= liveblogState.currentOffset ? 'uk-card uk-card-default uk-card-body uk-padding-small _box_shadow hidden' : 'uk-card uk-card-default uk-card-body uk-padding-small _box_shadow'">
எப்போதெல்லாம் தமிழ்நாடு வருகிறேனோ, அப்போதெல்லாம் எனக்குள் புதிய சக்தி பிறக்கிறது- பிரதமர் மோடி! எப்போதெல்லாம் தமிழ்நாடு வருகிறேனோ, அப்போதெல்லாம் எனக்குள் ஒரு புதிய சக்தியை நிரப்பிக் கொண்டு செல்கிறேன் என்று பன்னாட்டு விமான நிலைய முனைய திறப்பு விழாவில் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
= liveblogState.currentOffset ? 'uk-card uk-card-default uk-card-body uk-padding-small _box_shadow hidden' : 'uk-card uk-card-default uk-card-body uk-padding-small _box_shadow'">
உலகில் எந்த இடத்திற்கு சென்றாலும் தமிழை நான் புகழாமல் இருப்பதில்லை: பிரதமர் மோடி பேச்சு உலகில் எந்த இடத்திற்குச் சென்றாலும் தமிழை நான் புகழாமல் இருப்பதில்லை என்று பிரதமர் மோடி புகழாரம் சூட்டியுள்ளார்.
= liveblogState.currentOffset ? 'uk-card uk-card-default uk-card-body uk-padding-small _box_shadow hidden' : 'uk-card uk-card-default uk-card-body uk-padding-small _box_shadow'">
தொட்ட துறை அனைத்திலும் சிகரம் தொட்ட மாநிலம் தமிழ்நாடு: முதல்வர் ஸ்டாலின் பெருமிதம் தொட்ட துறை அனைத்திலும் சிகரம் தொட்ட மாநிலம் தமிழ்நாடு என்று பிரதமர் முன்னிலையிலேயே முதல்வர் ஸ்டாலின் பெருமிதம் தெரிவித்துள்ளார்.
= liveblogState.currentOffset ? 'uk-card uk-card-default uk-card-body uk-padding-small _box_shadow hidden' : 'uk-card uk-card-default uk-card-body uk-padding-small _box_shadow'">
முதலமைச்சர் ஸ்டாலின் வலியுறுத்தல் பல்கலைக்கழகங்கள் சமூக நீதியையும் புதுமைகளையும் புகுத்தும் இடமாக இருக்க வேண்டும் என முதலமைச்சர் ஸ்டாலின் வலியுறுத்தினார்.
= liveblogState.currentOffset ? 'uk-card uk-card-default uk-card-body uk-padding-small _box_shadow hidden' : 'uk-card uk-card-default uk-card-body uk-padding-small _box_shadow'">
”புதியதோர் உலகம் செய்வோம்” பாரதிதாசன் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் ”புதியதோர் உலகம் செய்வோம்” என்ற பாரதிதாசனின் வரிகளை கூறியதோடு, ”எனது மாணவ குடும்பமே, மிக்க நன்றி” போன்ற தமிழ் வார்த்தைகளையும் குறிப்பிட்டார்.
= liveblogState.currentOffset ? 'uk-card uk-card-default uk-card-body uk-padding-small _box_shadow hidden' : 'uk-card uk-card-default uk-card-body uk-padding-small _box_shadow'">
திறன்களை வளர்க்க வேண்டும் - பிரதமர் மோடி நாட்டின் வளர்ச்சிக்கும், மேம்பாட்டிற்கும் தேவையான திறன்களை வளர்த்துக் கொண்டே இருக்க வேண்டும் - பிரதமர் மோடி
= liveblogState.currentOffset ? 'uk-card uk-card-default uk-card-body uk-padding-small _box_shadow hidden' : 'uk-card uk-card-default uk-card-body uk-padding-small _box_shadow'">
”எனது மாணவ குடும்பமே” மாணவர்களுக்கு முன்பு உரையாற்றிய பிரதமர் மோடி, ”எனது மாணவ குடும்பமே” என்ற வாக்கியத்தை இதுவரை 6 முறை பயன்படுத்தியுள்ளார்.
= liveblogState.currentOffset ? 'uk-card uk-card-default uk-card-body uk-padding-small _box_shadow hidden' : 'uk-card uk-card-default uk-card-body uk-padding-small _box_shadow'">
பிரதமர் மோடி பெருமிதம்.. ”இந்த ஆண்டில் எனது முதல் பொதுநிகழ்ச்சியே தமிழ்நாட்டில் தான் தொடங்கியுள்ளது. பாரதிதாசன் பல்கலைக்கழத்தில் உரையாற்றிய முதல் இந்திய பிரதமர் என்ற பெருமையும் எனக்கே உள்ளது” என பிரதமர் மோடி பெருமிதம் தெரிவித்துள்ளார்.
= liveblogState.currentOffset ? 'uk-card uk-card-default uk-card-body uk-padding-small _box_shadow hidden' : 'uk-card uk-card-default uk-card-body uk-padding-small _box_shadow'">
பட்டங்களை வழங்கிய பிரதமர் மோடி பல்வேறு பிரிவுகளில் சிறந்த மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு, பிரதமர் மோடி பட்டங்களை வழங்கினார்.
= liveblogState.currentOffset ? 'uk-card uk-card-default uk-card-body uk-padding-small _box_shadow hidden' : 'uk-card uk-card-default uk-card-body uk-padding-small _box_shadow'">
சிறந்து விளங்கும் தமிழ்நாடு - முதலமைச்சர் ஸ்டாலின் இந்தியாவிலேயே உயர் கல்வியில் சிறந்து விளங்கும் மாநிலம் தமிழ்நாடு. நீதிக்கட்சியின் திட்டம் தான் தமிழகத்தை கல்வியில் சிறந்த மாநிலமாக மாற்றியுள்ளது. அனைத்து தரப்பினரும் உயர்கல்வி பெற தேவையான அனைத்து உதவிகளையும் அரசு செய்து வருகிறது - முதலமைச்சர் ஸ்டாலின்
= liveblogState.currentOffset ? 'uk-card uk-card-default uk-card-body uk-padding-small _box_shadow hidden' : 'uk-card uk-card-default uk-card-body uk-padding-small _box_shadow'">
பிரதமருக்கு வாழ்த்து.. பட்டமளிப்பு விழாவில் உரையாற்றிய முதலமைச்சர் ஸ்டாலின், பிரதமர் மோடிக்கு ஆங்கிலத்தில் புத்தாண்டு வாழ்த்துகளை தெரிவித்தார்.
= liveblogState.currentOffset ? 'uk-card uk-card-default uk-card-body uk-padding-small _box_shadow hidden' : 'uk-card uk-card-default uk-card-body uk-padding-small _box_shadow'">
பிரதமர் அருகே முதலமைச்சர் ஸ்டாலின் பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் நடைபெறும் பட்டமளிப்பு விழாவின் மேடையில் பிரதமர் மோடி, ஆளுநர் ரவி, முதலமைச்சர் ஸ்டாலின், அமைச்சர் ராஜகண்ணப்பன் மற்றும் பல்கலைக்கழக துணைவேந்தர் ஆகியோர் அமர்ந்துள்ளனர்.
= liveblogState.currentOffset ? 'uk-card uk-card-default uk-card-body uk-padding-small _box_shadow hidden' : 'uk-card uk-card-default uk-card-body uk-padding-small _box_shadow'">
தொடங்கியது பட்டமளிப்பு விழா பிரதமர் மோடி பங்கேற்கும் பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழா தொடங்கியது. அப்போது, அவருக்கு நினைவுப் பரிசும் வழங்கப்பட்டது.
= liveblogState.currentOffset ? 'uk-card uk-card-default uk-card-body uk-padding-small _box_shadow hidden' : 'uk-card uk-card-default uk-card-body uk-padding-small _box_shadow'">
பாரதிதாசன் பல்கலை.,யில் பிரதமர் மோடி திருச்சி விமான நிலையத்திலிருந்து காரில் பயணித்து, சாலை மார்க்கமாக பாரதிதாசன் பல்கலைக்கழகத்தை வந்தடைந்தார் பிரதமர் மோடி
= liveblogState.currentOffset ? 'uk-card uk-card-default uk-card-body uk-padding-small _box_shadow hidden' : 'uk-card uk-card-default uk-card-body uk-padding-small _box_shadow'">
விமான நிலையத்தில் இருந்து புறப்பட்டார் மோடி திருச்சி விமான நிலையத்திலிருந்து பிரதமர் மோடி, பாரதிதாசன் பல்கலைக்கழகத்திற்கு புறப்பட்டார். கார் மூலம் சுமார் 11 கிலோ மீட்டர் பயணம் செய்து அவர் பல்கலைக்கழக நிகழ்ச்சியில் பங்கேற்க உள்ளார்.
= liveblogState.currentOffset ? 'uk-card uk-card-default uk-card-body uk-padding-small _box_shadow hidden' : 'uk-card uk-card-default uk-card-body uk-padding-small _box_shadow'">
குவிந்த பாஜக பக்தர்கள்: திருச்சி வந்துள்ள பிரதமர் மோடியை வரவேற்கும் விதமாக, விமான நிலையத்திற்கு வெளியே சாலையின் இருபுறமும் ஏராளமான பாஜக தொண்டர்கள் குவிந்துள்ளனர். அவர்கள் கைகளில் பாஜகவின் கொடியை ஏந்தியவாறு மோடியை காண காத்திருக்கின்றனர்.
= liveblogState.currentOffset ? 'uk-card uk-card-default uk-card-body uk-padding-small _box_shadow hidden' : 'uk-card uk-card-default uk-card-body uk-padding-small _box_shadow'">
வரவேற்பு ஏற்பாடுகள் தீவிரம்.. பிரதமர் மோடியை வரவேற்க விமான நிலையத்திற்கு வெளியே சாலையோரங்களில் மயிலாட்டம், ஒயிலாட்டம் போன்ற கலைநிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது
= liveblogState.currentOffset ? 'uk-card uk-card-default uk-card-body uk-padding-small _box_shadow hidden' : 'uk-card uk-card-default uk-card-body uk-padding-small _box_shadow'">
திருச்சி வந்தார் பிரதமர் மோடி... பட்டமளிப்பு விழாவில் பங்கேற்பதோடு பல்வேறு நலத்திட்டங்களையும் தொடங்கி வைப்பதற்காக, பிரதமர் மோடி தனி விமானத்தில் திருச்சி வந்தடைந்தார். அவரை ஆளுநர் ரவி மற்றும் முதலமைச்சர் ஸ்டாலின் உள்ளிட்டோர் நேரில் சென்று வரவேற்றனர்.
= liveblogState.currentOffset ? 'uk-card uk-card-default uk-card-body uk-padding-small _box_shadow hidden' : 'uk-card uk-card-default uk-card-body uk-padding-small _box_shadow'">
PM Modi Trichy Visit LIVE: பிரதமர் மோடியை வரவேற்கும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்..! இன்று காலை 08.00 மணியளவில் மாண்புமிகு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னையிலிருந்து
தனி விமானத்தில் பயணித்து 08.50 மணிக்கு திருச்சி விமான நிலையம் சென்றடைதல்.
10.10 மணிக்கு மாண்புமிகு இந்தியபிரதமர் அவர்களின் வரவேற்பு நிகழ்ச்சி
10.30 மணிக்கு பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில்
பட்டமளிப்பு விழா,
12.00 மணியளவில் திருச்சி விமான நிலைய
நிகழ்ச்சிற்குப்பின்
15.45 மணியளவில் சென்னை விமான நிலையத்திற்கு வருகை
= liveblogState.currentOffset ? 'uk-card uk-card-default uk-card-body uk-padding-small _box_shadow hidden' : 'uk-card uk-card-default uk-card-body uk-padding-small _box_shadow'">
பிரதமரை சந்திக்கிறார் ஓபிஎஸ்: பல்வேறு அரசியல் சூழலுக்கு மத்தியில் தமிழகம் வரும் பிரதமர் மோடியை, விமான நிலையத்தில் வைத்து முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர் செல்வம் சந்திப்பார் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
= liveblogState.currentOffset ? 'uk-card uk-card-default uk-card-body uk-padding-small _box_shadow hidden' : 'uk-card uk-card-default uk-card-body uk-padding-small _box_shadow'">
திருச்சியில் மூன்றடுக்கு பாதுகாப்பு பிரதமர் வருகையையொட்டி திருச்சியில் 3 அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. திருச்சி மற்றும் அதைச் சுற்றியுள்ள மாவட்டங்களைச் சேர்ந்த 5 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். திருச்சி விமான நிலையத்தில் இருந்து பாரதிதாசன் பல்கலைக்கழகம் வரையிலான 11 கிமீ தொலைவுக்கு சாலையின் இருபுறங்களிலும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இடையூறு ஏற்படாத வகையில் தடுப்பு கட்டைகள் அமைக்கப்பட்டுள்ள நிலையில் அந்த சாலையில் போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது.
= liveblogState.currentOffset ? 'uk-card uk-card-default uk-card-body uk-padding-small _box_shadow hidden' : 'uk-card uk-card-default uk-card-body uk-padding-small _box_shadow'">
பல்வேறு நலத்திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டு விழா 5 சாலைத் திட்டங்களை தொடங்கி வைப்பதோடு, காமராஜர் துறைமுகத்தின் பொது சரக்குக் கப்பல் தங்குமிடம் 2-ஐ நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார். ரூ.9 ஆயிரம் கோடிக்கும் அதிக மதிப்பிலான பெட்ரோலியம், இயற்கை எரிவாயு திட்டங்களை தொடங்கி வைப்பதுடன், புதிய திட்டங்களுக்கும் அடிக்கல் நாட்டுகிறார். கல்பாக்கம் இந்திரா காந்தி அணு ஆராய்ச்சி மையத்தில் ரூ.400 கோடி மதிப்பிலான விரைவு எரிபொருள் மறுசுழற்சி உலையையும் திறக்கிறார்.
= liveblogState.currentOffset ? 'uk-card uk-card-default uk-card-body uk-padding-small _box_shadow hidden' : 'uk-card uk-card-default uk-card-body uk-padding-small _box_shadow'">
திருச்சி விமான நிலைய முனையத்தை திறந்து வைக்கிறார் பிரதமர் திருச்சி விமானநிலைய புதிய முனையத்தை திறப்பதோடு சேலம் – மேக்னசைட் சந்திப்பு – மேட்டூர் அணைப் பிரிவில் 41.4 கிமீ இரட்டை ரயில் பாதை திட்டம், மதுரை - தூத்துக்குடி 160 கிமீ இரட்டை ரயில் பாதை, திருச்சி - மானாமதுரை- விருதுநகர், விருதுநகர் - தென்காசி, செங்கோட்டை- தென்காசி, திருநெல்வேலி - திருச்செந்தூர் ரயில் பாதைகள் மின் மயமாக்கம் மற்றும் திருச்சி என்ஐடியில் ரூ.41 கோடியில் 1.2 லட்சம் சதுரடியில் 506 மாணவர்கள் தங்கும் வகையில் கட்டப்பட்டுள்ள ‘அமெதிஸ்ட்’ விடுதி ஆகியவற்றை பொதுமக்கள் பயன்பாட்டிற்காக பிரதமர் மோடி திறந்து வைக்கிறார்.
= liveblogState.currentOffset ? 'uk-card uk-card-default uk-card-body uk-padding-small _box_shadow hidden' : 'uk-card uk-card-default uk-card-body uk-padding-small _box_shadow'">
பாரதிதாசன் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் பிரதமர் மோடி.. காலை 10 மணிக்கு திருச்சி விமான நிலையம் வந்தடயும் பிரதமர் மோடி, காரில் பயணித்து பாரதிதாசன் பல்கலைக்கழகம் செல்கிறார். அங்கு ஆளுநர் ஆர்.என்.ரவி தலைமையில் காலை 10.30 மணிக்கு தொடங்கும் பட்டமளிப்பு விழாவில் கலந்து கொள்கிறார். விழாவில் 33 பேருக்கு பட்டங்களை வழங்கி பிரதமர் மோடி சிறப்புரையாற்றுகிறார். தொடர்ந்து கார் மூலம் 12 மணிக்கு திருச்சி விமான நிலையம் வந்து அங்கு கட்டப்பட்டுள்ள புதிய முனையத்தை பார்வையிட்டு, விமான நிலைய அதிகாரிகளுடன் கலந்துரையாடுகிறார்.
= liveblogState.currentOffset ? 'uk-card uk-card-default uk-card-body uk-padding-small _box_shadow hidden' : 'uk-card uk-card-default uk-card-body uk-padding-small _box_shadow'">
பிரதமருக்கு ஆளுநர் நன்றி.. பிரதமர் மோடி தமிழகம் வருவதையொட்டி அவருக்கு ஆளுநர் ரவி நன்றி தெரிவித்துள்ளார். இதுதொடர்பான டிவிட்டர் பதிவில், “ புண்ணிய பூமியான திருச்சிராப்பள்ளியில் பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் 38வது பட்டமளிப்பு விழாவில் பிரதமர் கலந்து கொள்கிறார். அவர் விமானம், ரயில், சாலைகள், எண்ணெய் மற்றும் எரிவாயு, துறைமுகம் போன்ற பல முடிக்கப்பட்ட உள்கட்டமைப்பு திட்டங்களைத் திறந்து வைக்கிறார். தமிழக மக்கள் மீது உங்களின் அபரிமிதமான அன்புக்கும் பாசத்திற்கும், மாநிலத்தின் நலன் மற்றும் அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சிக்கான உங்கள் அர்ப்பணிப்புக்கும் நன்றி” என குறிப்பிட்டுள்ளார்.