கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனபள்ளி அருகே குரியனப்பள்ளி கிராமத்தை சேர்ந்த திம்மப்பா - பத்மம்மா தம்பதியின் மகன் ரமேஷ் 33, இவர் தனது பள்ளி, கல்லூரி படிப்பை முடித்து போலாந்து நாட்டில் தனது மேற்படிப்பை படிக்க சென்றார். பின்னர் தனது மேற்படிப்பை முடித்த ரமேஷ் போலாந்தில் USA VILLANOVA யூனிவர்சிட்டி என்ற பல்கலைக் கழகத்தில் ஆராய்ச்சித் துறையில் பணியில் சேர்ந்து பணியாற்றி வருகிறார்.
இந்த நிலையில் போலாந்து நாட்டில் கல்லூரியில் படிக்கும் போது அதே நாட்டை சேர்ந்த ஆடேம் மல்கோர்த்த, டிபிகா என்பவரின் மகள் எவலினா மேத்ரோ (30) என்ற பெண்ணுடன் ரமேஷ்க்கு நட்பு ஏற்பட்டது. தொடர்ந்து நாளடைவில் இருவருக்கமான நட்பு காதல் மலர்ந்தது. இதனையடுத்து கடந்த 3 ஆண்டுகளாக இருவரும் காதலித்து வந்துள்ளனர். இந்நிலையில், இவர்களுடைய காதலை இருவிட்டு பெற்றோரிடம் கூறியுள்ளனர். ஆனால் இதை கேட்ட ரமேஷின் பெற்றோர் முதலில் அதிர்ச்சி அடைந்தனர். அதன் பிறகு திருமணம் செய்வது குறித்து ஆலோசனை செய்து வந்துள்ளனர். இதனை தொடர்ந்து இரு வீட்டாரும் யோசித்த நிலையில் பின்னர் ரமேஷின் பெற்றோர் திருமணத்திற்கு சம்மதம் தெரிவித்தனர்.
இதனைத் தொடர்ந்து திருமணம் செய்து கொள்வதற்காக முடிவெடுத்து, கடந்த மாதம் இருவரும் இந்தியா வந்துள்ளனர். தொடர்ந்து இருவருக்கும் திருமணம் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. ஆனால் பெண்ணின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் திருமணத்திற்கு வர முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. அதனால் திருமணத்தை தமிழ் கலாச்சாரத்தின்படி நடத்த ரமேஷ் தெரிவித்துள்ளார். இந்நிலையில், கடந்த ஞாயிறு அன்று தமிழ் கலாச்சாரத்தின் படி, நிச்சியதர்த்தம் நடைபெற்று, உறவினர்களுக்கு திருமண அழைப்பிதழ் வைத்து, பாரம்பரிய முறைப்படி விமரிசையாக திருமணம் நடைபெற்றது.
மேலும்வெளிநாட்டு பெண்ணுடன் கிருஷ்ணகிரி இளைஞர் தமிழ் கலாச்சார முறைப்படி ஊற்றார், உறவினர் முன்னிலையில் திருமணம் செய்து கொண்டது மிகுந்த நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது. இந்த நிகழ்ச்சியில் உறவினர் மற்றும் கிராம மக்கள் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர்.