ள என்சிசி அலுவலகத்தில் அனுமதியும் அலுவலர்கள் நேரடியாக ஒருங்கிணைந்து முகாம் நடத்துவார்கள். கிருஷ்ணகிரி மாவட்டத்தை பொருத்தவரை கிருஷ்ணகிரி, காவேரிப்பட்டணம், பாரூர், நாகரசம்பட்டி, ஒசூர் மற்றும் ஊத்தங்கரையில் உள்ள அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளிகள் மற்றும் ஓசூர் தனியார் பள்ளி ஒன்றிலும் தேசிய மாணவர் படை செயல்பட்டு வருகிறது.

 சிவராமன் பள்ளியில் படிக்கும் போது தேசிய மாணவர் படையில் மாணவராக இருந்துள்ளார். அவர் என்சிசி முகாம் நடத்துவதற்கு தகுதியற்றவர் அரசியல் கட்சி ஒன்றில் இருந்த பதவியை வைத்துக்கொண்டு தனியார் பள்ளிகளை மிரட்டி பயிற்சி முகாம்கள் நடத்தியுள்ளார்.

 மேலும் பயிற்சி பெறும் போது பல்வேறு போட்டிகளில் வெற்றி பெறும் மாணவ, மாணவிகளுக்கு சான்றிதழ்களை என்சிசி வழங்கும். தனிப்பட்ட முறையில் யாரும் வழங்க முடியாது இவ்வாறு கூறினார். 

Continues below advertisement