தருமபுரியில் தனியார் கல்லூரி கிருஷ்ண ஜெயந்தி கொண்டாட்டத்தின் போது கிருஷ்ணர் பாடலுக்கு பதிலாக மாரியம்மன் பாடல் போட்டதால் அருள் வந்து பரவசத்தில் ஆடிய மாணவிகள்.
கிருஷ்ண ஜெயந்தி பூஜையின் போது அருளாடி மருளாடிய மாணவிகள்
தருமபுரி பாரதிபுரத்தில் இயங்கி வரும் கிருஷ்ணா பாராமெடிக்கல் கல்லூரி சார்பில் இன்று கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு வெகு சிறப்பாக கிருஷ்ண ஜெயந்தி விழா கொண்டாடப்பட்டது.
இந்த விழாவில் கல்லூரி மாணவ,மாணவிகள் ஆசிரியர்கள் கலந்து கொண்டு கல்லூரியில் பொங்கல் வைத்து கிருஷ்ண ஜெயந்தி விழாவை சிறப்பாக கொண்டாடினர். கல்லூரி மாணவிகள் தாங்கள் வைத்த பொங்கலை நடுவில் வைத்து சுற்றி அம்மன் பாடல்கள் கும்மி பாடல்களுக்கு உற்சாகமாக நடனம் ஆடினர்.
கிருஷ்ணருக்கு பச்சை பந்தலித்து 48 வகையான அறுசுவை உணவுகள் படையல்
அதனை தொடர்ந்து கிருஷ்ணர் சிலையை ஊர்வலமாக எடுத்து வந்து பச்சை பந்தலிட்டு கல்லூரி மாணவ மாணவிகள் ராதை வேடமிட்டு கிருஷ்ணரை கோபிகா ஸ்ரீகள் போல வட்டமிட்டு ஆடி பாடி மகிழ்ந்தனர். பின்னர் கிருஷ்ணர் சிலை வைத்து முறுக்கு, சீடை, லட்டு, ரவை உருண்டை, எள்ளுருண்டை, கள்ள உருண்டை, அதிரசம், இனிப்பு வடைகள், மற்றும் பழங்களான ஆப்பிள், மாதுளை, கொய்யா, திராட்சை, பேரிக்காய், சாத்துக்குடி, உள்ளிட்ட 48 வகையான இனிப்பு, காரம், புளிப்பு, துவர்ப்பு, கசப்பு என அறுசுவைகளில் பலகாரங்கள் கிருஷ்ணருக்கு படையலிட்டு வழிபட்டனர்.
மாணவிகள் ஆடிய கோலாட்டம் கும்மியாட்டம்
இதனை தொடர்ந்து மாணவர்களின் கோலாட்டம், கும்மியாட்டம், கரகாட்டம், சிலம்பாட்டம், போன்றவை நடைபெற்றது. தொடர்ந்து மாணவிகளின் கலை நிகழ்ச்சியும் வெகுவிமர்சியாக நடைபெற்றது. மேலும் மாணவ மாணவிகளுக்கு உரியடி போட்டி நடைபெற்றது.
கிருஷ்ணர் பாடலுக்கு பதிலாக திடீரென ஒழித்த மாரியம்மன் பாடல்
அதனைதொரடந்து கிருஷ்ணருக்கு பூஜைகள் நடைபெற்று கொண்டிருக்கும் போது கிருஷ்ணர் பாடல் பாடிய நிலையில் திடீரென மாரியம்மன் பாடல் பாடியதால் அங்கு சாமி கும்பிட்டு கொண்டிருந்த ஒரு சில மாணவிகளுக்கு அருள் வந்து பரவசத்தில் அருள் ஆட்டம் ஆடிய சம்பவம் அனைவரையும் மெய்சிலிர்க்க வைத்தது.
உடனே அங்கு இருந்த மாணவிகள் அருள் வந்து ஆடிய மாணவிகளை உடன் இருந்த மாணவிகள் அருள் ஆடிய மாணவிகளை பிடித்து ஆசுவாசப்படுத்தினர். அங்கிருந்த ஆசிரியர்களுக்கும் மாணவர்களுக்கும் மாணவிகளுக்கும் இந்த அருள் வந்து ஆடியோ சம்பவம் பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.
ராதையாக வேடம் அணிந்து கும்மி அடித்து ஆடிய கல்லூரி மாணவிகள்
கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு தனியார் கல்லூரி மாணவ மாணவிகள் ராதை கிருஷ்ணர் வேடம் அணிந்து இந்த கிருஷ்ண ஜெயந்தி விழாவை மிகவும் சிறப்பாக கொண்டாடினர் எதிர்பாராத விதமாக அம்மன் பாடலை ஒளிபரப்பப்பட்டதால் கிருஷ்ண ஜெயந்தி விழா மாரியம்மன் விழாவாக மாறி அங்கே இருந்தவர்களை மிகவும் பக்தி பரவசத்துடன் ஆச்சரியத்துடனும் பார்க்க வைத்தது.
இந்நிகழ்சியில் கலை நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு கல்லூரியின் முதல்வர் மற்றும் தாளாளர் நினைவு பரிசினை வழங்கினர். இந்த நினைவுப் பரிசு வழங்கும் போது கல்லூரி பேராசிரியர்கள் மற்றும் கல்லூரி மாணவ மாணவிகள், பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டு கிருஷ்ண ஜெயந்தி விழாவை சிறப்பித்தனர்.